ஆப்நகரம்

Rishaba Rasi 2019: அழகான ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு நிம்மதியான வருடமா?

அழகான ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆங்கிலப் புத்தாண்டு உறவினர்களின் சுயநலத்தை சுட்டிக்காடுவதாக அமையும்.

Samayam Tamil 22 Dec 2018, 5:09 pm
அழகான ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆங்கிலப் புத்தாண்டு உறவினர்களின் சுயநலத்தை சுட்டிக்காடுவதாக அமையும்.
Samayam Tamil rishaba


நிகழும் விளம்பி வருடம், மார்கழி மாதம் 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை, நள்ளிரவு 12 மணிக்கு குரு பகவானின் ஆதிக்கத்தில் ஆங்கிலப் புத்தாண்டு (2019) பிறக்கிறது. எண் கணித ஜோதிடப்படி 2019ன் கூட்டுத்தொகை (2+0+1+9=12,1+2=3). குரு பகவானின் ஆதிக்கம் என்பதால், இந்த ஆண்டு பணப்புழக்கம் அதிகரிக்கும். அந்த வகையில், ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த புது வருடம் எப்படி இருக்கப் போகிறது என்று இங்கு பார்ப்போம்.

Also Read This: New Year Rasi Palan 2019: இந்த புத்தாண்டு இந்த ராசிக்காரர்களுக்கு சும்மா ‘டாப் டக்கரா’ இருக்கும்!

Also Read This: 2019ம் ஆண்டின் சுப முஹூர்த்த நாட்கள்!

Also Read This: அதிர்ஷ்டத்தை கொடுக்கும் 2019: இந்த 3 ராசிக்காரர்கள் மட்டும் லக்கி தான் போங்க!

Also Read This: Mesha Rasi 2019: ஆட்டம் போடும் மேஷ ராசிக்காரர்களுக்கு பணத்துக்கு திண்டாட்டம் வருமா?

எப்போதும் தன்னை அழகாக காட்டிக் கொள்ளும் ரிஷப ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு, சிறந்த ஆண்டாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

புத்திர பாக்கியம் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வீடு, மனை, சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. உடல் நலத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மறையும். பதவி உயர்வுகள் கிடைக்கும்.

வெளியூர், வெளிநாட்டு வியாபாரங்களில் லாபம் ஏற்படும். பணியிடத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றங்கள் உண்டாகும். அரசியலில் இருப்பவர்களுக்கு ஏற்ற, இறக்கமான பலன்களே ஏற்படும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். கலைத்தொழிலில் உள்ளவர்களுக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் நிலை ஏற்படும். புது வாகனங்கள் வாங்குவீர்கள். பெண்களுக்கு உடல் நலம் நன்றாக இருக்கும் .

உங்களைப் பற்றிய வீண் வதந்திகள் பரவும். கோபம் அதிகரிக்கும். கடந்த கால ஏமாற்றத்தை நினைத்து வருத்தப்படுவீர்கள். மொத்தத்தில் இந்த வருடம் அக்கம் பக்கத்தினரின் சுயநலப் போக்கை உணர்த்துவதுடன், சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவதாக இருக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்