ஆப்நகரம்

சூரியன் நின்ற பலன்: சூரியன் ஜாதகத்தில் ஒவ்வொரு வீட்டில் அமர்ந்திருக்கக் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?

Sun Position in House: ஜோதிடத்தில் நவகிரகங்களும், ராசிகளும் மிக முக்கியமானதக பார்க்கப்படுகின்றது. கிரகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் அமைந்திருப்பதை வைத்து அவருக்கான பலன்கள் கணிக்கப்படுகின்றன.

Samayam Tamil 21 Feb 2020, 6:14 pm
நவ கிரகங்களுக்கு தலைவனாக நடுவில் இருப்பவர் சூரிய பகவான். சூரியன் ஜாதகத்தில் அமைந்துள்ள வீட்டை (ஸ்தானம்) பொறுத்து அதற்கான பலனை தருவார். சூரியன் அமைந்துள்ள வீடும் அதற்கான பலன்களை இங்கு பார்ப்போம்.
Samayam Tamil sun position


லக்கினத்தில் சூரியன் (முதல் வீட்டில் இருந்தால்)
லக்கினத்தில் சூரியன் அமையப் பெற்ற ஜாதகதாரர் சுறுசுறுப்பாக இருப்பார். செந்நிற மேனியுடன், அவரின் தேகம் எப்போதும் சூடாக, உஷ்ணமாக இருக்கக் கூடும்.

இரண்டாம் வீட்டில் சூரியன் இருக்க, சுமாரான கல்வி இருக்கும். ஆனால் கடின உழைப்பாளியாக இருந்து பொருள் சேர்ப்பார்.

மூன்றாம் வீட்டில் சூரியன் அமையப் பெற்றிருந்தால் ஜாதகர் எதையும் எளிதில் கடந்து செல்லக் கூடிய டேக் இட் ஈஸி அல்லது எதையும் கண்டுகொள்ளாத அலட்டிக் கொள்ளாதவராக இருப்பார். எதிரிகளிடமே என்ன சேதி என கேட்கும் அளவிற்கு திறமை உடையவாக இருப்பார்.

லக்கினமும் அதன் குணங்கள் மற்றும் சுப, அசுப கிரகங்களின் பலன்கள்

நான்கில் சூரியன் அமைந்திருந்தால் தாய்க்கு நல்லதல்ல. ஜாதக தாரர் உறவினர்களுடன் பகைமை பாராட்டுவார். அரசியல் செல்வாக்கு சிறப்பாக இருக்கும்.

ஐந்தில் சூரியன் இருக்க, குடும்பம் அளவாக இருக்கக் கூடும். வாழ்க்கை சிறப்பாகவும், வளமாகவும் இருக்கும். தந்தை வழி சொத்துக்கள் அமையாது. இருப்பினும் சொந்த முயற்சியால் சொத்துக்களை அடைவார்.

ஆறாம் வீட்டில் சூரியன் இருக்க பகைவர்கள் அருகில் கூட வரமாட்டார்கள். ஜாதகரின் குடும்பமும் பெரியதாக இருக்கும்.

ஏழாம் இடத்தில் சூரியன் அமையப்பெற்றவர் நோய்கள், வம்பு, வழக்குகள், கடன், உள்ளிட்ட விவகாரங்கள் இல்லாதவராகவும், பாராட்டுக்களை அதிகம் பெறக்கூடியவராக, மனைவிக்கு அடங்கிப் போகக் கூடியவராக இருப்பார். இருப்பினும் எதையும் சரிவர செய்து முடிக்காதவராக இருப்பார்.

ராகு கேது பெயர்ச்சி 2020 எப்போது வருகிறது?- இந்த நான்கு ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது!

எட்டில் சூரியன் இருக்கப் பெற்றவரின் ஆயுள் நீண்டதாக இருக்கும். எதற்கும், எவருக்கும் பணிந்து போகாதவராக, இரக்கமற்ற குணத்தை கொண்டவராக இருப்பார். சிலருக்கு கண்களில் குறைபாடு இருக்கும்.

ஒன்பதாம் வீட்டில் சூரியன் இருந்தால் தந்தைக்கு இடையூறு ஏற்படக்கூடும். அவருக்கு தீய வழியில் பொருட்கள் சேரும். உறவினர்களுடன் விரோதம் ஏற்படலாம். சுய முயற்சியால் செல்வம் உண்டாகலாம்.

சனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

பத்தாம் ஸ்தானத்தில் சூரியன் அமைந்திருந்தால், அவருக்கு நன்மைகள் உண்டாகும். ஜாதகருக்கு சொந்த தொழில் அல்லது வேலை இருக்கும். அரசு சார்ந்த அல்லது அரசியலில் தொடர்பு இருக்கக் கூடும். உடல் நலம் சீராக இருக்கும். தன் சுய அறிவால் முன்னேற்றம் அடைவார்.

பதினோராம் இடத்தில் சூரியன் இருக்க, ஜாதகருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். பலரை வைத்து வேலை வாங்கும் திறனுடன் இருப்பார். நண்பர்கள், உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.

பன்னிரண்டாம் இடத்தில் சூரியன் அமையப்பெற்ற ஜாதகருக்கு தந்தை வகையில் சுமூக உறவு இருக்காது. ஜாதகர் பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவராக ஊர் சுற்றியாக இருப்பார். இவருக்கு அதிக செலவுகள் ஏற்படக்கூடும். சந்ததி குறைப்பாடு இருக்கும். உழைத்து முன்னேறக் கூடியவர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்