ஆப்நகரம்

இன்றைய பஞ்சாங்கம் 10 ஏப்ரல் 2020 - இன்று புனித வெள்ளி

புனித வெள்ளி: கிறிஸ்துவர்கள் கடைப்பிடிக்கும் மிக முக்கிய வழிபாட்டு நாளாக இன்று உள்ளது. நல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஷ்டமம், இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம்.

Samayam Tamil 10 Apr 2020, 7:30 am
10 ஏப்ரல் 2020 வியாழக்கிழமை பங்குனி 28
Samayam Tamil good friday
good friday


திதி :- இன்று திரிதியை
யோகம் : சித்த
நட்சத்திரம் :இன்று விசாகம் நட்சத்திரம்
சந்திராஷ்டம ராசி : அஸ்வினி

இன்றைய நல்ல நேரம்காலை :- 10:30 - 12.00
இராகு காலம் :- மதியம் 01:30 - 03:00
இரவு - 10:30 - 12:00
எமகண்டம் :-காலை 06:00 - 07:30
இரவு 10.30 - 12.00 மணி வரை
சூரணம் : 3:00 - 4.30
குளிகை காலம் :- காலை 09:00 - 10:30
இரவு 1.30 - 3.00
சூலம் - தெற்கு
பரிகாரம் : தைலம்
(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)

ஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரம் :- காலை 10:00 - 11:00
(குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாராபலன் பார்த்துச் செய்யவும்)

இன்றைய நாள் சிறப்பு:
இன்றைய தினம் பெரிய வெள்ளி அல்லது புனித வெள்ளி அல்லது ஆண்டவனின் திருப்பாடுகளின் வெள்ளி என கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது இயேசு கிறிஸ்து தான் அன்பவித்த துன்பங்களையும், அவரை சிலுவையில் ஏற்றியதை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் கிறிஸ்துவர்கள் ஆண்டுதோறும் வழிபடக் கூடிய மிக முக்கிய நாளாக கடைப்பிடிக்கின்றனர்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் விதமாக உலகம் முழ்வதும் உள்ள கிறிஸ்துவர்கள் வழிபாடு செய்கின்றனர்.

இதை செய்யாவிட்டால் கொரோனாவை விட மோசமான நிலை ஏற்படும் எச்சரிக்கை வீடியோவை வெளியிட்ட இளம் ஜோதிடர் அபிக்யா ஆனந்த்
ராசி பலன் சுருக்கம் :
மேஷம் - கீர்த்தி
ரிஷபம் - துணிச்சல்
மிதுனம் - உதவி
கடகம் - பயம்

சிம்மம் - வெற்றி
கன்னி - சிக்கல்
துலாம் - நன்மை
விருச்சிகம் - சோதனை

சார்வரி ஆண்டு 2020 பொது பலன்கள் : மழை, விவசாயம், தொழில் எப்படி இருக்கும்

தனுசு - கவனம்
மகரம் - லாபம்
கும்பம் - நலம்
மீனம் - சாந்தம்

குறிப்பு:
(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)

அடுத்த செய்தி

டிரெண்டிங்