ஆப்நகரம்

சந்திர கிரகணம் எப்போது? உங்கள் பகுதியில் பார்க்க முடியுமா? சரியான நேரம் இதோ...

சதிர கிரகணம் இன்று இரவு 10.37 மணிக்கு நடக்க உள்ளது. சந்திர கிரகணம் என்றால் என்ன? எங்கெல்லாம் பார்க்க முடியும் என்பதை விரிவாக பார்ப்போம்...

Samayam Tamil 10 Jan 2020, 7:32 pm
வானில் நிகழும் மிக அற்புத நிகழ்வுகளில் கிரகண நிகழ்வும் ஒன்று. இந்த 2020ஆம் ஆண்டில் முதல் கிரகணம், சந்திர கிரகணம் இன்று இரவு தோன்ற உள்ளது. அதன் முழு விபரத்தைப் பார்ப்போம்...
Samayam Tamil சந்திர கிரகணம்
penumbral lunar eclipse


சந்திர கிரகணம் :
சூரியனுக்கும், சந்திரனுக்கு இடையே பூமி ஒரே நேர் கோட்டில் வரும் நிகழ்விற்கு சந்திர கிரகணம் என்று பெயர்.

சந்திர கிரகணத்தில் முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், தெளிவற்ற சந்திர கிரகணம் (பெனும்ப்ரல் லூனார் எக்லிப்ஸ்) என மூன்று வகைகள் உள்ளன.

இன்று தெளிவற்ற சந்திர கிரகண நிகழ்வு நடக்க உள்ளது.

சந்திர கிரகணத்தால் உங்கள் ராசிக்கு இப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கலாம் ஜாக்கிரதை!
எத்தனை மணிக்கு?
இந்த நிகழ்வு இரவு (ஜனவரி 10) 10.37 மணிக்கு தொடங்கி ஜனவரி 11 அதிகாலை 2.42 மணி வரை நீடிக்க உள்ளது.

இந்த நிகழ்வின் போது மற்ற பெளர்ணமி நாட்களில் சந்திரன் ஜொலிப்பது போல் இல்லாமல், சற்று மங்கலாக நிலா தெரியும். இந்த நிகழ்வின் போது முழுவதுமாக நிலா மறைக்கப்படாமல், ஒரு பகுதி மட்டும் மறைக்கப்படும் அதுவும் ஒரு புகை மறைப்பது போல தெரியும்.

Pariharam Rasi: சந்திர கிரகணம் எந்த ராசி நட்சத்தினர் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் தெரியுமா?

எங்கெல்லாம் பார்க்கலாம்?
தெளிவற்ற கிரகணமாக தெரியும் இந்த சந்திர கிரகணத்திற்கு ஓநாய் சந்திர கிரகணம் என பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகணத்தை இந்தியா முழுவதும் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகணகத்தை பயமின்றி வெறும் கண்களால் பார்க்கலாம்.

Chandra Grahan Food Tips: சந்திர கிரகணம் 2020 கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக செய்யக் கூடாததும், செய்ய வேண்டியதும் என்ன?

இந்தியா மட்டுமல்லாமல் ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளிலும், ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள். , மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இந்த சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்