ஆப்நகரம்

அஸ்தங்கமாகும் குரு: உங்கள் ராசிக்கு ஏற்படப்போகும் திடீர் திருப்புமுனை

குரு பகவான் பிப்ரவரி 24ம் தேதி அஸ்தங்கம் நிலைக்கு செல்ல உள்ளார். ஜோதிடத்தில் குரு பகவான் அஸ்தங்கம் நிலைக்கு செல்வது அசுபமானதாக கருதப்பட்டாலும், சில ராசிகளுக்கு அது அற்புத பலன்களும், திடீர் திருப்பங்களைத் தரக்கூடியதாகவும், சிலருக்கு அசுப பலன்கள், எதிர்பாராத ஏமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Samayam Tamil 22 Feb 2022, 2:17 pm
குரு பகவான் பிப்ரவரி 24ம் தேதி அஸ்தங்கம் நிலைக்கு செல்ல உள்ளார். ஜோதிடத்தில் குரு பகவான் அஸ்தங்கம் நிலைக்கு செல்வது அசுபமானதாக கருதப்பட்டாலும், சில ராசிகளுக்கு அது அற்புத பலன்களும், திடீர் திருப்பங்களைத் தரக்கூடியதாகவும், சிலருக்கு அசுப பலன்கள், எதிர்பாராத ஏமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
Samayam Tamil guru combust impact effects what are the effects will be on your zodiac sign
அஸ்தங்கமாகும் குரு: உங்கள் ராசிக்கு ஏற்படப்போகும் திடீர் திருப்புமுனை


​குரு அஸ்தங்கம் என்றால் என்ன? எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும்.

சூரியனுக்கு 14 டிகிரிக்குள் புதன் வரும் போது அஸ்தங்கம் அடையும். அதே போல சூரியனுக்கு 11 டிகிரிக்குள் குரு இணைந்தால் அஸ்தங்கம் அடையும். சூரியனும் புதனும் இணைவு பெரும் பொழுது அஸ்தமனத்தை அடைந்தாலும் பெரும் பாதிப்பைத் தருவதில்லை. ஆனால் முழு சுபர் அஸ்தமனத்தை அடைந்தால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவராக இருப்பார்.

ஜோதிடத்தில் தேவகுரு, பிருஹஸ்பதி என அழைக்கப்படும் குரு பகவான் திருமணம், உள்ளிட்ட சுப காரியங்கள், குழந்தைகள், செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் அறிவு போன்றவற்றின் காரணியாக குரு கருதப்படுகிறார். குரு அஸ்தங்கம் நிலையில் போது சுப காரியங்கள் நடைபெறுவதில் தடங்கல் ஏற்படும்.

ஒருவரின் ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால் அவர் ஒழுக்க குணங்களுடன் காணப்படுவதுடன் அவன் அறிவாளியாகவும் இருப்பான். அவரின் நிதி நிலை நன்றாக உள்ளது. பதவி, கௌரவம், பதவி உயர்வு, சுப காரியம், பயணம் போன்றவற்றுக்குக் காரணகர்த்தாவாக இருப்பவர் குரு என்பதால் அதுபோன்ற விஷயங்களில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

​குரு அஸ்தங்கத்தால் ஏற்படும் பாதக பலன்கள்:

24 பிப்ரவரி 2022ல் வியாழன் அன்று குரு பகவான் அஸ்தங்கம் நிலைக்கு செல்கிறார். இதனால் எல்லா வேலைகளிலும் தாமதம் ஏற்படும். குருபகவான் கும்ப ராசியில் இருப்பதன் மூலம் யாருக்கும் கெட்ட பலன்களைத் தராமல், சமபலத்துடன் இருப்பார். நீங்கள் கடின உழைப்புடன் வேலை செய்தாலும், அது இழுபறியான நிலையிலேயே இருக்கும். பண வரவில் ஸ்திரத்தன்மை ஏற்படும். திருமணம், பதவி உயர்வு தாமதமாகும். குரு அஸ்தமத்தால் கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளுக்கு பாதகமான பலன்கள் உண்டாகும்.

அதுவே குரு பலவீனமாக இருக்கும் போது அந்த நபருக்கு அதிர்ஷ்டங்கள் அவரை ஆதரிக்காது. ஒழுக்கம் கெட்டு, அறிவிலியாக இருப்பார். சமூகத்தில் அவருக்கு என மரியாதை இல்லாதவராகத் திகழ்வார்.

மேலும் தன் குடும்பத்திலும், திருமண வாழ்க்கையிலும் சண்டை, சச்சரவுகள் நிறைந்ததாக இருக்கும்.

இப்படி கடவுள் வழிபாடு செய்தால் பலன் கிடைக்காது! - வழிபாடு செய்ய பயன்படும் பொருட்கள் மகத்துவம்


குரு அஸ்தங்கம் கெடுபலன் குறைக்கும் பரிகாரம்

மஞ்சள் நிற வஸ்திரத்தை அணிவித்து குரு பகவானை வழிபடுங்கள்.

குருவையும், ஆசிரியர்கள், பெரியோரை மதித்து நடக்க வேண்டும்.

மருத்துவமனையில் நோயாளிகளுக்குச் சேவை செய்யுங்கள்.

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள்.


​மேஷம்

மேஷ ராசியினருக்கு குருவின் அஸ்தங்கம் பலன் சாதகமற்றதாக இருக்கும். பணியிடத்தில் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகலாம்.

செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மனைவியுடன் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கவும். மன உளைச்சல் காரணமாக நீங்கள் வருத்தமாக இருக்கலாம். வேலையில் தடங்கல் ஏற்படும். உங்கள் திட்டங்கள் நிறைவேற கால தாமதம் ஏற்படலாம்.

வார ராசிபலன் 21 முதல் 27 பிப்ரவரி 2022 - மேஷம் ரிஷபம் மிதுனம் கடக வார பலன்

​ரிஷபம்

ரிஷபம் ராசியினருக்கு திடீர் பண லாபம் கிடைக்கும். பயணத்தின் மூலம் உங்களுக்கு அனுகூல பலன் கிடைப்பதாக இருக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மேலும் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் நீங்கள் நல்ல செய்திகளைக் பெற வாய்ப்புள்ளது.

சனியுடன் சேரும் சுக்கிரன் : மோசமான சேர்க்கையில் அற்புத பலனைப் பெற உள்ள ராசிகள்

​மிதுனம்

மிதுன ராசிக்கு நிதி நிலை மேம்படும். உங்களின் பணவரவு மற்றும் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிறியதாக இருந்தாலும் முன்னேற்றம் என்று ஏதேனும் உண்டாகும்,

குடும்ப வாழ்க்கையில் எல்லாவிதமான குறைபாடுகளையும் காணத் தொடங்குவீர்கள் என்பதால், தேவையில்லாமல் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.

சனி பரிகாரம்: ஏழரை சனி பாதிப்பை குறைக்கும் எளிய பரிகாரங்கள்

​கடகம்

நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் மீது உங்களுக்கு சந்தேகம் வரத் தொடங்கும். இந்த நேரத்தில் நீங்கள் நினைத்த விஷயம் நினைத்தபடி நடப்பது கடினம். செயல்களில் காலதாமதம் ஏற்படலாம். வியாபாரத்தில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்.

மகரத்தில் செவ்வாய் பெயர்ச்சி : பணம் கொட்டப்போகும் ராசி

​சிம்மம்

சிம்ம ராசிக்கு சுப காரியங்கள் நடக்கக்கூடிய அற்புத காலமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு வேலை, பதவி, பணம் ஆகியவற்றில் நினைக்காத அளவு உயர்வும், அற்புத பலன்களும் கிடைக்கும்.

அதே சமயம் குடும்பத்தில் சில சண்டை, சச்சரவுகள் சந்திக்க நேரிடும். எதிரிகள் உங்களை காயப்படுத்த முயற்சிப்பார்கள். கோபத்தைத் தவிர்க்கவும்.

​கன்னி ராசி

கன்னி ராசிக்கு பணியிடத்தில் பணிச்சுமை இருக்கும், அதனால் மனம் சோர்வுடன் இருக்கும். உத்தியோகத்தில் மாற்றம் கூட ஏற்படலாம். வியாபாரத்திலும் பெரிய லாபம் ஏற்படாவிட்டாலும், வாழ்வில் நல்ல அனுபவங்களைப் பெறுவீர்கள்.

சனி, செவ்வாயுடன் இணையும் சுக்கிரன்: இந்த மாதத்தில் உங்கள் தலையெழுத்தே மாறப்போகிறது?

​துலாம் ராசி

குருவின் அஸ்தமத்தால் உங்கள் ராசிக்கு சுகபோகங்கள் குறையும். வீடு, நிலம் வாங்கும் திட்டத்தில் சில தடைகள் ஏற்படும். இந்த நேரத்தில் நீங்கள் எந்த ஒரு முக்கியமான முடிவையும் எடுப்பதைத் தவிர்க்கவும், முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.

​விருச்சிக ராசி

பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். அதிர்ஷ்டத்தில் எதிர்மறையான விளைவு ஏற்படும். இந்த நேரத்தில் நீங்கள் சேமித்த செல்வமும் குறைய வாய்ப்புள்ளது. எதிலும் கவனமாக நடந்து கொள்ளவும்.

​தனுசு ராசி

தனுசு ராசியினர் மீதான அழுத்தம் அதிக்கரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சை மற்றவர்கள் கேட்டாலும், கவனிக்காமலும் இருப்பார்கள். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படும்.

சிலர் தங்களுடைய வேலையை விட்டு நிற்கக்கூடிய வாய்ப்பும் உண்டு. அதிக செலவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், நீங்கள் திட்டமிட்ட விஷயங்கள் பணமில்லாமல் செய்யமுடியாமல் போகலாம். உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

​மகர ராசி

சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைப்பது கடினம். நீங்கள் தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தால் அதில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைப்பது கடினம். பயணத்தின் போது பணம் அல்லது ஏதேனும் ஒரு மதிப்புமிக்க பொருட்களை தொலைக்க வாய்ப்புள்ளது என்பதால் கவனம் தேவை.

​கும்பம்

கும்ப ராசியினர் இந்த காலகட்டத்தில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது. அதனால் முதலீடு அல்லது வேலை மாறுதல் போன்ற விஷயங்களில் தகுந்த நபர்கள், வல்லுநர்களிடம் ஆலோசனைக் கேட்பது நல்லது.

சிலர் இந்த சூழலில் அவசரத்தால் தோல்வியை சந்திக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படலாம். தேவையற்ற செலவுகள் இந்த நேரத்தில் ஏற்படும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியாமல் போகலாம்.

​மீனம்

பணிச்சுமை அதிகமாக இருக்கும். வியாபாரம், தொழிலில் நீங்கள் பெரிதாக ஏற்றம் இருக்காது. உடல் நலனில் கவனம் செலுத்துவது அவசியம். சிலருக்கு மன உளைச்சல்கள் ஏற்படும். ஆன்மிகம், இறை வழிபாட்டில் உங்கள் மனதை மாற்றுங்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்