ஆப்நகரம்

துலாம் ராசியில் புதன் சஞ்சாரம் : தீபாவளிக்கு பின் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்

அக்டோபர் 26ம் தேதி, புதன் கிழமை, புதன் பகவான் துலாம் ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இதனால் சில ராசியினர் உங்கள் செயல்களில், ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

Samayam Tamil 20 Oct 2022, 12:28 pm
கன்னி ராசியில் ஆட்சி, உச்சம் பெற்றிருந்த புதன் பகவாவான், அக்டோபர் 26ம் தேதி துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இவர் நவம்பர் 12ம் தேதி வரை துலாம் ராசியில் சஞ்சரிப்பார்.
Samayam Tamil mercury transit in libra these zodiac sign may get negative impact by budhan gochar in thulam
துலாம் ராசியில் புதன் சஞ்சாரம் : தீபாவளிக்கு பின் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்

ஏற்கனவே சூரியன், ராசி அதிபதி சுக்கிரன் துலாமில் சஞ்சரிக்கும் நிலையில், அவர்களுடன் புதன் சஞ்சரிப்பதால், இந்த கிரக கூட்டணி சில ராசியினருக்கு எதிமறையான பலன்கள் தரக்கூடும். எந்தெந்த ராசிக்காரர்கள், எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.


​ரிஷபம் மீது புதன் பெயர்ச்சியின் தாக்கம்

ரிஷப ராசிக்கு 6ம் வீடான நோய், எதிரி ஸ்தானத்தில் புதன் பகவானின் சஞ்சாரம் நிகழ்கிறது. இதனால் உங்களுக்கு பொருளாதார நிலை சற்று கடினமானதாக இருக்கும். உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பட்ஜெட் போட்டு செலவு செய்யவும். சிலருக்கு தோல், தொண்டை தொடர்பான பிரச்னைகள் ஏற்படும்.

உங்களின் எல்லா செயல்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் எதிரிகள் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்கவும்.

Characteristics of letter G: உங்க பெயரோட முதல் எழுத்து G என்றால், இதை முதலில் படியுங்கள்..!

​விருச்சிக ராசியில் புதன் பெயர்ச்சியின் தாக்கம்

விருச்சிக ராசிக்கு 12ம் வீட்டில் புதன் பகவானின் சஞ்சாரம் நிகழ்கிறது. விரய ஸ்தானத்தில் புதன் இருப்பதால் உங்களின் நிதி சார்ந்த விஷயங்கள் சாதகமற்றதாக இருக்கும். உங்கள் செலவுகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். பணப் பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் எதிரிகளிடமிருந்து கவனமாக இருக்கவும்.

Venus In Libra: தீபாவளிக்கு இந்த ராசிக்காரர்களின் காட்டில் பண மழை தான்..!

​கும்பத்தில் புதன் பெயர்ச்சியின் தாக்கம்

கும்ப ராசியினர் தற்போதைக்கு வழக்கத்தை விட அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலும், உங்கள் கடின உழைப்பின் முடிவுகளில் திருப்தி அடைய முடியாத நிலையும் இருக்கும். மேலும், இந்த காலகட்டத்தில் உங்கள் செலவுகளும் மிக அதிகமாக இருக்கும். உயரும் செலவுகள் உங்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கலாம். உடன்பிறப்புகளுடனான உறவும் பாதிக்கப்படலாம். எந்த விஷயத்திலும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

​மீன ராசியில் புதன் பெயர்ச்சியின் தாக்கம்

மீன ராசியினர் தங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் உங்களுக்கு கண்கள் தொடர்பான சில பிரச்சனைகள் வரலாம். அலர்ஜி தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் என்பதால், தற்போதைக்கு அதிக தூசி நிறைந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உடல்நிலை சற்று கவனமாக இருக்கவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்