ஆப்நகரம்

தனுசு ராசியில் புதன் பெயர்ச்சி (டிசம்பர் 3): 5 ராசிக்கு வருமானம் உயரும், பணிச்சுமை குறையும்

ஒருவரின் திறமை, பேச்சாற்றல், எத்தனை தோல்விகள் வந்தாலும் அதிலிருந்து அனுபவங்களைக் கற்றுக் கொண்டு, வெற்றியைப் பெறும் புத்திசாலித்தனம் ஆகியவற்றைத் தரக்கூடியவர் புதன் பகவான்.

Authored byஅரவிந்தன் | Samayam Tamil 25 Nov 2022, 11:24 am
குரு அதிபதியாக கொண்ட தனுசு ராசியில் டிசம்பர் 3ம் தேதி முதல் புதன் பகவான் சஞ்சாரம் செய்ய உள்ளார். டிசம்பர் 28ம் தேதி வரை தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதனின் அமைப்பால் சில ராசியினருக்கு எடுக்கும் முயற்சிகள், புதிய செயல்திட்டங்களில் வெற்றி என சிறப்பான சுப பலன்கள் தரக்கூடியவராக இருப்பார்.
Samayam Tamil mercury transit in sagittarius these 5 rasi will get unexpected cash flow
தனுசு ராசியில் புதன் பெயர்ச்சி (டிசம்பர் 3): 5 ராசிக்கு வருமானம் உயரும், பணிச்சுமை குறையும்



மிதுன ராசியில் புதன் பெயர்ச்சியின் தாக்கம்

மிதுன ராசியின் அதிபதியான விளங்குபவர் புதன் பகவான். ராசி அதிபதி 7ம் வீடான சமசப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார்.

இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் மூலம் நீங்கள் கணிசமான லாபத்தைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இந்தக் காலம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். உங்களின் நிதி நிலை குறிப்பிட்ட வளர்ச்சி இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு நீண்ட காலமாக தடைப்பட்ட செயலும், வர வேண்டிய பணமும் வந்து சேரும்.

குரு வக்ர நிவர்த்தி (நவ 24): அடுத்த 5 மாதங்கள் வரை குருவால் முன்னேற்றம் பெறும் ராசிகள்

​சிம்ம ராசியில் புதன் பெயர்ச்சியின் தாக்கம்

சிம்ம ராசிக்கு 5ம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதனின் சஞ்சாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த காலத்தில், நீங்கள் பங்குச் சந்தை, லாட்டரி அல்லது பந்தயம் மூலம் சிறப்பான லாபம் பெற வாய்ப்புள்ளது. நீங்கள் செய்த பழைய முதலீடுகளிலிருந்தும் பயனடைவீர்கள்.

பணியிடத்தில் உங்கள் செயல்திறன் சிறப்பாக இருக்கும். வேலையை சிறப்பாக செய்து முடிக்க முடியும். உயர்கல்விக்கு பாடுபடுபவர்களுக்கு யாரேனும் ஒருவரிடமிருந்து உதவித்தொகை கிடைக்கும். காதல் விஷயங்களில் இந்த நேரம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். குழந்தை வரத்திற்காக காத்திருப்பவர்களுக்கு சில நல்ல செய்திகளைக் கேட்கலாம்.

சனிப் பெயர்ச்சி 2023 : அதிர்ஷ்டமும், பதவி உயர்வும் யாருக்கு கிடைக்கும்?

​கன்னி ராசியில் புதன் பெயர்ச்சியின் தாக்கம்

கன்னி ராசி அதிபதியான புதன் பகவான், தனுசு ராசியில் சஞ்சரிக்கக்கூடிய காலத்தில் வீடு, மானை, வண்டி, வாகனம் என சொத்துக்கள் சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். உங்கள் தாய் உடனான உறவு வலுப்படும், அவரின் ஆரோக்கியம் மேம்படும்.

நீண்ட கால ஆசை நிறைவேற வாய்ப்புள்ளது. நீங்கள் முன்னெடுக்கும் வேலை தடையின்றி முடியும். வீடு, மனை விற்பனை செய்பவர்களுக்கு, ரியல் எஸ்டேட்டுடன் தொடர்புடையவர்களுக்கு, இந்த நேரம் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும்.

2023 புத்தாண்டில் அதிர்ஷ்டம், திருமண யோகம் பெற உள்ள 5 ராசிகள்

​தனுசு ராசியில் புதன் பெயர்ச்சியின் தாக்கம்

தனுசு ராசியில் புதன் பகவானின் சஞ்சாரம் நிகழ்கிறது. இதனால் உங்களின் தொழில், வியாபாரத்தில் பல சிறப்பான பலன்களைப் பெறலாம். ஏற்றுமதி - இறக்குமதி, மருத்துவத் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த காலம் மிகவும் அருமையாக இருக்கும்.

உங்கள் மனைவியுடனான உங்கள் உறவும் சிறப்பாக இருக்கும். உங்களின் பெரிய திட்டம் நிறைவேற அல்லது தொடங்க சிறப்பான காலம். எதிர்கால நோக்கில் திட்டமிட்டு வேலை செய்யத் தொடங்குவீர்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த நேரம் மிகவும் அருமையாக இருக்கும்.

​கும்ப ராசியில் புதன் பெயர்ச்சியின் தாக்கம்

கும்ப ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானத்தில் புதன் பகவானின் சஞ்சாரத்தில், உங்கள் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். குடும்ப தேவைக்கான செலவுகளும் கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

உத்தியோகஸ்தர்களுக்கு வருமானமும் கணிசமாக அதிகரிக்கும். உங்களின் கடின உழைப்பின் சிறப்பு பலன்களைப் பெறுவீர்கள். கல்வி தொடர்பான விஷயங்களில் நற்பலன் கிடைக்கும்.

எழுத்தாளர் பற்றி
அரவிந்தன்
நான் அரவிந்தன் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 12 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஜோதிடம், ஆன்மிகம் தொடர்பான செய்திகளை எழுதிக் கொண்டிருக்கும் நான், விளையாட்டு, நடப்பு நிகழ்வு, செய்திகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Principal Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்