ஆப்நகரம்

ராகு கேது பெயர்ச்சி 2023: இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராகு கிரகத்தால் அக்டோபர் முதல் உங்கள் வாழ்க்கை மாறும்

ஜோதிடத்தில் முக்கியமாக பார்க்கப்படும் கிரக பெயர்ச்சிகளில் ஒன்று ராகு கேது பெயர்ச்சி. எப்போதும் வக்ர நிலையில் பின்னோக்கி சுற்றக்கூடிய ராகு - கேது ஒன்னறை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.

Authored byஅரவிந்தன் | Samayam Tamil 1 Sep 2023, 12:33 pm
ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் 30ம் தேதி நடக்க உள்ளது. அசுப கிரகங்களான ராகு கேது முறையே மீனம், கன்னி ராசியில் சஞ்சரிக்க உள்ளதால் சில ராசியினருக்கு கெடுபலன் கிடைக்க வாய்ப்புள்ளது. அதனால் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், அதே சமயம் சிலருக்கு சீரான முன்னேற்றத்தையும் பெறக்கூடிய ராசிகள் குறித்து பார்ப்போம்.
Samayam Tamil rahu ketu peyarchi 2023 these zodiac sign life will change better from october
ராகு கேது பெயர்ச்சி 2023: இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராகு கிரகத்தால் அக்டோபர் முதல் உங்கள் வாழ்க்கை மாறும்


ராகு கேது பெயர்ச்சி 20223 :

இந்த ஆண்டு ராகு கேது பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கத்தின்படி அக்டோபர் 30ம் தேதி நடக்க உள்ளது. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நவம்பர் 7ம் தேதி நடக்க உள்ளது.

நிழல் கிரகங்களாக ராகு மேஷத்திலிருந்து மீனத்திற்கும், கேது துலாமிலிருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர். இதன் அடிப்படையில் சில ராசியினருக்கு சிறப்பான பலன்களை ராகு தர உள்ளார். எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.


குரு வக்ர பெயர்ச்சி பலன் 2023 : திருமண யோகம், தொழில் வெற்றி பெறப்போகும் 5 ராசிகள் - Guru Vakra Peyarchi 2023

மேஷம்

மேஷ ராசியினருக்கு ராகு - கேது பெயர்ச்சியானது சற்று கவனமாக இருக்க வேண்டிய காலம். பண ஆதாயம் சாதகமாக இருந்தாலும், உங்களின் செலவுகளைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டிய சூழல் இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொழிலில் முன்னேற்றத்தைக் காண முடியும். சமூகத்தில் மரியாதை கூடும்.

மேஷ ராசி ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 : முயற்சிகளில் சிறப்பான வெற்றி கிடைக்கும்

கடகம்

ராகுவின் சஞ்சாரம் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுக்கு சில தொல்லைகள் இருக்கும் என்றாலும், நீண்ட காலமாக இருந்த தடைகள் நீங்கும். இந்த கால கட்டத்தில் புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் உங்களின் கனவுகள் நிறைவேறச் சாத்தியமான காலமாக இருக்கும். வியாபாரிகள், தொழில் செய்பவர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.
குரு வக்ர பெயர்ச்சி 2023 : மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிகள்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இந்த ராகு - கேது பெயர்ச்சியானது பல வகையில் அனுகூலமான பலன்களை தரும். இந்த காலத்தில் நீங்கள் நிர்ணயித்த இலக்குகளை அடைய சாதகமான சூழல் இருக்கும். பயணங்கள் செய்ய வேண்டியிருக்கும். அதன் மூலம் நன்மைகள் இருக்கும் என்றாலும் கூடுதல் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் செலவுகள் விஷயத்தில் கட்டுப்பாடு தேவை.

மங்களகரமான விஷயங்கள் நடக்கும். ராகு சஞ்சாரத்திலிருந்து நன்மைகள் தருவார்.
நீங்கள் சிவ பெருமானுக்கு ஜலாபிஷேகம் செய்வது நன்மை தரும்.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்

மீனம்

மீன ராசியிலேயே ராகுவின் மாற்றமும், 7ல் கேது வர உள்ளனர். இதன் காரணமாக மீன ராசியினர் கவனமாக இருந்தால் சாதகமான பலன்களை அடைந்திட முடியும். உங்கள் தொழிலில் அபரிமிதமான வளர்ச்சியைக் காணலாம். தன ஸ்தானத்தில் ராசி அதிபதி குருவின் சஞ்சாரம் உங்களுக்கு உதவும். அதன் காரணமாக உங்களின் நிதி நிலை முன்பை விட மேன்மை தரக்கூடியதாக இருக்கும். உங்களின் முயற்சி மட்டும் கூடுதலாக தேவைப்படும்.

எழுத்தாளர் பற்றி
அரவிந்தன்
நான் அரவிந்தன் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 12 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஜோதிடம், ஆன்மிகம் தொடர்பான செய்திகளை எழுதிக் கொண்டிருக்கும் நான், விளையாட்டு, நடப்பு நிகழ்வு, செய்திகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Principal Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்