ஆப்நகரம்

சுக்கிரன் பெயர்ச்சி 2023: எந்த ராசிக்கு செலவும், இல்லற சுக பாதிப்பு உண்டாகும்?

சுக்கிர பகவான் மே மாத இறுதியில் கடக ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இந்த பெயர்ச்சியால் சில ராசியினருக்கு சில மோசமான பலன்கள் கிடைக்கும். யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை விரிவாக பார்ப்போம்.

Authored byஅரவிந்தன் | Samayam Tamil 17 May 2023, 8:07 pm
மே 30 2023 அன்று கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். சுக்கிரன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். மே 30 முதல் ஜூலை 7ம் தேதி வரை கடக ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பார். சுக்கிரன் ஒருவருக்கு ஆடம்பரம், வசதி, இல்லற சுகத்தை அருள்பவர். இவரின் பெயர்ச்சியால் சில ராசியினருக்கு பாதிப்புகளைத் தருவார்.
Samayam Tamil shukra gochar in cancer zodiac 2023 these zodiac sign will get trouble and more expenses
சுக்கிரன் பெயர்ச்சி 2023: எந்த ராசிக்கு செலவும், இல்லற சுக பாதிப்பு உண்டாகும்?


ரிஷபம்

கடக ராசியில் சஞ்சரிக்கக்கூடிய காலத்தில் ரிஷப ராசியினர் தங்கள் நண்பர்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். நண்பர்களால் உங்களுக்கு பிரச்னை வரலாம். உங்கள் காதல் வாழ்க்கையிலும், உங்கள் பணியிடத்திலும் பணிச்சுமை அதிகரிக்கும்.

உங்களின் சுக போகம் குறையும். காதல் வாழ்க்கையில் சற்று ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த காலமாக இருக்கும். பொருளாதார நிலையில் கவனம் தேவை. பொழுது போக்கு விஷயங்களுக்காக நீங்கள் நிறைய செலவிட வேண்டியது இருக்கும்.

சனி ஜெயந்தி, சனி வக்ர பெயர்ச்சி : சனி கெடுபலனிலிருந்து தப்பிக்க எளிய வழி

சிம்மம்

சிம்ம ராசிக்கு 12ம் வீடான விரய ஸ்தானத்தில் சுக்கிரனின் சஞ்சாரம் நிகழ்கிறது. உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வசதி, ஆடம்பரத்திற்காகவும், அடிப்படை தேவைகளுக்காகவும் அதிக பணம் செலவு ஏற்படும்.

உங்களின் சோம்பல் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. எதிர் பாலினத்தவர்களிடம் கவனமாக இருக்கவும். உங்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்கவும். உங்களுக்கு சளி மற்றும் கண் சம்பந்தமான பிரச்சனைகள் வந்து செல்லும்.

வைகாசி மாத நட்சத்திர பலன் : சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் ராசிக்கான வைகாசி மாத பலன்

தனுசு ராசி

சுக்கிரன் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் நிதி விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில், நீங்கள் ரகசியமாக பணத்தை செலவிட வேண்டியது இருக்கும். ஒழுக்கக்கேடான செயல்களை தவிர்க்கவும்.

இந்தக் காலகட்டத்தில் உங்கள் குடும்பத்தாருடன் சண்டையும் வரலாம். பணியிடத்தில் பணிபுரியும் பெண்களிடம் நல்ல நடத்தையை கடைப்பிடிக்கவும், இல்லையெனில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் குடும்ப வாழ்க்கையிலும் சற்று மன அழுத்தத்தைத் தரக்கூடியதாக இருக்கும். பணிபுரிபவர்கள் அமைதியாகவும், கவனமாகவும் இருந்து தங்கள் வேலையைச் செய்து முடிப்பது நல்லது.

வைகாசி மாத நட்சத்திர பலன் : தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிக்கான வைகாசி மாத பலன

கும்ப ராசி

கடக ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் செய்யும் நேரத்தில் கும்ப ராசியினர் எதிலும் சற்று கவனமாக இருக்கவும். உங்கள் எதிரிகளிடமிருந்து விலகி இருப்பது நல்லது. உங்கள் எதிரிகள் மிகவும் வலிமையானவர்களாக இருப்பார்கள். உங்கள் எதிரிகள் உங்களை மிகவும் தொந்தரவு செய்ய வாய்ப்புள்ளது.

ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. வெளி உணவுகளை தவிர்ப்பது அவசியம். வழக்கமான உடற்பயிற்சி செய்வது நல்லது. புதிய வேலை தேடுவதை தவிர்க்கவும்.

வார ராசிபலன்: மே 16 முதல் 22 வரை - துலாம் முதல் மீனம் வரை : பதவி உயர்வு யாருக்கு?

எழுத்தாளர் பற்றி
அரவிந்தன்
நான் அரவிந்தன் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 12 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஜோதிடம், ஆன்மிகம் தொடர்பான செய்திகளை எழுதிக் கொண்டிருக்கும் நான், விளையாட்டு, நடப்பு நிகழ்வு, செய்திகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Principal Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்