ஆப்நகரம்

விருச்சிகத்தில் சுக்கிர பெயர்ச்சி நவ 11 - 5 ராசிகளுக்கு பண விஷயத்தில் கவனம் தேவை

சுக்கிர பகவான் தனது சொந்த ராசியான துலாம் ராசியிலிருந்து, விருச்சிக ராசிக்கு நவம்பர் 11ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8.09 மணிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். ஒவ்வொரு ராசியிலும் சுக்கிரன் சுமார் 25 நாட்கள் இருப்பார். சுக்கிரன் டிசம்பர் 5-ம் தேதி தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.

Authored byஅரவிந்தன் | Samayam Tamil 8 Nov 2022, 12:19 pm
ஜோதிட ரீதியாக ஒருவருக்கு செல்வம், சுகம், ஆடம்பரம், மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை உள்ளிட்டவற்றை அளிக்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் சில ராசியினர் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தை அடைந்தாலும், சிலர் தங்களின் தொழிலிலும், பண விஷயத்திலும் பெரிய சரிவை சந்திக்க நேரிடும். சுக்கிர பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் குறித்து இங்கு பார்ப்போம்.
Samayam Tamil sukran peyarchi in viruchigam on november 11 these rasi will get financially professional life trouble
விருச்சிகத்தில் சுக்கிர பெயர்ச்சி நவ 11 - 5 ராசிகளுக்கு பண விஷயத்தில் கவனம் தேவை



​மிதுனம்:

மிதுன ராசிக்கு 12, 5ம் வீடுகளுக்கு அதிபதி சுக்கிரன், 6ம் வீடான நோய், எதிரி ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். இதன் காரணமாக உங்களின் காதல் வாழ்க்கையில் சில சவால்களை சந்திக்க நேரிடும்.

உங்கள் மனைவியின் உடல்நிலை குறித்தும் கவலை அதிகரிக்கும். கூடுதல் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் எந்த ஒரு கடினமான விஷயங்களை செய்வது, முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிர்ஷ்டத்தை நம்பி எதையும் செய்ய வேண்டாம், விடாமுயற்சியும் கடின உழைப்பும் மட்டுமே இந்த சுக்கிரனின் சஞ்சாரத்தின் போது கை கொடுக்கும்.

​கன்னி ராசி​யில் சுக்கிரன் சஞ்சாரத்தின் தாக்கம்

கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம், ராசிக்கு 3ம் வீடான தைரிய ஸ்தானத்தில் நடக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், ஆபத்தான விஷயங்களை செய்வது, ஆலோசிக்காமல், சரியாக தெரியாத இடத்தில் முதலீடு செய்வது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

குடும்ப வாழ்வில் பிடிவாதம், முரண்பாடான பேச்சு போன்றவற்றால் சச்சரவுகள், டென்ஷன் போன்றவை ஏற்படலாம். இப்போது குறிப்பாக பெண் நண்பர்களிடமிருந்து ஒத்துழைப்பை எதிர்பார்க்காதீர்கள். எதிர் பாலின நண்பர்களிடம் கவனமாக இருக்கவும். இந்த இடைப்பட்ட காலத்தில் நீங்கள் பொழுதுபோக்குகள் மற்றும் உங்கள் அற்ப ஆசைகளுக்கு பணத்தை அதிகமாக செலவிடுவார்கள்.

சனிப்பெயர்ச்சி பலன் 2023 எப்போது? - யாருக்கெல்லாம் சனி பாதிப்பைத் தருவார் தெரியுமா?

​தனுசு ராசி

தனுசு ராசிக்கு 12வது வீடான விரய ஸ்தானத்தில் சுக்கிர பகவான் சஞ்சாரம் நடக்கிறது. இந்த சூழலில் உங்களின் செலவுகள் அதிகமாக இருக்கும். சுற்றுலாம், பொழுதுபோக்கு, ஆசைகளுக்காக உங்களின் செலவுகள் அதிகமாக வாய்ப்புள்ளது. வாகனம் பராமரிப்பு சார்ந்த விஷயங்களில் செலவுகள் உண்டாகும்.

கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றிய பயம் மனதில் இருந்து கொண்டே இருக்கும். நிதி விஷயங்களில் ரிஸ்க் எடுக்க வேண்டாம், நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

2023 புத்தாண்டு கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள் யார் தெரியுமா?

​மீன ராசியில் சுக்கிரன் சஞ்சாரத்தின் தாக்கம்

மீன ராசிக்கு 9ம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரனின் சஞ்சாரம் நிகழ்வதால் உங்களின் தந்தையுடனான உறவு பாதிக்கப்படலாம். காதல் வாழ்க்கையில் கசப்பான அனுபவம், தகராறு ஏற்படலாம்.

மீனம் சனி பெயர்ச்சி 2023 பலன்கள் : ஏழரை சனி ஆட்டம் ஆரம்பம்

திருமண வாழ்க்கையிலும் மன அழுத்தத்தை தரும். வீட்டுத் தேவைக்கு பணம் அதிகமாக செலவழிப்பீர்கள். குழந்தைகளின் உடல்நலம் மற்றும் அவர்களின் கல்விக்காக செலவு அதிகரிக்கும். குடும்ப விஷயங்களில் மனக்கசப்பு ஏற்படும்.

எழுத்தாளர் பற்றி
அரவிந்தன்
நான் அரவிந்தன் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 12 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஜோதிடம், ஆன்மிகம் தொடர்பான செய்திகளை எழுதிக் கொண்டிருக்கும் நான், விளையாட்டு, நடப்பு நிகழ்வு, செய்திகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Principal Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்