சூரிய பகவான் சிம்மத்தில் மாற்றத்தால் 12 ராசிகளில் சிலருக்கு மிக சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழில் மேம்பாடு, ஆரோக்கியம் அதிகரிக்கும் என்பதைப் பார்ப்போம்.
சூரிய பெயர்ச்சி : ஆவணி மாதம்
சூரிய பெயர்ச்சி : ஆவணி மாதம் நற்பலன்கள்
சூரியனின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து தமிழில் மாதங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒரு மாதத்திற்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும் சூரியன், ஒரு ஆண்டு கழித்து ஆவணி மாதத்தில் தனது சொந்த ராசியான சிம்மத்தில் ஆகஸ்ட் 17, காலை 7.14 மணிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இவர் செப்டம்பர் 17, 2022 வரை சிம்மத்தில் சஞ்சரிப்பார்.
தனது சொந்த ராசியில் ஆட்சி அதிபதியாக சஞ்சாரம் செய்ய உள்ளதால் இந்த நேரத்தில் சூரியன் நல்ல நிலையில் இருக்கும் ஜாதகங்களுக்கு சாதகமான பலன்களும், ஒரு ஜாதகத்தில் சூரியனின் நிலை சாதகமற்றதாக இருந்தால், அந்த நபர் இந்த மாற்றத்தால் விரும்பத்தகாத விளைவுகளை அனுபவிக்க நேரிடும்.
இந்த பதிவில் சூரியன் சிம்மத்தில் சஞ்சாரம் செய்வதால் மிக நல்ல பலன்களைப் பெறும் 4 ராசியினர் யார் என்பதைப் பார்ப்போம்.
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி 2022 : ஆற்றல், வேகம் பெற உள்ள ராசிகள்
மேஷம்:
மேஷ ராசிக்கு 5ம் வீடான பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும். சொத்துக்கள் சேர வாய்ப்புள்ளது.
மாணவர்கள் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும் என்பதால் அதிகளவில் நன்மைகள் கிடைக்கும். தேர்வுகளில் சிறப்பாக செயல்பட முடியும்.
காதல் உறவுகளில் இணக்கமும், அன்பும் அதிகரிக்கும். உங்களின் நிதி நிலை அதிகரிக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடனான உங்கள் உறவும், வேலையில் நல்ல முன்னேற்றமும் உண்டாகும்.
கடகம் ஆவணி மாத ராசிபலன்:
சூரியனின் சஞ்சாரம் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான குடும்ப, தன ஸ்தானத்தில் சஞ்சாரமாக உள்ளார். அதோடு உங்கள் ராசியிலிருந்து அவர் மாறுகிறார் என்பதால் மிகப்பெரிய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களின் முயற்சியால், உங்கள் சுய முயற்சியால் நீங்கள் முன்னேற்றம் அடைவீர்கள்.
உங்களின் செயல்பாடுகளுக்கு குடும்பத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு தங்கள் துறைகளில் சிறப்பான வெற்றி கிடைக்கும்.
சிம்மம் ஆவணி மாத ராசிபலன்:
சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்ய உள்ளதால், உங்களின் மனம், உடல் ஆற்றல் அதிகரிப்பதை உணர்வீர்கள். உங்களின் தன்னம்பிக்கையும், செயல்பாடும் அதிகரிக்கும். வேலையில் சிறப்பாக செயல்பட்டு நல்ல வெற்றி பெறுவீர்கள். உங்கள் உடல்நிலையும் மேம்படும்.
மீனம் ஆவணி மாத ராசிபலன்:
சூரிய பகவானின் சஞ்சாரத்தால் உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும். மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் ஆரோக்கியம் மேம்படும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் சிறப்பாக பலனைப் பெற வாய்ப்புள்ளது.
உங்களின் எதிரிகளை வெல்ல நல்ல வாய்ப்புகளும், சாதுரியமாகவும் செயல்படுவீர்கள். நோய்கள் விலகும்.