ஆப்நகரம்

சிம்மத்தில் சூரியன், சுக்கிரன் சேர்க்கை (ஆக 31) : திருமண வாழ்க்கை பிரச்னை சமாளிக்க வேண்டிய ராசிகள்

வேத ஜோதிடத்தின்படி சூரியன் ஆளுமை, ஆரோக்கியம் உள்ளிட்டவற்றைத் தரக்கூடியவராகவும், சுக்கிரன் இல்லற சுகம், திருமணம், சொத்து, சுகம் தரக்கூடியவராகப் பார்க்கப்படுகிறார். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை ஆகஸ்ட் 31ம் தேதி புதன் கிழமை ஏற்படுகிறது.

Samayam Tamil 25 Aug 2022, 2:56 pm
ஆகஸ்ட் 17ம் தேதி சூரியன் சிம்ம ராசியில் பெயர்ச்சியானார். ஆகஸ்ட் 31ம் தேதி சுக்கிரன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகி, சூரியனுடன் சஞ்சாரம் செய்ய உள்ளார். எதிரி கிரகங்களான இருவரும் சேர்வதோடு, சூரியன் ஆட்சி பெற்று இருக்கும் இடத்தில் சுக்கிரனின் சஞ்சாரம் நிகழ்வதால், இரண்டுமே ஒருவருக்கொருவர் சில இடையூறுகள், கெடுபலன்களைத் தருவார்கள். சில ராசியினர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
Samayam Tamil sun venus conjunction in leo on august 31 these zodiac signs are careful in your expense
சிம்மத்தில் சூரியன், சுக்கிரன் சேர்க்கை (ஆக 31) : திருமண வாழ்க்கை பிரச்னை சமாளிக்க வேண்டிய ராசிகள்


​மிதுனம்

சிம்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிக்கும் காலத்தில் வாழ்வில் கலவையான பலன்களைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் பணம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் சிரமங்களை சந்திக்க நேரிடலாம், தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். அதே நேரத்தில், குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் உங்கள் நம்பகத்தன்மையும் கொஞ்சம் குறையலாம். இருப்பினும், பணியிடத்தில் உங்கள் முயற்சிகள் பாராட்டப்படும், மேலும் சிலருக்கு பணியிடத்தில் பதவி உயர்வும் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் இளைய உடன்பிறப்புகள் உங்களிடம் நிதி உதவி கேட்கலாம், நீங்கள் பொருளாதார ரீதியாக திறமையாக இருந்தால், நீங்கள் உதவுதல் நலம்.

பரிகாரமாக இதற்கு அரிசி மாவை இடவும்.

சீன ஜோதிடம் : உங்கள் முக அமைப்பு எப்படிப்பட்ட பலன் தரும் தெரியுமா?

​கடக ராசி

சுக்கிரன் சூரியன் சேர்க்கை சிம்ம ராசியில் நடக்கவிருக்கிறது கடக ராசிக்கு இரண்டாம் இடம் என்பதால் செலவுகள் அதிகரிக்கும் தனம் சார்ந்த விஷயங்களில் தடைகள் உண்டாகும் சிலருக்கு தொண்டை தொடர்பான உடல்நிலை பிரச்சினைகள் உண்டாகும் இந்த நேரத்தில் பொரித்த உணவை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும் இந்த காலத்தில் எந்த ஒரு விஷயத்திலும் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

பரிகாரமாக ஏழை, எளியவர்களுக்கு உணவுகளைத் தானமாக வழங்கவும்.

​கன்னி ராசி

கன்னி ராசிக்கு சூரியன் சுக்கிரன் கிரக சேர்க்கை 12ம் இடமான விரய ஸ்தானத்தில் அமைகிறது. அதனால் இந்த காலத்தில் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. முதலீடு செய்வதில் கவனமாக இருப்பது அவசியம். இளைய சகோதரர் வகையில் உங்கள் மீது சில மனவருத்தம் ஏற்படலாம்.

இந்த காலகட்டத்தில் சுக்கிரனுக்குரிய 'ஓம் சுக்ரை நம' என்ற பீஜ மந்திரத்தை தினமும் 11 முறை உச்சரிக்கவும்.

​மகர ராசி

மகர ராசிக்கு சுக்கிரனின் சஞ்சாரம் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் சில சவால்களைத் தரக்கூடியதாக இருக்கும். இந்த நேரத்தில் எந்த ஒரு செயலிலும் சிறப்பான வெற்றியைப் பெற கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும்.

அதனால் எந்த ஒரு விஷயத்திலும் மனம் தளராமல் முயற்சிகளைத் தொடரவும். எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். ஆரோக்கியத்திலும் கவனமாக இருங்கள். வெளிநாட்டு வியாபாரம் செய்பவர்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம்.

பரிகாரமாக சந்தன திலகம் எந்த நேரமும் அணிந்திருக்கவும்.

​மீன ராசி

மீன ராசிக்கு 6ம் வீடான நோய், எதிரி ஸ்தானத்தில் சுக்கிரன், சூரியன் சஞ்சாரம் நிகழ்கிறது. அதனால் தொழில் சம்பந்தமான எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் பலமுறை யோசியுங்கள். தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்துவதில் நீங்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும். திருமணமானவர்கள், துணையின் மாமியாரை அனுசரித்துச் செல்லவும். உரையாடலின் போது மிகவும் கவனமாக வார்த்தைகளைப்

பரிகாரமாக அரிசி, நெய், தயிர், சர்க்கரை போன்ற வெள்ளைப் பொருட்களை தானம் செய்ய வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்