ஆப்நகரம்

கடகத்தில் சுக்கிர பெயர்ச்சி (ஆகஸ்ட் 7) : நிதி சிக்கலால் பேராபத்தைச் சந்திக்க உள்ள ராசிகள் யார் தெரியுமா?

மனோகாரகனான சந்திரன் அதிபதியாக இருக்கும் கடக ராசியில், சுக்கிரன் ஆகஸ்ட் 7ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை சஞ்சாரம் செய்ய உள்ளார். இந்த கோச்சார நிலை சில ராசிகளுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

Samayam Tamil 3 Aug 2022, 1:15 pm
செல்வம், வசதி, ஆடம்பரம், திருமண சுகம் உள்ளிட்டவற்றை அருளக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் 2022 ஆகஸ்ட் 7ம் தேதி 5.20 மணிக்கு கடக ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
Samayam Tamil venus transit in cancer 7th august 2022 some zodiacs will be troubled in their life and material pleasures
கடகத்தில் சுக்கிர பெயர்ச்சி (ஆகஸ்ட் 7) : நிதி சிக்கலால் பேராபத்தைச் சந்திக்க உள்ள ராசிகள் யார் தெரியுமா?


சுக்கிரன் தனது பகை கிரகமான சந்திரனின் ராசியான கடகத்தில் சஞ்சாரம் செய்வதால் சில பணம் சார்ந்த பிரச்சினைகள் மட்டுமல்லாமல், திருமண வாழ்க்கையில் சில மன சங்கடங்கள், பொருள் இன்பங்கள் குறைதல் ஏற்படலாம். எந்தெந்த ராசியினருக்கு சுக்கிர பெயர்ச்சி சில மோசமான பலன்கள் தரும் என்பதைப் பார்ப்போம்.

​மேஷம்: காதல் உறவில் பிரச்சனைகள் வரலாம்

ராசிக்கு 4ம் வீட்டில் சுக்கிரனின் நகர்வு இருப்பதால், மேஷ ராசிக்கு காதல் வாழ்க்கையில் சற்று சங்கடங்கள், தடுமாற்றங்கள் வரலாம். சில நேரங்களில் உணர்ச்சிவசப்படக்கூடிய நிலை இருக்கும். சிறிய விஷயங்கள் கூடு பெரிய தொந்தரவாக தோனலாம். உங்கள் காதலியுடனான உறவில் சிக்கல் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.


ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி : ஆகஸ்ட் 10 முதல் பெரிய மாற்றம் சந்திக்க உள்ள ராசிகள்

​கன்னி: தொழிலதிபர்களுக்கு சவாலான காலம்

கன்னி ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானத்தில் சுக்கிரனின் சஞ்சாரம் நிகழ்வதால், பல்வேறு நிலைகளில் நிதி சார்ந்த பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அதனால் பணம் சார்ந்த எந்த ஒரு பெரிய முதலீடுகள், கடன் கொடுத்தல், கடன் வாங்குதல் போன்ற ஆபத்தான முயற்சிகள் வேண்டாம். எந்த ஒரு முதலீடுகளுக்கு முன் தகுந்த ஆலோசனை தேவை. உடல் நலத்தில் அலட்சியம் காட்டாமல், உடல் நலனில் கவனமாக இருங்கள்.

​துலாம்: அலைச்சல் அதிகமாக இருக்கும்

துலாம் ராசிக்கு 10ம் வீடான கர்ம, தொழில் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் தொழில், வேலை சார்ந்த விஷயங்களில் சற்று அலைச்சல் அதிகமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சில சிரமங்களை சந்திக்க வேண்டியது இருக்கும்.

இந்த காலத்தில் பெரியவர்களின் அறிவுரைகளைப் புறக்கணிக்காதீர்கள். வேலை, தொழில் சார்ந்த விஷயங்களில் வல்லுநர்கள் மற்றும் வணிகர்களுக்கும் இந்த காலகட்டத்தில் பல சவால்கள் வரலாம். ஆரோக்கியத்தில் அலட்சியம் உங்களை பாதிக்கலாம். எனவே உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

​தனுசு: கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்

தனுசு ராசிக்கு 8ம் வீடான நோய், எதிரி ஸ்தானமான கடக ராசியில் சுக்கிரனின் மாற்றத்தால் தொழில், உத்தியோகம், கல்வியில் கடும் போட்டியை சந்திக்க நேரிடும். இந்த காலத்தில் நீங்கள் யாரிடமும் கடன் வாங்க வேண்டாம். இல்லையெனில் அது அதிக சிரமம், அவமானத்தைத் தரக்கூடும்.

அதிக செலவு, பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், சரியான திட்டமிட்டு செலவு செய்வது நல்லது. பண பரிவர்த்தனையில் மிகவும் கவனமாக செய்யப்பட வேண்டும். மாணவர்கள் இடையூறுகளையும் சந்திக்க நேரிடும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் 'சமயம் தமிழ்' இணையதளத்தை பின் தொடருங்கள்

​கும்பம்: வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும்

கும்ப ராசியினர் இந்த காலகட்டத்தில் வாழ்க்கையில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். மேலும், இந்த நேரத்தில் உங்கள் செலவுகளும் அதிகரிக்கலாம். எனவே தேவையற்ற செலவுகளை முடிந்தவரை கட்டுப்படுத்துங்கள். திருமணமானவர்கள் தங்கள் மனைவியுடனான உறவில் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்