ஆப்நகரம்

Sun Venus Conjunction: துலாம் ராசியில் சுக்கிரன் (அக் 18) : பண மழையில் நனைய உள்ள ராசிகள்

சுகம், செல்வத்தை தரக்கூடிய சுக்கிர பகவான் அக்டோபர் 18ம் தேதி, செவ்வாய்க் கிழமை, தனது சொந்த ராசியான துலாம் ராசியில் சஞ்சரிக்க உள்ளார். நவம்பர் 11ம் தேதி வரை துலாமில் சஞ்சரிப்பார்.

Samayam Tamil 14 Oct 2022, 11:22 am
செல்வம், சுகம், ஆடம்பரம், வசதி உள்ளிட்டவற்றை வாங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் தனது சொந்த ராசியான துலாம் ராசியில், சூரியனுடன் இணைந்து வலுவாக சஞ்சரிக்க உள்ளார். இதனால் சில ராசிகளுக்கு சுப பலன்கள் கிடைக்கும். தீபாவளி பண்டிகை நெருங்கக்கூடிய நிலையில், சுக்கிரனின் இந்த அற்புத பலன்கள் மேஷம், ரிஷபம் உள்ளிட்ட 5 ராசியினருக்கு மிகவும் அமோகமாக அமையப் போகிறது.
Samayam Tamil venus transit in libra on 18th october these zodiac sign will get money benefits and auspicious effect by goddess lakshmi
Sun Venus Conjunction: துலாம் ராசியில் சுக்கிரன் (அக் 18) : பண மழையில் நனைய உள்ள ராசிகள்



​​மேஷ ராசி

மேஷ ராசிக்கு சுக்கிரனின் இந்த சஞ்சார நிலையால் தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். மேலதிகாரிகளுடன் உங்கள் உறவு சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நேரத்தில் ஒரு பெரிய வணிக ஒப்பந்தத்தைப் பெற வாய்ப்புள்ளது. இது எதிர்காலத்தில் உங்களுக்கு பெரிய லாபத்தை தரும்.

மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் பெறலாம். மறுபுறம், திருமண முயற்சி சாதகமான பதில் கிடைக்க வாய்ப்புள்ளது. திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக நகரும். காதல் சாதகமாக அமையும்.

சனி வக்ர நிவர்த்தி (அக் 23) : 3 மாதங்கள் கஷ்டப்பட உள்ள 5 ராசிகள்

ரிஷப ராசி

ரிஷப ராசி அதிபதியான சுக்கிரன், மற்றொரு சொந்த ராசியான துலாமில் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகளைப் பெற முடியும். நீண்ட நாட்களாக ஒரு சில விஷயத்தை அடைய கடினமாக உழைத்தீர்களோ, அதை இந்த முறை பெறலாம்.

வேலையில் இருப்பவர்களின் சம்பள உயர்வு பெற வாய்ப்பிருக்கிறது. தீபாவளியன்று விலை உயர்ந்த பரிசுகள் கிடைக்கலாம். நிதி ரீதியாக சிறப்பான பலன் கிடைக்கும் என்பதால் பணத்தை சேமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். திருமண வாழ்க்கையில் எந்தவிதமான வாக்குவாதங்களையும் தவிர்ப்பது நல்லது.

உங்கள் ராசிப்படி காதலை இப்படி வெளிப்படுத்தினால் கிரீன் சிக்னல் கிடைக்கும்!

​​கடக ராசி

கடக ராசிக்கு சுக ஸ்தானத்தில், சுகத்தை அளிக்கக்கூடிய சுக்கிர பகவான் அமர்ந்திருப்பதால், மிகவும் நல்ல பலன்களைப் பெற்றிட முடியும். உங்கள் வீட்டை அழகுபடுத்துவதற்கு நீங்கள் செலவிட நேரிடலாம். தீபாவளி பண்டிகையொட்டி வாகன சுகத்தைப் பெறலாம். புதிய வாகனம் வாங்க வாய்ப்புண்டு. மறுபுறம், வியாபாரத்தில் இந்த எதிர்பார்த்ததை விட அதிக லாபம் பெறலாம்.

உங்களின் கடின உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உங்கள் பணியில் மகிழ்ச்சியாகவும், முன்னேற்றத்தையும் பெற முடியும்.

கடின உழைப்பின் பலனை பண ஆதாய வடிவில் பெறுவீர்கள். காதல் விஷயத்திலும், சாதகமான காலமாக இருக்கும்.

சனி பெயர்ச்சி 2023 எப்போது? : சனியிடமிருந்து விடுதலைப் பெறப்போகும் ராசிகள்

​கன்னி ராசி

கன்னி ராசிக்கு 2ம் வீடான தன ஸ்தானத்தில் சுக்கிரனின் சஞ்சாரம் நிகழ்வதால் அனைத்து வகையான பொருட்கள், இன்பங்கள் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. நிதி நிலை சிறப்பாக இருக்கும் அதே சமயம் சற்று செலவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நீங்கள் பணியாற்றும் துறையில் உங்கள் செயல்திறன் மேம்படும். உங்களின் நிதி நிலை மேம்படும், உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். புதிய வருமான ஆதாரங்களும் கிடைக்கக்கூடும்.

ஐப்பசி மாத ராசி பலன் : 12 ராசிக்கு எதிர்மறையான பலன்கள் குறைக்க எளிய பரிகாரம்!

​துலாம் ராசி

துலாம் ராசியிலேயே ராசி அதிபதி சுக்கிரன் சஞ்சாரம் நடக்கப் போகிறது. இந்தப் பெயர்ச்சிக்குப் பிறகு உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். நீங்கள் முன்பை விட அதிக பணத்தை சேமிக்க முடியும் மற்றும் கூடுதல் வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் காண முடியும்.

இந்த நேரத்தில் நீங்கள் எங்கு பணத்தை முதலீடு செய்வீர்களோ, அது எதிர்காலத்தில் உங்களுக்கு சிறந்த வருமானத்தைத் தரும். காதல் விவகாரங்களில், நேர்மறையான முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. திருமண முயற்சிகள் வெற்றி அடைய வாய்ப்புள்ளது.

ஐப்பசி மாதம் 2022 : பணமும், வெற்றியும் குவிய உள்ள ராசிகள்

அடுத்த செய்தி

டிரெண்டிங்