ஆப்நகரம்

இன்று நாள் எப்படி?

கணித்தவர்: நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

TNN 4 Dec 2016, 9:19 am
4-12-2016, துர்முகி வருடம், கார்த்திகை மாதம் 19-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை பஞ்சமி: பின்னிரவு 2.27 மணிவரை; பிறகு சஷ்டி. உத்திராடம்: காலை 9.08 மணி வரை; பிறகு திருவோணம். அமிர்தயோகம். திருவோண விரதம். சுப முகூர்த்த தினம். திருமணம் போன்ற சுப காரியங்களில் ஈடுபடலாம். முக்கியமானவர்களைச் சந்தித்துப் பேசலாம். வாகனம் பயிலலாம். பயணம் மேற்கொள்ளலாம். விவசாயப்பணிகளில் ஈடுபடலாம். கலைத்துறை ஊக்கம் தரும். கிரக ஆரம்பம் செய்யலாம்.
Samayam Tamil today transit
இன்று நாள் எப்படி?


நல்லநேரம்: காலை 7 முதல் 8 மணிவரை; முற்பகல் 11 முதல் 12 மணிவரை. பிற்பகல் 2 முதல் 3 மணிவரை;

ராகுகாலம்: பிற்பகல் 4.30 முதல் 6.00 மணிவரை.

எமகண்டம்: நண்பகல் 12 முதல் 1.30 மணிவரை.

குளிகை: பிற்பகல் 3.00 முதல் 4.30 மணிவரை.

வாரசூலை: மேற்கு.

அதிர்ஷ்டஎண்கள்: 4, 7, 1, 8.

தினப்பலன்:

மேஷம்: ஒரு காரியம் நிறைவேறும். நண்பர்கள் நலம் புரிவார்கள். புதிய சொத்துக்கள் சேரும்.

ரிஷபம்: நல்ல தகவல் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். மனத்துணிவு அதிகரிக்கும்.

மிதுனம்: பண வரவு கடினம். குடும்ப நலனில் கவனம் தேவை. வீண்வம்பு வேண்டாம்.

கடகம்: நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். நண்பர்கள் நலம் புரிவார்கள். பயணத்தால் நலம் உண்டாகும்.

சிம்மம்: எதிர்ப்புக்கள் விலகும். மனத்துணிவு கூடும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்; சிக்கனம் தேவை.

கன்னி: ஒரு எண்ணம் நிறைவேறும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மக்களால் நலம் உண்டாகும்.

துலாம்: ஒரு காரியம் ஈடேறும். புதிய பொறுப்புக்கள் கிடைக்கும். நண்பர்கள் நலம் புரிவார்கள்.

விருச்சிகம்: வெற்றிவாய்ப்புக்கள் அதிகரிக்கும். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் நலம் புரிய முன்வருவார்கள்.

தனுசு: பணவரவு கூடும். குடும்ப நலம் சிறக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

மகரம்: நல்லவர்களின் தொடர்பு நலம் தரும். நற்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் ஏற்படும்.

கும்பம்: செலவுகள் கூடும். உடல் நலனில் கவனம் தேவை. மறைமுக எதிரிகள் இருப்பார்கள்; எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மீனம்: மன மகிழ்ச்சி பெருகும். ஆதாயம் கூடும். மக்களால் அனுகூலம் உண்டாகும். புத்திசாலித்தனம் பளிச்சிடும்.

பொதுப்பலன்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வெற்றிவாய்ப்புக்கள் அதிகமாகும். நல்ல தகவல் வந்து சேரும். எதிர்ப்புக்கள் விலகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிட்டும்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்