ஆப்நகரம்

இன்று நாள்எப்படி?

கணித்தவர்: நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

TOI Contributor 8 Jun 2017, 6:20 am
கணித்தவர்: நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி
Samayam Tamil today transit
இன்று நாள்எப்படி?


8-6-2017, ஹேவிளம்பி வருடம், வைகாசி மாதம் 25-ஆம் தேதி, வியாழக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி : பிற்பகல் 2.18 மணிவரை; பிறகு பெளர்ணமி. அனுஷம்: பின்னிரவு 2.15 மணி வரை; பிறகு கேட்டை. சித்தயோகம். காஞ்சி ஸ்ரீ மகாப் பெரியவா ஜயந்தி. சுப முகூர்த்த தினம். திருமணம் போன்ற சுப காரியங்களில் ஈடுபடலாம். முக்கியஸ்தர்களைச் சந்தித்துப் பேசலாம். முக்கியப் பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம். வியாபாரப் பணிகளில் ஈடுபடலாம். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள் வாங்கலாம். அணியலாம். குரு வழிபாட்டுக்கு உகந்த நாளிது.

நல்லநேரம்: காலை 9 முதல் 10 மணிவரை; முற்பகல் 11 முதல் 12 மணிவரை. பிற்பகல் 4 முதல் 5 மணிவரை;

ராகுகாலம்: பிற்பகல் 1.30 முதல் 3.00 மணிவரை.

எமகண்டம்: காலை 6.00 முதல் 7.30 மணிவரை.

குளிகை: காலை 9.00 முதல் 10.30 மணிவரை.

வாரசூலை: தெற்கு.

அதிர்ஷ்டஎண்கள்: 8, 6, 9, 3.

தினப்பலன்:

மேஷம்: மன அமைதி குறையும். உடல் நலனில் கவனம் தேவைப்படும். நண்பர்கள், உறவினர்களால் சங்கடம் ஏற்படும்.

ரிஷபம்: ஆசைகள் நிறைவேறும். நல்ல தகவல் வந்து சேரும். வாழ்க்கைத்துணை நலம் சிறக்கும்.

மிதுனம்: எதிர்ப்புக்கள் அகலும். காரியத்தில் வெற்றி கிட்டும். பண வரவு அதிகரிக்கும். திறமை பளிச்சிடும்.

கடகம்: மக்களால் சிறு சங்கடம் ஏற்படும். மனத்தில் நிம்மதி குறையும். உடல் நலனில் கவனம் தேவை.

சிம்மம்: நண்பர்களால் செலவுகள் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். காரியத்தில் முழுக்கவனம் தேவை.

கன்னி: வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். நல்ல தகவல் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.

துலாம்: பணவரவு கூடும். குடும்ப நலம் சிறக்கும். சுப காரியங்கள் நிகழும்.

விருச்சிகம்: மதிப்பு உயரும். அலைச்சல் வீண்போகாது. நற்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

தனுசு: வீண் செலவுகள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை.

மகரம்: மன மகிழ்ச்சி பெருகும். முக்கியமான எண்ணம் நிறைவேறும். ஆதாயம் அதிகரிக்கும். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும்.

கும்பம்: காரியத்தில் வெற்றி கிட்டும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

மீனம்: காரிய தாமதம் உண்டாகும். தந்தை நலனில் கவனம் தேவை. மக்களால் சிறு சங்கடம் ஏற்பட்டு விலகும்.

பொதுப்பலன்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, நட்சத்திரக்காரர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். எதிர்ப்புக்கள் அகலும். மன மகிழ்ச்சி கூடும். நல்ல தகவல் வந்து சேரும். மதிப்பு உயரும். உடன்பிறந்தவர்களால் நலம் உண்டாகும். பொதுப்பணிகளில் ஈடுபாடு கூடும். நியாயமான ஆசைகள் நிறைவேறும்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்