ஆப்நகரம்

இன்று நாள் எப்படி? (02-04-2017)

கணித்தவர்: நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

TNN 2 Apr 2017, 6:02 am
2-4-2017, துர்முகி வருடம், பங்குனி மாதம் 20-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை சஷ்டி: பிற்பகல் 3.17 மணி வரை; பிறகு சப்தமி. மிருகசீரிஷம்: பின்னிரவு 1.15 மணி வரை; பிறகு திருவாதிரை. சித்தயோகம். சஷ்டி விரதம். சுப முகூர்த்த நாளிது. திருமணம் போன்ற சுப காரியங்களில் ஈடுபடலாம். பயணம் மேற்கொள்ளலாம். முக்கியமானவர்களைச் சந்தித்து அளவளாவலாம். ஆபரணம் உருவாக்கலாம். வாகனம் வாங்கலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம். ஹோம மற்றும் அக்னி சம்பந்தமான காரியங்களில் ஈடுபடலாம்.
Samayam Tamil today transit 02 04 2017
இன்று நாள் எப்படி? (02-04-2017)


நல்லநேரம்: காலை 7 முதல் 8 மணிவரை; முற்பகல் 11 முதல் 12 மணிவரை. பிற்பகல் 2 முதல் 3 மணிவரை.

ராகுகாலம்: பிற்பகல் 4.30 முதல் 6.00 மணிவரை.

எமகண்டம்: நண்பகல் 12 முதல் 1.30 மணிவரை.

குளிகை: பிற்பகல் 3.00 முதல் 4.30 மணிவரை.

வாரசூலை: மேற்கு.

அதிர்ஷ்டஎண்கள்: 2, 7, 9, 6.

தினப்பலன்:

மேஷம்: மதிப்பு உயரும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். முயற்சி வீண்போகாது. பணம் வரும்.

ரிஷபம்: இடமாற்றம் உண்டாகும். செலவுகள் கூடும். பிற்பகலில் ஒரு எண்ணம் நிறைவேறும்.

மிதுனம்: செலவுகள் அதிகரிக்கும். கனவு தொல்லை தரும். பிற்பகலில் அதிக ஆதாயம் கிடைக்கும். மனத்துணிவு அதிகமாகும்.

கடகம்: முற்பகலில் முக்கியமான எண்ணம் ஈடேறும். பிற்பகலில் தொழில் ரீதியாக இடமாற்றம் உண்டாகும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.

சிம்மம்: காரியத்தில் வெற்றி கிடைக்கும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு கூடும். இயந்திரப்பணிகள் ஆக்கம் தரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள்.

கன்னி: சிறு சங்கடம் ஏற்படும். பிற்பகலில் ஒரு காரியம் நிறைவேறும். பண வரவு சற்று அதிகரிக்கும்.

துலாம்: முற்பகல் சோதனையானது. பிற்பகலில் நற்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.

விருச்சிகம்: முற்பகலில் நல்ல வாய்ப்புக்கள்கூடிவரும். பிற்பகலில் பிரச்னைகள் சூழும். மன அமைதி குறையும்.

தனுசு: வெற்றி வாய்ப்புக்கள் கூடிவரும். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும். நற்காரியங்கள் கைகூடும்.

மகரம்: புதிய பொருட்சேர்க்கை நிகழும். எதிர்ப்புக்கள் விலகும். காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

கும்பம்: அலைச்சல் வீண்போகாது. மன உறுதி கூடும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

மீனம்: துணிச்சல் கூடும். மனத்தில் தெளிவு பிறக்கும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். நூதன பொருள் சேரும்.

பொதுப்பலன்: பரணி, பூரம், பூராட நட்சத்திரக்காரர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். எதிர்ப்புக்கள் விலகும். புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். குடும்ப நலம் திருப்தி தரும். பண வரவு அதிகரிக்கும்.

Today Transit (02-04-2017)

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்