ஆப்நகரம்

இன்று நாள் எப்படி?

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். போட்டிகளில் ஈடுபாடு உண்டாகும். மனத்தில் தன்னம்பிக்கை பெருகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். தெய்வப் பணிகள் நிறைவேறும். எதிரிகள் அடங்குவார்கள்.

TOI Contributor 19 Sep 2016, 6:40 am
இன்று நாள் எப்படி?
Samayam Tamil todays transit
இன்று நாள் எப்படி?


கணித்தவர்: நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

19-9-2016, துர்முகி வருடம், புரட்டாசி மாதம் 3-ஆம் தேதி, திங்கள்கிழமை, தேய்பிறை திரிதியை: பிற்பகல் 3.08 மணி வரை; பிறகு சதுர்த்தி. அசுவினி: இரவு 10.30 மணி வரை; பிறகு பரணி. சித்தயோகம். சங்கடஹர சதுர்த்தி. ஸ்ரீவிநாயகப் பெருமானை வழிபடுவது நல்லது. வியாபார, விவசாயப்பணிகளில் ஈடுபடலாம். பயணம் மேற்கொள்ளலாம். முக்கியஸ்தர்களைச் சந்தித்து அளவளாவலாம்.

நல்லநேரம்: காலை 6 முதல் 7 மணிவரை; பிற்பகல் 1 முதல் 2 மணிவரை. பிற்பகல் 3 முதல் 4 மணிவரை.
ராகுகாலம்: காலை 7.30 முதல் 9.00 மணிவரை.
எமகண்டம்: முற்பகல் 10.30 முதல் 12.00 மணிவரை.
குளிகை: பிற்பகல் 1.30 முதல் 3.00 மணிவரை.
வாரசூலை: கிழக்கு.
அதிர்ஷ்டஎண்கள்: 1, 7, 9, 2.


தினப்பலன்:
மேஷம்: ஆன்மிகப்பணிகளில் நாட்டம் கூடும். எதிர்ப்புக்கள் விலகும். சாதுக்களின் தரிசனம் கிட்டும்.

ரிஷபம்: ஒரு காரியம் நிறைவேறும். நல்ல இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.

மிதுனம்: நற்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். முக்கியமானதொரு எண்ணம் ஈடேறும். தந்தை நலனில் கவனம் தேவை.

கடகம்: ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். ஒரு காரியம் நிறைவேறும். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை.

சிம்மம்: தெய்வப் பணிகள் நிறைவேறும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவை.

கன்னி: மனக்குழப்பம் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை. புதிய முயற்சிகளை ஒத்திப்போடவும்.

துலாம்: வாழ்க்கைத்துணைவராலும் மக்களாலும் இடர்ப்பாடுகள் உண்டாகும். பிறரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது.

விருச்சிகம்: எதிர்ப்புக்கள் விலகும். பண நடமாட்டம் அதிகரிக்கும். அலைச்சல் வீண்போகாது. தாய் நலனில் கவனம் தேவை.

தனுசு: தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்ப்புக்கள் குறையும். மக்களால் சிறு சங்கடம் ஏற்படும்.

மகரம்: அலைச்சல் கூடும். குடும்பத்தில் சச்சரவுகள் அதிகரிக்கும். பேச்சிலும் செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

கும்பம்: வெற்றி வாய்ப்புக்கள் கூடும். எதிர்ப்புக்கள் குறையும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

மீனம்: பண வரவு கடினம். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். இடமாற்றம் உண்டாகும்.

பொதுப்பலன்: மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். போட்டிகளில் ஈடுபாடு உண்டாகும். மனத்தில் தன்னம்பிக்கை பெருகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். தெய்வப் பணிகள் நிறைவேறும். எதிரிகள் அடங்குவார்கள்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்