ஆப்நகரம்

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் வார ராசிபலன் 2021 நவம்பர் 01 முதல் 07 ம் தேதி வரை!

சிம்மம்: கணவன் மனைவிடையே இருந்த மனக்கசப்பு மாறும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.கன்னி: உத்யோகத்தில் எதிர்பாராத அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரத்தை திட்டமிட்டு செய்யவும்.துலாம் : பண வரவு நன்றாக இருக்கும். திறமைகள் வெளிப்பட ஆரம்பிக்கும். விருச்சிகம் : குடும்பத்தில் சோதனைகள் விலகும். அதிகாரிகளிடம் மனஸ்தாபம் ஏற்படலாம்.

Samayam Tamil 1 Nov 2021, 2:03 pm

ஹைலைட்ஸ்:

  • சிம்மம்: கணவன் மனைவிடையே இருந்த மனக்கசப்பு மாறும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.
  • கன்னி: உத்யோகத்தில் எதிர்பாராத அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரத்தை திட்டமிட்டு செய்யவும்.
  • துலாம் : பண வரவு நன்றாக இருக்கும். திறமைகள் வெளிப்பட ஆரம்பிக்கும்.
  • விருச்சிகம் : குடும்பத்தில் சோதனைகள் விலகும். அதிகாரிகளிடம் மனஸ்தாபம் ஏற்படலாம்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Vara Rasipalan
Leo Weekly Horoscope - சிம்மம் வார ராசிபலன்
அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் பல தடைகளுக்கு பின் சுப நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். நீங்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த காரியம் நிறைவேற சிறிது தாமதம் ஆகும். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். தகுதி மீறிய செயலில் ஈடுபட வேண்டாம். வெளியூர் பயணம் அளவுடன் மேற்கொள்ளவும். உறவினர்கள் ஓரளவு உதவுவர். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.
சிம்மம், கன்னி நவம்பர் 2021 மாத ராசி பலன்

கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கணவன் மனைவிடையே இருந்த மனக்கசப்பு மாறும். மனைவி விரும்பி கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். நண்பர்களுடன் கவனமாக பேசு பழகவும். உங்கள் செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். உத்யோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் வார ராசிபலன் 2021 நவம்பர் 01 முதல் 07 ம் தேதி வரை!

Virgo Weekly Horoscope - கன்னி வார ராசிபலன்
அன்பர்களே, இந்த வார பலன்படி, நீங்கள் ஒரு சில விஷயங்களில் மற்றவர்களுக்காக வளைந்து கொடுக்க வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்னையும் இருக்காது. நண்பர்களின் சந்திப்பும் அவர்களால் நன்மைகளும் ஏற்படும். உடன்பிறப்பு வகையில் பண விரையம் ஏற்படும். கணவன் மனைவிடையே நல்ல புரிதல் இருக்கும்.

தனுசு, மகரம், கும்பம், மீனம் வார ராசிபலன் 2021 நவம்பர் 01 முதல் 07 ம் தேதி வரை!

குடும்பத்தை பற்றிய கவலைகள் அடிக்கடி வரும். உங்கள் விருப்பத்துக்கு மாறாக சில காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். முக்கிய செயல்களில் முன்யோசனையுடன் ஈடுபட வேண்டும். பொது விவகாரங்களில் தலையிட வேண்டாம். வீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு பின்பற்றவும். கடன் தொந்தரவு பெருமளவில் குறையும். உத்யோகத்தில் எதிர்பாராத அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரத்தை திட்டமிட்டு செய்யவும்.

தீபாவளி பண்டிகை 2021 எப்போது?- கங்கா ஸ்நானம் மற்றும் தீபாவளி மகாலட்சுமி பூஜை செய்வது எப்படி?

Libra Weekly Horoscope - துலாம் வார ராசிபலன்
அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் உள்ளவர்களின் உதவிகள் கிடைக்கும். சுபச்செலவு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் நன்மை உண்டாகும். உங்கள் குடும்ப விவகாரங்களில் மற்றவர்கள் தலையிடாமல் பார்த்துக்கொள்ளவும். பண வரவு நன்றாக இருக்கும். செலவுகள் பற்றி பெரியதாக கவலைப்பட வேண்டியதில்லை. கடன்களை அடைத்துவிடவும் வாய்ப்புண்டு.

துலாம், விருச்சிகம் நவம்பர் 2021 மாத ராசி பலன்

நண்பர்கள் ஒத்துழைப்பு நல்ல விதமாக இருக்கும். கணவன் மனைவிடையே அடிக்கடி ஈகோ பிரச்சனை வந்து போகும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்பட ஆரம்பிக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை நீங்கும்.

நவம்பர் மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள்

Scorpio Weekly Horoscope - விருச்சிகம் வார ராசிபலன்
அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்துக்காக நிறைய விஷயங்களை தியாகம் செய்ய வேண்டிவரும். குடும்பத்தில் அனைவரிடமும் அன்பாக பேசி பழகுவது நல்லது. உடல் நலம் சீராகும். பண வரவுக்கு எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் செலவுகள் அனைத்தும் உங்கள் கட்டுக்குள் இருக்கும். உங்கள் திட்டங்களை பற்றி விவாதிப்பதை தவிர்ப்பது நல்லது.

தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்கான நவம்பர் மாத ராசிபலன் 2021

வழக்குகளில் சாதகமான போக்கு இருக்கும். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகை மாறும். குடும்பத்தில் இருந்த சோதனைகள் விலகும். சில நேரங்களில் எதை செய்வது எதை விடுவது என்ற தடுமாற்றம் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் மனஸ்தாபம் ஏற்படலாம். சிறிய முதலீட்டில் புதிய தொழில் ஒன்றை தொடங்க முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்