ஆப்நகரம்

தனுசு, மகரம், கும்பம், மீனம் வார ராசிபலன் 2021 நவம்பர் 22 முதல் 28ம் தேதி வரை!

தனுசு : வீண் அலைச்சலால் உடல் நலம் பாதிக்கபடலம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்தது நடக்கும்.மகரம் : உடல் நலத்திலன் அக்கறை அதிகம். மனைவி வழியில் நன்மை கிடைக்கும்கும்பம் : மனக்கவலையால் மன சஞ்சலம் ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டும் கிடைக்கும். மீனம் : வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். ​​காரியத்தடை விலகும்.

Samayam Tamil 29 Nov 2021, 2:46 pm

ஹைலைட்ஸ்:

  • தனுசு : வீண் அலைச்சலால் உடல் நலம் பாதிக்கபடலம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்தது நடக்கும்.
  • மகரம் : உடல் நலத்திலன் அக்கறை அதிகம். மனைவி வழியில் நன்மை கிடைக்கும்
  • கும்பம் : மனக்கவலையால் மன சஞ்சலம் ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டும் கிடைக்கும்.
  • மீனம் : வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். காரியத்தடை விலகும்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Vara Rasipalan
தனுசு வார ராசிபலன்
அன்பர்களே, இந்த வாரம் பலன்படி, ஒரு சில வீண் அலைச்சலால் உடல் நலம் பாதிக்கபடலம், இருந்தாலும் பெரிதாக கவலை பட தேவையில்லை. எப்போதும் உடல் நலத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கவும். எந்த சூழ்நிலையிலும் அவசரப்படாமல் நிதானம் காப்பது நல்லது. குடும்ப வருமானம் சுமாராகவே இருக்கும். மனதில் இனம் புரியாத கவலைகளும் கற்பனை பயமும் ஏற்படலாம்.
கார்த்திகை மாத ராசிபலன் - எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிகள்

வரவேண்டிய பணம் சரியான நேரத்தில் கைக்கு வரும். குடும்ப தேவைகள் அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பாதியை பைசல் செய்ய முடியும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிலும் பொறுமையாக இருந்து காரியம் சாதிக்கவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்தது நடக்கும். .

பரிகாரம் : சூரிய பகவானை வணங்கி வழிபடவும்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் வார ராசிபலன் 2021 நவம்பர் 22 முதல் 28ம் தேதி வரை

மகரம் வார ராசிபலன்
அன்பர்களே, இந்த வார பலன்படி, மறைமுக தொல்லைகள் நீங்கும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். பணவரவு மனமகிழ்ச்சியை தரும். நீங்கள் எதையும் தீர யோசித்து செய்வது நல்லது. உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கவன குறையால் கைநழுவி போய் இருக்கலாம், இருப்பினும் முயற்சியால் அதை திரும்ப பெறுவீர்கள். உடல் நலத்திலன் அக்கறை அதிகம்.

விருச்சிகத்தில் புதன் பெயர்ச்சி : நவம்பர் 21ல் சூரியன், புதன் சேர்க்கையால் ஏற்படும் அதிர்ஷ்ட பலன்கள்

ஒரு சில நேரங்களில் சோம்பல் காரணமாக உங்கள் அன்றாட வேலைகள் பாதிக்கும். உறவினர்களின் ஆதரவு மற்றும் உதவி கிடைக்கும். மனைவி வழியில் நன்மை கிடைக்கும். புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம், சம்பள உயர்வு தேடி வரும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வழிபடவும்

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் வார ராசிபலன் 2021 நவம்பர் 22 முதல் 28ம் தேதி வரை!

கும்பம் வார ராசிபலன்
அன்பர்களே, இந்த வார பலன்ப, வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு வர வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும். வீட்டில் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். வழக்கு சம்பந்தமாக சற்று விட்டுக் கொடுத்து சமாதானமாக போவது நலம். நண்பர்களிடம் ஒரு அளவுடன் பேசி பழகுவது பல வகையில் நல்லது.

உங்களை சார்ந்தவர்களை அனுசரித்து போவதால் மட்டுமே எல்லா பிரச்சனைகளும் சரி செய்து கொள்ள முடியும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. மனைவி மூலம் எதிபாராத உதவி கிடைக்கும். தேவையில்லாத மனக்கவலையால் மன சஞ்சலம் ஏற்படும். மன அமைதி பெற தினமும் தியானம் செய்யவும். உத்யோகத்தில் பாராட்டும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஓரளவு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

பரிகாரம் : சூரிய பகவானை வழிப்படவும்.

குரு பெயர்ச்சி 12 ராசிக்கான ஒரு வரி பலன்கள்

மீனம் வார ராசிபலன்
அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் அனுபவ அறிவை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். குடும்ப செல்வாக்கு வெகுவாக உயரும். உங்கள் ஒவ்வொரு செயல்களும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். நண்பர்களால் சில மனக்கசப்புகள் வந்து நீங்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். மனசங்கடம் வராமல் தடுக்க தினமும் தியானம் செய்யவும்.

காரியத்தடை விலகும். பயணங்களில் கவனம் தேவை. உறவினர்களால் எதிர்பாராத உதவி கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். உடன்பிறப்புகளால் நெருக்கடிகள், செலவுகள் வரலாம். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். எந்த ஒரு காரியத்தையும் சற்று சிரமப்பட்டே முடிக்க வேண்டியதிருக்கும். பொருளாதார வளம் கூடும். தொழில், வியாபாரத்தில் நிறைய ஆலோசனை கிடைக்கும்.

பரிகாரம் : பைரவரை வணங்கி வழிப்படவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்