ஆப்நகரம்

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் வார பலன் 28 மார்ச் முதல் 2 ஏப்ரல் 2022 வரை

மேஷம்: கூட்டு வியாபாரம் செய்வதற்கான புதிய திட்டத்தை யோசிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பாராட்டு, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். ரிஷபம்:உங்கள் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். அவசரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் பயணங்களைத் தவிர்க்கவும்மிதுனம்:நீங்கள் தனிமையை உணர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சலசலப்பான சூழல் இருக்கும். குடும்பத்தின் தேவைகள் அதிகரிக்கும். கடகம்:பணியில் உங்களின் திறமையை நிரூபிப்பதற்கான நல்வாய்ப்புகள் அமையும். புதிய யோசனைகள் திருப்புமுனை ஏற்படுத்தலாம்.

Samayam Tamil 25 Apr 2022, 10:40 am
மேஷம் வார ராசிபலன்
Samayam Tamil Weekly Horosccope

இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும். நேர்மறை எண்ணத்துடன் எந்த ஒரு விஷயத்தையும் அணுகுவீர்கள். அது பணியிடத்தில் சிறப்பாகச் செயல்பட உதவும். கூட்டு வியாபாரம் செய்வதற்கான புதிய திட்டத்தை யோசிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பாராட்டு, சம்பள உயர்வும் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்.

வாரத்தின் பிற்பகுதியில் சில இனம்புரியாத கவலை உங்களை ஆட்கொள்ளும். முதலீடு செய்வதற்கு முன் பொறுமை, நிதி ஆலோசனை தேவை. சில மோசமான சூழ்நிலைகள் உங்களை கோபப்படுத்தும். மாணவர்கள் மனதைக் கட்டுப்படுத்தி கவனமாகப் படிக்கவும். திருமணமாகாதவர்கள் உங்களின் துணையை கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது.

வருமானத்தை அள்ளித் தரப்போகும் சுக்கிரன் : கும்ப ராசியில் சுக்கிரன் அருளும் அற்புதம்
ரிஷபம் வார ராசிபலன்
வாரத்தின் தொடக்கத்தில் உங்களுக்கு சாதகமான சந்திரன் அமைப்பு இருக்கும். பெற்றோர் அல்லது உறவினர்கள் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் தீரும். உங்கள் ஆரோக்கியம் கூடும். பதவி உயர்வு தொடர்பான புதிய பொறுப்புகளை நீங்கள் பெற வாய்ப்புள்ளது.
வழக்கு விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேர வாய்ப்புள்ளது. பணப்புழக்கம் அதிகரிக்கும்.

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் வார பலன் 28 மார்ச் முதல் 2 ஏப்ரல் 2022 வரை
தொழில், வணிகத்தில் உங்களின் போட்டியாளர்களை சிறப்பாக கையாள்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழிலில் பெரிய ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிலை அதிகரிக்கும்.

உங்கள் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் குடும்ப உறவுகள் மேம்படும். அவசரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் பயணங்களைத் தவிர்க்கவும். காதலர்கள் பொறுமையாக இருக்கவும், தேவையற்ற பிரச்னைகள் உருவாக்குவதைத் தவிர்க்கவும். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை.

அஸ்தங்கத்திலிருந்து விடுபடும் குரு : கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

மிதுனம் வார ராசிபலன்
தொழில், வியாபாரத்தில் புதிய அனுபவத்தைப் பெறுவீர்கள். வேலைத் திறனை மேம்படுத்துவீர்கள். புத்திசாலிகளின் சகவாசத்தைப் பெறுவீர்கள். அது உங்களின் செயல்பாடுகளுக்கு மேன்மை தருவதாக இருக்கும். எந்த ஒரு செயலிலும் நல்ல மேன்மை அடைய சுய பரிசோதனை அவசியம். நீங்கள் தனிமையை உணர வாய்ப்புள்ளது.

குடும்பத்தில் சலசலப்பான சூழல் இருக்கும். அதனால் நீங்கள் விட்டுக் கொடுத்துச் செல்வதும், அமைதியைக் காப்பதும் நல்லது. குடும்பத்தின் தேவைகள் அதிகரிக்கும். கூடுதல் செலவாக வாய்ப்புள்ளது. புதிய முதலீட்டில் எச்சரிக்கையுடன் செயல்படவும். உங்கள் போட்டியாளர்களையும் உங்கள் எதிரிகளையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். உங்கள் படைப்பு சிந்தனை மேம்படும். கலை, திரைப்படம், ஆடம்பரம் மற்றும் கவர்ச்சி ஆகியவற்றில் நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள்.

மீன ராசியில் புதன் பெயர்ச்சி: புதாத்திய யோகம் எப்படிப்பட்ட பலனைப் பெறும் ராசிகள்
கடகம் வார ராசிபலன்
வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்கின்றது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். அதனால் பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். முடிவுகளை எடுக்க வேண்டாம். உங்களின் பொறுப்புகள் கூடும். உத்தியோகத்தில் பணிச்சுமை, அலைச்சல் சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் செயல்திறன் குறையும்.

ராகு கேது பெயர்ச்சி 12 ராசிக்கான ஒரு வரி பலன்கள்
வாரத்தின் பிற்பகுதியில் நற்பலன்களை அதிகமாகப் பெறலாம். பணியில் உங்களின் திறமையை நிரூபிப்பதற்கான நல்வாய்ப்புகள் அமையும். புதிய யோசனைகள் திருப்புமுனை ஏற்படுத்தலாம்.
சுற்றியுள்ளவர்களுக்கு நீங்கள் உதவுவீர்கள். அது சமூகத்தில் உங்கள் நற்பெயரை அதிகரிக்கும். முதலாளியுடனான உங்கள் உறவுகள் மேம்படும். உங்கள் எதிரிகள் மற்றும் வணிக போட்டியாளர்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்