ஆப்நகரம்

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் வார ராசிபலன் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 3ம் தேதி வரை!

சிம்மம்: வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.கன்னி: சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெறுவீர்கள். குடும்ப பொருளாதாரம் வெகுவாக உயரும். துலாம்: எதிலும் பொறுமையுடனும் செயல்படவும். தொழிலில் அதிகம் முயற்சிக்க வேண்டியிருக்கும்.விருச்சிகம்: உடல் ஆரோக்கியம் மேன்மை தரும். சுப நிகழ்ச்சிகள் தொடர்பாக நிறைய அலைச்சல் இருக்கும்.

Samayam Tamil 27 Sep 2021, 10:36 am
சிம்மம் வார பலன் : Simmam Intha Vara Palan
Samayam Tamil Weekly Horoscope

சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார ராசி பலன்படி, மன நிம்மதிக்காகத் தினமும் தியானம் செய்யவும். முக்கிய காரியங்கள் எல்லாவற்றிலும் சிறப்பாக செயல்பட முடியும். வரவேண்டிய பணம் எந்த தடையுமின்றி வரும். உடன் பிறப்பால் சுப விரயங்கள் நிறைய உண்டு.

எதிர்பாராத வகையில் மருத்துவச் செலவு வரும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். எந்த ஒரு விஷயத்திலும் முன் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிவரும். வெளி நபர்களிடம் அனுசரித்துச் செல்வது பல வகையில் நன்மை தரும். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டாகும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

பரிகாரம் : தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் வார ராசிபலன் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 3ம் தேதி வரை!

கன்னி வார பலன் : Kanni Intha Vara Palan
கன்னி ராசி அன்பர்களே, இந்த வார ராசி பலன்படி, சொந்த பந்தங்களின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள். புதிய முயற்சிகள் மூலம் வெற்றிகள் தேடி வரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெறுவீர்கள்.

ஆன்மீகத்தில் ஆர்வம் கூடும். உங்களுடைய எண்ணங்களும் திட்டங்களும் நல்ல முறையில் செயல்படும்; வெற்றியடையும். புதிய முயற்சிக்காக பல புதிய நபர்களை சந்திக்க வேண்டி வரும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர். குடும்ப பொருளாதாரம் வெகுவாக உயரும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழில், வியாபாரத்தில் மேன்மை நிலை உண்டாகும்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்

துலாம் வார பலன் : Thulam Intha Vara Palan
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார ராசி பலன்படி, பணத் தேவைகள் அதிகம் இருப்பதால் அதற்காக நிறைய அலைய வேண்டிருக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாகவே இருப்பார்கள். எதிலும் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்படவும். உடல் நலம் பாதிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.

சில நேரங்களில் குடும்ப பாரம் காரணமாக அமைதி குறையலாம். பெரியோர்களின் தலையீட்டால் குடும்ப பிரச்சனைக்கு தீர்வு வரும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு படிப்படியாகக் குறையும். தொழிலில் அதிகம் முயற்சிக்க வேண்டியிருக்கும்.
பரிகாரம் : மகாலக்ஷ்மியை வணங்கி வழிபடவும்

உங்களின் சிறப்பு குணம் என்ன? - நீங்கள் மற்றவர்களை எப்படி ஊக்குவிப்பீர்கள் தெரியுமா?

விருச்சிகம் வார பலன் : Viruchigam Intha Vara Palan
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார ராசி பலன்படி, உங்களுக்கு வேண்டியவர்களிடம் முக்கிய விஷயங்களில் அனுசரித்து செல்வது நன்மை தரும். எப்போதும் அனாவசிய பேச்சுக்களை தவிர்ப்பது மூலம், வரும் பிரச்னைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியம் மேன்மை தரும்.

மிகவும் அதிர்ஷ்டம் செய்த ராசிகள் யார் தெரியுமா?

கணவன் மனைவி வகையில் ஆரோக்கிய குறைவு ஏற்படும்.சுப நிகழ்ச்சிகள் தொடர்பாக நிறைய அலைச்சல் இருக்கும். மன நிம்மதிக்காக தினமும் தியானம் செய்யவும். தான தர்ம காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு உண்டு. தொழில், வியாபாரம் புதிய பாதையில் செல்லும்.

பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்

அடுத்த செய்தி

டிரெண்டிங்