ஆப்நகரம்

தனுசு, மகரம், கும்பம், மீனம் வார பலன் 28 மார்ச் முதல் 2 ஏப்ரல் 2022 வரை

தனுசு: தொழில், வியாபாரத்தில் திட்டமிடலும், கவனமும் தேவை. பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன.மகரம்: எதைச் செய்தாலும் கவனமாக செய்யுங்கள். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.கும்பம்: உங்கள் வீண் பேச்சு, சந்தேகம் காதல் உறவுகள் முறிந்து விடும். வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.மீனம்: தொழில், வணிகர்களுக்கு சவாலானதாக இருக்கும். கடினம் உழைப்பு அந்த சவால்களிலிருந்து மீண்டு வெற்றியைத் தரும்.

Samayam Tamil 25 Apr 2022, 10:40 am
தனுசு வார ராசிபலன்: பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன
Samayam Tamil Vaara Rasipalan

தனுசு ராசிக்கு இந்த வாரம் மகிழ்ச்சி தரக்கூடிய வாரமாக இருக்கும். பொருள், தன வசதியைப் பெறுவீர்கள். எதிர்காலம் குறித்த யோசனை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிடலும், கவனமும் தேவை. பெற்றோரின் உடல் நலனில் அக்கறை செலுத்தவும். மாணவர்களுக்கு கடினமான மற்றும் சவாலான நேரமாக இருக்கும். பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன.

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் வார பலன் 28 மார்ச் முதல் 2 ஏப்ரல் 2022 வரை
மகரம் வார ராசிபலன்: நிதி விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை.
மகர ராசியினர் இந்த வாரம் எச்சரிக்கையாக நடக்க வேண்டிய வாரம். பேச்சில் நிதானம் தேவை. தேவையற்ற தகராறு ஏற்படலாம். நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளிலும் கவனம் தேவை. நீங்கள் எதைச் செய்தாலும் கவனமாக செய்யுங்கள். குறிப்பாக நிதி விஷயங்களில் அதிக கவனம் தேவை. வேலை செய்பவர்களுக்கு நெருக்கடியும் ஏற்படலாம். உங்கள் சொந்த ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

மகர ராசி குரு பெயர்ச்சி பலன்கள் - திருமணம் நடக்கும்,பதவி உயர்வு கிடைக்கும்
கும்பம் வார ராசிபலன்: சொத்து, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.
கும்ப ராசிக்கு வாழ்க்கைத் துணையின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். காதல் உறவுகளில் ஆதிக்கம் செலுத்த வேண்டாம், உங்கள் வீண் பேச்சு, சந்தேகம் காதல் உறவுகள் முறிந்து விடும். திருமணமானவர்கள், திருமண வாழ்க்கை இனிமையான விஷயங்கள் நடக்கும். இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்துவது நல்லது. சொத்து, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் வார பலன் 28 மார்ச் முதல் 2 ஏப்ரல் 2022 வரை

மீனம் வார ராசிபலன்: வணிகர்களுக்குச் சவாலான நேரம்
மீன ராசிக்கு பேச்சின் பலத்தாலும், அறிவார்ந்த திட்டங்கள், முயற்சிகளால் சிறப்பான வெற்றியை அடையக்கூடியதாக இருக்கும். கல்வித்துறையில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். காதல் உறவுகள் விஷயத்தில் இனிமையான தருணங்கள் அமையும்.

மீனம் ராசி ராகு கேது பெயர்ச்சி 2022-2023 : பேச்சைக் குறைப்பது மிகவும் நல்லது
தொழில், வணிகர்களுக்கு இந்த வாரம் சவாலானதாக இருக்கும். இருப்பினும் உங்களின் கடினம் உழைப்பு அந்த சவால்களிலிருந்து மீண்டு வெற்றியைத் தருவதாக இருக்கும். வாகன வகையில் மகிழ்ச்சி கூடும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்