ஆப்நகரம்

இந்த வார ராசிபலன் - டிசம்பர் 17 - 23 வரை!!

மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு டிசம்பர் 17ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ராசிபலன் உங்களுக்காக!

Samayam Tamil 13 Sep 2021, 8:50 am
மேஷம்!
மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, பணப்புழக்கம் நன்றாக உள்ளது. மேலும், வரவேண்டிய நிலுவை பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை உருவாகும். பெரியோர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்

ரிஷபம்!
ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, புதிய முற்சிகள் மூலம் பல வெற்றிகள் கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்சிகள் நடைபெறும். பண வரவு கணிசமான முறையில் உயரும். உத்தியோகம் தொடர்பாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.
பரிகாரம் : தினமும் கிருஷ்ண கவசம் படிக்கவும்

மிதுனம்!
மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி,சிந்தித்து செயல்படுவதால் பல காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். புதிய மனிதர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். புதிய நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவது நல்லது.
பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வழிபடவும்

கடகம்!
கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நண்பர்கள் வகையில் விரோதம் உண்டாக வாய்ப்புணடு. உறவினர்களோடு சுமுக உறவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்கள் முடியாத இருந்த காரியம் சீக்கிரத்தில் முடியும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்

சிம்மம்!
சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் சந்தோஷ தருணங்கள் ஏற்படும். பல நல்ல செய்திகள் உங்களை வந்து சேரும். தேவையில்லாத விஷயங்களில் ஆர்வம் காட்டாமல் இருப்பது நல்லது. வசதி வாய்ப்புகள் வெகுவாக உயரும்.
பரிகாரம் : சூரிய பகவானை வழிபடவும்

கன்னி!
கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப பெரியோர்களிடம் உங்கள் குறைகளை சொல்லவும். எதிர்பாராத பல செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் வசதிகள் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் வேலை பளு குறையும்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்

துலாம்!
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, பல பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகனத்தால் செலவுகள் ஏற்படலாம். உங்களது பெயர் புகழ் கீர்த்தி விருத்தி அடையும். பெண்களால் பண உதவி உண்டு.
பரிகாரம் : சுக்கிர பகவானை வழிபடவும்

விருச்சிகம்!
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். வாகனம் ஓட்டும் போது மிகுந்த கவனம் தேவை. மனைவி மூலம் எதிர்பாராத உதவி கிடைக்கும். தேவையில்லாத மனக்கவலையால் மன சஞ்சலம் ஏற்படும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்

தனுசு!
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள நேரும். மனைவியால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் தனி திறமை வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் கணக்கு வழக்குகளை சரியாக வைத்து கொள்ளவும்.
பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிபடவும்

மகரம்!
மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீங்கள் எதிர்பார்த்த உதவி நண்பர்களின் மூலம் தக்க சமயத்தில் கிடைக்கும். எதிர்பாராத சில வெளியூர் பயணங்கள் செய்யவேண்டி இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் அபரிமிதமாக இருக்கும்.
பரிகாரம் : நவக்கிரத்தை தினமும் 9 முறை வலம் வரவும்

கும்பம்!
கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, பண வரவு அதிகரிக்கும், ஆடம்பர செலவு ஏற்படும். குடும்பத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். உடன்பிறப்பு வகையில் உதவி கிடைக்கும். உடல் உபாதைகள் படிப்படியாக குறையும்.
பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும்

மீனம்!
மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களை விரும்பாதவர்கள் சிலர் பின் தள்ளி உங்களை முந்தி செல்ல நினைப்பவர்கள். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. மனைவி வழியில் நன்மை கிடைக்கும். பெண்கள் வகையில் சில அனுகூலம் உண்டு.
பரிகாரம் : சீரடி சாய் பாபாவை வணங்கி வழிபடவும்

அடுத்த செய்தி

டிரெண்டிங்