ஆப்நகரம்

தனுசு தமிழ் புத்தாண்டு பலன்கள் - குரு, சனி பெயர்ச்சி தரும் அற்புத பலன்

தனுசு ராசிக்கு இந்த சுபகிருது தமிழ் புத்தாண்டு ஏற்ற இறக்கங்களைத் தரக்கூடியதாக இருக்கும். குரு பெயர்ச்சி உங்களுக்கு அற்புத பலனைத் தரக்கூடியதாக இருக்கும். அதே சமயம் நீங்கள் சனி அதிசார பெயர்ச்சியால் ஏழரை சனியிலிருந்து சில மாதங்கள் விடுதலை பெறுவீர்கள். ராகு - கேது பெயர்ச்சி உங்களுக்கு ஓரளவு சாதகமான பலனைத் தரக்கூடியதாக இருக்கும்.

Samayam Tamil 30 Mar 2022, 1:10 pm

ஹைலைட்ஸ்:

  • தனுசு ராசிக்கு தமிழ் புத்தாண்டில் குரு பெயர்ச்சி உங்களுக்கு அற்புத பலனைத் தரக்கூடியதாக இருக்கும்.
  • அதே சமயம் நீங்கள் சனி அதிசார பெயர்ச்சியால் ஏழரை சனியிலிருந்து சில மாதங்கள் விடுதலை பெறுவீர்கள்.
  • ராகு - கேது பெயர்ச்சி உங்களுக்கு ஓரளவு சாதகமான பலனைத் தரக்கூடியதாக இருக்கும்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Dhanusu Tamil New Year
தனுசு தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - குரு, சனி,ராகு கேது பெயர்ச்சி தரும் அற்புத பலன்
2022ம் ஆண்டு சுபகிருது தமிழ்ப் புத்தாண்டுக்கு முன் குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி நடப்பதோடு, புத்தாண்டு தொடங்கி இரு வாரத்திலேயே சனி அதிசார பெயர்ச்சி நிகழ்கிறது.
இப்படி குரு, ராகு - கேது, சனிப் பெயர்ச்சி என மூன்று முக்கிய கிரகங்களும் பெயர்ச்சி அடைய உள்ள நிலையில் இந்தாண்டு பலன் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

ராகு கேது பலன் :
தனுசு ராசிக்கு கலவையான பலன்களைத் தருவதாக ராகு - கேது பெயர்ச்சி பலன் இருக்கும்.
ராகு தரும் பலன்: பிள்ளைகள் வழியில் செலவுகள் ஏற்படும். சொந்தங்களிடையே இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும்.
கேது தரும் பலன்: பயணங்கள் அதிகம் செய்ய வேண்டியது இருக்கும். வெளியூர் பயணத்தால் லாபம் உண்டாகும்.

தனுசு ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022 - வேலையில் முன்னேற்றம் ஏற்படும்

சனி பெயர்ச்சி பலன்:
சனி பகவான் ஏப்ரல் 28ம் தேதி அதிசார பெயர்ச்சியாக கும்ப ராசிக்கு செல்ல உள்ளார். 12 ஜூலை வரை கும்பத்தில் இருப்பார். அதுவரை தனுசு ராசிக்கு ஏழரை சனியிலிருந்து விடுதலை கிடைக்கும்.

இந்த காலத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் முயற்சிகளுக்கு நற்பலனைத் தரக்கூடிய காலமாக இருக்கும் என்பதால் கடின உழைப்பை மேற்கொள்ளுங்கள்.

குரு பெயர்ச்சி 2022:
குரு ஏப்ரல் 13ம் தேதி மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆக உள்ளார்.

கால புருஷ தத்துவத்தில் 9ம் வீடாக அமைந்திருப்பது தனுசு ராசி. குரு பகவான் அதிபதியாக கொண்ட தனுசு ராசிக்கு மூல திரிகோண வீடு, திரிகோணத்தில் அமையும் கிரகம் குரு பகவான்.

தனுசு ராசிக்கு 4ம் வீடான சுக ஸ்தானத்தில் குரு பெயர்ச்சி ஆக உள்ளார். சுக போகங்கள் கூடும்.

தனுசு குரு பெயர்ச்சி பலன்கள் - வேலை கிடைக்கும், வீடு, மனை யோகம் உண்டு
குரு பார்வை பலன்:
குரு அமர்ந்திருக்கும் இடத்தை விட, அவர் பார்க்கக்கூடிய 5, 7, 9 பார்வை பலன் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

குருவின் 5ம் பார்வை : மற்றவர்களின் தோல்வி, மற்றவர்களின் நஷ்டத்தினால் உங்களுக்கு கிடைக்கக் கூடிய லாபமாக இந்த பலன் இருக்கும். உடல் உறுப்புகளிலிருந்த வியாதிகள் குணப்படக்கூடிய காலமாக இருக்கும்.

குருவின் 7ம் பார்வை பலன் : வேலை, தொழிலை சிறப்பாக செய்வதற்கான சூழல் அமையும். நல்ல புதிய வேலை அமைய வாய்ப்புள்ளது.


குருவின் 9ம் பார்வை : 12ம் இடமான விரய ஸ்தானம், தூக்கம், மோட்சத்தைக் குறிக்கக்கூடிய ஸ்தானத்தை குருவின் பார்வை விழுவதால், இதுவரை இருந்த அலைச்சல்கள், வீண் செலவுகள் குறையும். குறிப்பாகப் படுத்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

வழிபாடு:
பெளர்ணமி தினங்களில் குல தெய்வ வழிபாடு செய்யவும்.
அடிக்கடி சிவாலய வழிபாடு செய்யவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்