ஆப்நகரம்

கணவன் மனைவி இருவரும் ஒரே ராசிகாரர்களாக இருந்தால் பிரச்சனையா?

கணவன் மனைவி இருவரும் ஒரே ராசியை சேர்ந்தவர்கள் என்றால் பிரச்சனை வருமா?... அதற்கு நாம் என்ன செய்யலாம் என்பதற்கான சில பதில்கள் உங்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் உங்கள் துணையும், ஒரே ராசிகாரர்களாக இருந்தால் என்ன நன்மை என்றும் கூறப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Sep 2022, 4:45 pm
நீங்களும் உங்கள் வாழ்க்கை துணையும் ஒரே ராசியை சேர்ந்தவர்கள் என்றால், உங்கள் இருவருக்கும் பொதுவாக ஒரே மாதிரியாக குணங்கள் இருக்கும். இது சிலசமயங்களில் உங்களுக்கு பிரச்சனையாக அமையலாம். உங்களிடம் உள்ள நல்ல மற்றும் கெட்ட குணங்களை தான் உங்கள் வாழ்க்கைத்துணைக்கும் இருக்கும்.
Samayam Tamil are you dating the same zodiac sign as yours here the good and bad of it in tamil
கணவன் மனைவி இருவரும் ஒரே ராசிகாரர்களாக இருந்தால் பிரச்சனையா?


எனவே, நீங்கள் காதலிப்பவராகவோ அல்லது திருமணம் ஆனவராகவோ இருந்தால் இந்த கட்டுரையை தவறாமல் படியுங்கள். ஏனென்றால், ஒரே ராசிக்காரர்கள் திருமணம் செய்து கொண்டால் ஏற்படும் நாமக்கல் மற்றும் தீமைகள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

​மேஷம்

நீங்களும் உங்கள் வாழ்க்கைத்துணையும் மேஷ ராசியாக இருந்தால், உங்கள் வாழ்க்கை போட்டி நிறைந்ததாக இருக்கும். இருவரும் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். எதிர்காலத்தில் ஏதாவது சிறிய தவறு நடந்தால் கூட ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குறை கூறுவீர்கள்.

இந்த வாரம் எந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்?

மறுபுறம், நீங்கள் ஒருவருக்கொருவர் உணர்ச்சிவசப்பட்டு, வேடிக்கையாக இணைந்து இருப்பீர்கள். இருவருக்கும் அடிக்கடி சண்டைகள் நிகழும் என்பதால், நியாயமான முறையில் போராடுவது மட்டுமே உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.

​ரிஷபம்

நீங்கள் இருவரும் ஒரே மனநிலை கொண்டவராக இருந்தால் மிகவும் நல்லது. இல்லையெனில், நீங்கள் இருவரும் உங்கள் ஆறுதல் மண்டலத்தை விரிவாக்க வேண்டும். இது உங்கள் இருவருக்கும் எளிதான பணி அல்ல. ஏனென்றால், நீங்கள் இருவரும் அவரவருக்கான சுய யோசனை மற்றும் கருத்துகளில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள்.

இந்த ராசிக்காரர்கள் உடலை பார்த்து காதலிப்பார்களாம்!

ஒருவேளை, உங்களில் ஒருவர் அமைதியானவராகவும் மற்றொருவர் வளவள என பேசுபவராக இருந்தால் உங்கள் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை உண்டாகும். இருப்பினும், வீட்டில் நீங்கள் செய்யும் சிறிய குறும்பு மற்றும் ஊடலுடன் கூடிய கூடலால் இருவரும் மனமகிச்சியுடன் இருப்பீர்கள்.

மிதுனம்

இந்த ராசியுடைய கணவன் மற்றும் மனைவி இருவருக்கொருவர் அன்பாகவும் அந்யோனியமாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு இடையில் எந்தவிதமான சலிப்பும் ஏற்படாது. ஆனால், இருவருக்கும் இடையிலான போட்டி அதிகமாக இருக்கலாம். எனவே, உங்களில் ஒருவர் பொறுமையாகவும் நிதானமாக யோசித்து செயல்படுபவராக இருக்க வேண்டும்.

அப்போதுதான் உங்கள் வாழ்க்கையை செழிப்பாகவும், அமைதியாவும் எடுத்து செல்ல முடியும். இல்லையெனில், நீங்கள் இருவரும் நீண்ட காலம் ஒன்றாக இணைந்து வாழ்வது கடினமாகும். என்னதான் இல்லறவாழ்வில் மகிழ்ச்சி இருந்தாலும் சிறு சிறு விஷயங்களுக்கு அடிக்கடி சண்டை நிகழலாம்.

​கடகம்

நீங்களும் உங்கள் வாழ்க்கைத்துணையும் கடக ராசிக்காரர்களாக இருந்தால், அது மிகவும் நல்ல விஷயம். ஏனென்றால், நீங்கள் இருவரும் சரியான ஜோடி. நீங்கள் இருவரும் வீட்டில் நேரத்தை செலவிடுவதில் அக்கறையும் அன்பும் உள்ளவர்கள். உங்கள் இருவருக்குள்ளும் உள்ள மிகப்பெரிய குறை என்னவென்றால், உங்களிடம் சகிப்புத்தன்மை மிகவும் குறைவாக இருக்கும்.

உங்க கண்களை வைத்து நீங்க எப்படி பட்டவர் என ஈஸியா கணிக்கலாம்!

ஒருவொருக்கொருவர் தங்களின் மனநிலையை புரிந்து நடந்து கொள்வது இருவருக்கும் இடையிலான ஆசைகளை புரிந்து கொள்ள உதவும். நீங்கள் இருவரும் சிறந்த பெற்றோர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

​சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்கள் வியப்பாகவே சுறுசுறுப்புக்கு குறை இல்லாதவர்கள். இருப்பினும், நீங்களும் உங்கள் வாழ்க்கைத்துணையும் சிம்ம ராசிக்காரர்களாக இருந்தால், இருவருக்குமே அதிக கவனம் தேவை. ஏனென்றால், உங்களை போன்ற குணம் கொண்டவர்தான் உங்கள் உங்கள் துணையும்.

எனவே, உங்களின் கவனம் அவர் மீது இல்லாத போது அவர்கள் வருத்தப்படலாம். இருவருக்கும் ஆசைகள் அதிகமாக இருக்கும். பாலியல் ரீதியாக நீங்கள் ஒரு சிறந்த ஜோடியாக இருந்தாலும், ஒரு சிறிய கணம் கூட உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தும். ஒருவருக்கு ஒருவர் சமமான முக்கியத்துவம் கொடுக்கவேண்டியது முக்கியம்.

​கன்னி

நீங்களும் உங்கள் துணையும் ஆரோக்கியம் மற்றும் சேவையின் பணிபுரிந்து வருபவராக இருந்தால், உங்கள் வாழ்க்கை தவிர்க்கமுடியாத போட்டியாக அமையும். ஒருபோதும் மற்றவரை திருத்தவோ அல்லது அவர்களின் நடத்தையை விமர்சிக்கவோ ஒருபோதும் முயற்சிக்காதீர்கள். அது உங்களுக்கு கசப்பான அனுபவத்தை மட்டுமே கொடுப்பதுடன் உங்கள் உற்சாகத்தையும் கொல்லும்.

உங்கள் உறவை அதிகமாகப் பகுப்பாய்வு செய்வது உங்களை பலவீனப்படுத்தலாம். இருவரும் ஒன்றாக தோட்டத்தை பராமரிப்பது அல்லது யோகா பயிற்சி செய்வது போன்ற பல செயல்களில் ஈடுபடலாம். இதனால், நீங்கள் இருவரும் நிச்சயமாக ஒருவருக்கொருவர் அன்பானவர்களாக இருப்பீர்கள்.

​துலாம்

நீங்கள் இருவரும் மற்றவரை மகிழ்விப்பதோடு, ஒருவருக்கொருவர் நேர்மையாக உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து கொள்வதால், உங்கள் வாழ்க்கை இனிமையானதாக மாறும். வெளிப்படையாக உங்கள் இருவருக்கும் கருத்து வேறுபாட்டால் பிரச்சனைகள் இல்லாவிட்டாலும், உங்களுக்குள் அமைதியின்மையை உணரும்போது அன்பின் அழகிய உருவத்தை ஒருவருக்கு ஒருவர் வெளிப்படுத்துகிறீர்கள். உங்கள் உறவு முன்னேற வேண்டுமென்றால் வாழ்க்கையின் சமநிலைப்படுத்த தயாராக இருங்கள்.

​விருச்சிகம்

ஸ்கார்பியோ இயல்பாக பேரார்வம், ஆபத்து மற்றும் சூழ்ச்சி ஆகிய குணங்களை கொண்டவர்கள். இந்த உறவில் உங்களுக்கான மிக முக்கியமான காரணி நம்பிக்கை. நீங்கள் இருவரும் சந்தேகத்திற்கிடமானவர்களாகவோ அல்லது பாதுகாப்பற்றவர்களாகவோ இருந்தால், உங்கள் உறவில் ஏற்றத் தாழ்வுகளை சந்திக்கலாம். உங்கள் ஆழ்ந்த உணர்வுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது முக்கியம். ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொண்டால் மட்டுமே உங்களுக்குள் இணக்கமான சமநிலை உருவாகும்.

​தனுசு

நீங்களும் உங்கள் துணையும் தனுசு ராசிக்காரர்களாக இருந்தால், நீங்கள் வாழ்க்கையில் நிறைய இன்னல்களை சந்திக்கவேண்டி இருக்கும். அத்துடன், அதிகமான ஏற்ற தாழ்வுகளையும் அனுபவிப்பீர்கள். உங்கள் வலுவான கருத்துக்கள் கலகலப்பான விவாதங்களை ஏற்படுத்தலாம். நீங்கள் இருவரும் சிறு சிறு விஷயங்களை கூட பார்த்து பார்த்து செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். உங்களில் ஒருவர் மற்றொருவரை விட்டு விலகிச் செல்ல நினைப்பதுதான் உங்களுக்குள் இருக்கும் உண்மையான பிரச்சனை. ஒரு நல்ல ஆன்மீக நோக்கம் உங்கள் இருவரையும் ஒன்றாக வைத்திருக்க உதவுகிறது.

​மகரம்

நீங்கள் இருவரும் ஒரு தீவிரமான யதார்த்தவாதிகள் என்பதால், உங்கள் காதல் வாழ்க்கையில் போட்டியிட எப்போதும் நீங்கள் விரும்புவதில்லை. இருப்பினும், அந்த இயல்பு மற்ற நபர் உண்மையில் நீங்கள் யார் என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.

இந்த உறவில் நீங்கள் நீங்களாகவே இருக்க முடியும். இல்லற வாழ்க்கையை வளர்ப்பதில் கவனம் செலுத்தவும். உங்கள் உலக லட்சியங்கள் அல்லது அந்தஸ்தின் தேவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.

​கும்பம்

இவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வதை விட அவர்களுக்கான தனித்துவத்தையும் ஆதரிக்கிறார்கள். நீங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கலாம். இருப்பினும், நீங்கள் உணர்ச்சி ரீதியாக பலவீனமாக இருப்பீர்கள்.

எனவே, நீங்கள் இருவரும் உங்கள் உணர்வுகளை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்துவது பிரச்சினைகளைத் தணித்து, பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்காமல் இருக்கும். ஆர்வத்தை வளர்க்க, நீங்கள் உங்கள் சௌகரியமான சூழலில் இருந்து வெளியேற வேண்டும்.

மீனம்

நீங்கள் இருவரும் லட்சியத்துடன் இருப்பவராக இருந்தால், அது உங்களுக்கு ஆதரவாகவும் எதிர்மறையாகவும் செயல்படும். நீங்கள் உலகத்தை அழகாக பார்க்க விரும்புகிறீர்கள். உங்கள் வாழ்க்கைத்துணை தவறு செய்தாலும், அது வேறு ஏதாவது காரணத்தால் நடந்திருக்கலாம் என்ற புரிதலுடன் இருப்பவர் நீங்கள். உங்கள் ஜோடி சிறப்பாக உள்ளது. ஆனால் உங்கள் நிதியை நிர்வகிக்க மூன்றாம் தரப்பினரின் உதவியை நீங்கள் பெற வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்