ஆப்நகரம்

மேஷம் - மிதுனம் ராசிக்கிடையே திருமண பொருத்தம், தாம்பத்திய நெருக்கம் எப்படி இருக்கும்?

Mesham And Midhunam Rasi thirumana Porutham : செவ்வாய் ஆளக்கூடிய நெருப்பு ராசியான மேஷம் மற்றும் புதன் ஆளக்கூடிய காற்று ராசியான மிதுன ராசிக்கும் இடையே திருமண உறவு எப்படி இருக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.

Written byDevaki | Samayam Tamil 2 Nov 2022, 4:48 pm
பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து நிகழ்வுக்களிலும் ஜோதிடம் முக்கிய பங்கு வகிக்ககிறது. அந்தவகையில், புதன் ஆளக்கூடிய காற்று ராசியான மிதுன ராசிக்கும் செவ்வாய் ஆளக்கூடிய நெருப்பு ராசியான மேஷம் ராசிக்கு இடையே திருமண உறவு எப்படி இருக்கும் என இங்கே காணலாம். மேஷத்தில் புதன் சமமாகவும், மிதுனத்தில் செவ்வாய் பகையாகவும் உள்ளனர். இவர்களுக்கு இடையிலான திருமணம், காதல் வாழ்க்கை, உடலுறவு, நட்பு மற்றும் நம்பிக்கை எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ளலாம்.
Samayam Tamil aries and gemini compatibility sexual intimacy marriage compatibility between mesham and midhunam rasi
மேஷம் - மிதுனம் ராசிக்கிடையே திருமண பொருத்தம், தாம்பத்திய நெருக்கம் எப்படி இருக்கும்?


​மேஷம் மற்றும் மிதுனம் பாலுறவு எப்படி இருக்கும்?

ஆற்றல், வலிமை, பெரிய உடல்வாகு தரக்கூடிய செவ்வாய் பகவான் மேஷ ராசியை ஆள்கிறது.

அறிவு, ஆர்வம், சுய இன்பம், புத்ர யோகம், கேளிக்கை, செழிப்பு உள்ளிட்ட விஷயங்களைத் தரக்கூடிய புதன் மிதுன ராசியையும் ஆள்கின்றது.

நெருப்புக்கு காற்றுக்கும் இடையில் நல்ல பொருத்தம் இருக்கும் இவர்கள் இருவரும் சேர்ந்தால், காற்றினால் பரவும் காட்டுத்தீயை போல செயல்படுவார்கள். இந்த இரண்டு ராசிகளுக்கும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய ராசிகள். எனவே, பாலுறவின் போது ஒருவர் மற்றவரை காயப்படுத்துவதில்லை. இதனால், இருவரின் அனுபவங்களுக்கும் உற்சாகமாகவும் தனித்துவமாகவும் இருக்கும்.

Emotional Zodiacs: அதிகமாக உணர்ச்சிவசப்படும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

மேஷம் இயல்பிலேயே சற்று கூச்ச சுபாவம் உடையவர்கள். மிதுனம் உடலுறவில் அதீத ஆர்வம் உடையவர்கள். மிதுன ராசியினர் கட்டில் விளையாட்டை துவக்கிவைத்தால், மேஷ ராசிக்காரர்கள் தீயாய் செயல்படுவார்கள். மேஷத்தின் நெருப்புக்கு மிதுனம் ஆக்ஸிஜனை கொடுப்பதால், இவர்களின் பாலுறவு இன்னும் அதிகரிக்கும்.

​மேஷம் - மிதுனம் பாலுறவு

நெருப்பை போல சூடாக இருப்பவர்கள் மேஷ ராசிக்காரர்கள். மேஷம் ராசியினர் பொதுவாக உடலுறவில் எளிமையாக திருப்தி அடையக்கூடியவர்கள். அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. இந்த விஷயத்தில் மேஷ ராசியினர் அதிக உணர்ச்சிவசப்படாமலும், தன் வலிமையால் எதிர் பாலினத்தை ஆட்கொள்ள நினைக்காமல், பாலுறவுக்கு முன் சிறு, சிறு சிற்றின்ப விளையாட்டில் ஈடுபடுவதை அதிகமாக விரும்புவார்கள்.

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் குணாதிசயம் இதுதான்..!

காற்றை போல மென்மையானவர்கள் மிதுன ராசிக்காரர்கள். மிதுன ராசிக்காரர்கள் தங்கள் துணையுடன் கூடிய பாலியல் உறவை மிகவும் ரசிப்பவர்கள். நிர்வாணம் இவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இல்லாததால், இவர்கள் தங்கள் துணையுடன் ஆக்ரோஷமான பாலுறவை மேற்கொள்வார்கள். அதுமட்டும் அல்ல வெவ்வேறு இடங்களில், வித்தியாசமான பாணியில் உடலுறவு கொள்ள விரும்புவார்கள்.

​மேஷம் & மிதுன ராசியிடையேயான நம்பிக்கை

இந்த இரண்டு ராசிகளுக்கும் இடையேயான உறவில், நம்பிக்கையின்மை மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். உணர்ச்சிவசப்படும் மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுபவர்கள். எனவே, இவர்கள் சற்று பொறாமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

எதுக்கெடுத்தாலும் அழும் அழுமூஞ்சி ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

தந்திரமான மிதுனம் ராசியினர் புதனால் ஆளப்படுபவர்கள். இடத்திற்கும், நேரத்திற்கு ஏற்றார் போல தங்களை மாற்றிக்கொள்ளும் திறமை உடையவர்கள். தங்களை பற்றிய அடிப்படை தனித்துவத்தைப் பற்றி கூட இவர்கள் அறிந்திருப்பதில்லை. ஒரே இரவில் ஆளுமையை மாற்றும் வல்லமை கொண்டவர்கள். எனவே, இவர்கள் மீதான நம்பிக்கை மற்றவர்களுக்கு குறையும். எனவே, ஆரம்பத்திலிருந்தே இருவரும் பரஸ்பர நம்பிக்கையும், விட்டுக் கொடுத்து செல்வது முக்கியம். எந்த விஷயத்தில் பிரச்னை வருகின்றது என்பதை அறிந்து செயல்பட்டால் உங்களின் உறவில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.

​திருமண உறவு எப்படி இருக்கும்

மேஷம் எதையும் எதிர்த்து நிற்கும் வல்லமை கொண்டவர்கள். மிதுனம் அறிவு திறனுடன் செயல்படுபவர். எனவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சற்று விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மிதுன ராசிக்காரர்களின் வார்த்தைகளுக்கு செவி சாய்ப்பது, மேஷம் ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும்.

உடலுறவுகொள்ள செட் ஆகாத ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

மேஷ ராசிக்காரர்கள் தங்களின் வீரத்தை மிதுன ராசிக்காரர்களிடம் காட்டினாள், மிதுன ராசியினர் தங்களின் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி விடுவார்கள். எனவே, மேஷ ராசியினர் சற்று விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. இவர்களின் திருமண உறவில் நகைச்சுவை உணர்வு இருந்தால் நல்லது.

எழுத்தாளர் பற்றி
Devaki
தேவகி ஜெகநாதன் "இதழியல் மற்றும் ஊடகவியல்" - சமயம் தமிழில் Digital Content Producer. ஊடகத்துறையில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்