ஆப்நகரம்

உங்க பெயரின் முதல் எழுத்து N என்றால், உங்க குணம் இதுதான்..!

N Name Personality Traits : உங்கள் பெயரின் முதல் எழுத்து உங்களின் ஆளுமையை குறிப்பதாக கூறப்படுகிறது. எதிர்க்காலத்தில் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள், உங்களின் குணம் எப்படி இருக்கும் என்பதை கணிக்க உங்கள் பெயரின் முதல் எழுத்து முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், N என்ற எழுத்தின் பெயர் தொடங்கும் நபர்களின் குணம் பற்றி இங்கே காணலாம்.

Authored byDevaki | Samayam Tamil 16 Dec 2022, 3:16 pm
N Name Personality : ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தமுடைய பெயர் இருக்கும். நமது பெயர் வெறும் வார்த்தையல்ல, நம் வாழ்நாள் முழுவதும் நம்மை அடையாளம் காட்ட பயன்படுத்தப்படும் ஒரு அடையாளம். இந்த வார்த்தை முத்திரை, நாம் இறந்த பிறகும் நம்மை மற்றவருக்கு அடையாளம் காட்டும். அதன்படி, "N" என்ற எழுத்தில் தொடங்கும் பெயருடைய நபர்களைப் பற்றிய சுவாரஷ்யமான சில விஷயங்களை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
Samayam Tamil check out what your personality trait is if your name starts with n
உங்க பெயரின் முதல் எழுத்து N என்றால், உங்க குணம் இதுதான்..!


​N எனும் ஆங்கில எழுத்து

நவீன ஆங்கில எழுத்துக்களின் 14-வது எழுத்து ‘N’ ஆகும். N என்ற எழுத்தில் பல அம்சங்கள் உள்ளன. இந்த எழுத்தின் பெயரைக் கொண்டவர்கள் நாசீசிஸ்டிக். அதாவது, தங்கள் சொந்த உலகில் மூழ்கி இருப்பார்கள். N என்ற எழுத்தில் பெயர் தொடங்கும் நபர்களிடம் பல சிறப்பான விஷயங்கள் காணப்படுகின்றன.

இவர்களுக்கு மற்றவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் குறைவு. தனது மனதில் பட்டதைச் செய்கிறார்கள். இந்த எழுத்தில் பெயர் கொண்டவர்கள் எப்போது என்ன செய்வார்கள் என்று யாராலும் கணிக்க முடியாது. நீங்கள் மிகவும் கற்பனை மற்றும் உள்ளுணர்வு கொண்டவர்.

அடிக்கடி போலீசிடம் சிக்கும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

என் என்ற எழுத்து ஆர்வம், சாகசம், சுதந்திரம் மற்றும் கவனம் செலுத்துதல் ஆகியவற்றுடன் எதிரொலிக்கிறது. இது சுதந்திரமான வெளிப்பாடு மற்றும் நடைமுறைச் சிந்தனையின் ஆற்றல். உங்கள் பெயரில் முதல் எழுத்தாக N இருந்தால், நீங்கள் வழக்கத்திற்கு மாறானவர்கள். அவர்கள் மற்றவர்களுடன் பழகுவதையும் வேடிக்கையாக இருப்பதையும் விரும்புவார்கள். N உங்கள் பெயரில் கடைசி எழுத்தாக இருந்தால், அவர்கள் தங்கள் திட்டங்களைப் பகிரங்கமாகவும் முடிந்தவரை ஆக்கப்பூர்வமாகவும் முடிப்பவர்.

​N எழுத்தின் சிறப்பு என்ன?

ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும் அதன் சொந்த சிறப்பு மற்றும் அடையாளம் உள்ளது. N ஆங்கில எழுத்துக்களில் 14 வது எழுத்தாகவும், கிரேக்க எழுத்துக்களில் 13 வது எழுத்தாகவும் உள்ளது. N -யின் ராசி எண் 5 ஆகும். எண் கணிதத்தின் படி, இந்த எழுத்து புதனால் ஆளப்படுகிறது. இது “Na” என்ற உச்சரிக்கப்பை கொண்டுள்ளது. எகிப்தில் என் என்றால் நாகம் அல்லது பாம்பு என்று பொருள். கிமு 1000 ஆம் ஆண்டில், கிரேக்கர்கள் N என்ற எழுத்தை ஒரு அலையை போன்று குறிப்பிட்டுள்ளனர். அதை நு என்று அழைத்துள்ளனர்.

மேஷம் vs தனுசு ராசிக்கு இடையிலான காதல், நட்பு, பாலுறவு எப்படி இருக்கும்?

N என்பது புத்திசாலி மற்றும் பணக்கார கற்பனை கொண்ட நபர்களைக் குறிக்கிறது. அவர்கள் வலுவான விருப்பத்தையும் மிகவும் யதார்த்தமான கருத்துக்களையும் கொண்டுள்ளனர். உங்கள் பெயர் N என்ற எழுத்தில் துவங்கினால், அவர்கள் சிறந்த எழுத்தாளர்கள், நிருபர்கள் மற்றும் கணக்காளர்களாக இருப்பார்கள். அதிகமாக எழுத விரும்புபவர்கள். அதிக நம்பிக்கை உள்ளவர்கள்.

​N-யில் தொடங்கும் பெயரை கொண்ட நபர்களின் இயல்பு

N என்ற பெயருடையவர்கள், சற்று சுயநலவாதிகள். அவர்கள் எந்த வேலையைச் செய்தாலும், அதற்கான பலனை எதிர்பார்க்கிறார்கள். இவர்கள் இயல்பிலேயே மிகவும் அன்பானவர்கள். அனைவரிடமும் வேகமாக பழகுபவர்கள். தன்னை பற்றிய விமர்சனங்களை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. தங்கள் வாழ்க்கையில் வெற்றியைப் பெற இவர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். தங்களின் விடாமுயற்சியால், அவர்கள் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். இவர்கள், மிகவும் நேர்மையானவர்கள்.

மிகவும் தைரியமான பெண் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

சிற்றின்பவாதிகள் என்பதால், தொடுதல் மற்றும் நுகர்தல் விஷயங்களில் அதிக நாட்டம் இருக்கும். சற்று பொறாமை குணம் உடையவர்கள். தங்களின் காதலி மற்றும் மனைவியை ஏமாற்றும் குணம் உள்ளவர்கள். எந்த விஷயத்தையும் எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால், தனக்கு பிடித்தவர்கள் வேறொருவருடன் சென்றால், அவர்களை மன்னிக்கமாட்டார்கள்.

​கடினமான உழைப்பாளிகள்

வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையை அடைய கடினமாக உழைப்பவர்கள். தனக்கு கொடுத்த வேலையை தனித்துவமாக செய்து முடிக்கும் திறன் உள்ளவர்கள். ஆனால், தனது உழைப்புக்கான பலனை உடனே எதிர்பார்ப்பவர்கள். செய்யும் வேலையில், உண்மையாக இருப்பவர்கள்.

உங்க பெயரின் முதல் எழுத்து M ஆ?... அப்போ நீங்க அதிஷ்டசாலி..!

மற்றவர்கள் இவர்களை பாராட்டுவது இவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயம். ஆனால், மற்றவர்கள் இவர்களை விமர்சித்தால் தாங்க மாட்டார்கள். மற்றவர்களில் எதிர்மறையான கருத்துக்கு அதிக கவனம் செலுத்துபவர்கள். ஒவ்வொரு விஷயத்தையும் இவர்கள் சிந்தித்து நிதானமாக செய்கிறார்கள்.

​மிகவும் நேர்மையானவர்கள்

தன்னை நம்புபவர்களுக்கு மிகவும் நேர்மையாக இருப்பவர்கள். உறவுகளை எவ்வாறு மதிப்பிடுவது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் அவர்களின் காதல் உறவு நன்றாக செல்கிறது. இந்த மக்கள் தங்கள் காதலியுடன் மிகவும் நேர்மையாக வாழ்கிறார்கள். தனது அன்புகூறியவர்களுக்காக எதையும் செய்பவர்கள். தன்னை விட தன்னை சுற்றி உள்ளவர்களுக்காக யோசிப்பவர்கள். தான் செய்யும் விஷயம் மற்றவர்களை காயப்படுத்திவிடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துபவர்கள்.

ராஜயோகத்தால் 2023-யில் சொந்த வீடு வாங்கும் அதிஷ்ட ராசிகள்..!

​லட்சியவாதிகள்

N என்ற பெயரை உடையவர்கள் மிகவும் லட்ச்சியவாதிகள். தான் நினைத்ததை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணிப்பவர். அவர்கள் தங்களின் லட்சியத்திற்காக அதிகமாக உழைப்பவர்கள். மிகவும் ஆக்கப்பூர்வமானவர்கள். இவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் தெளிவு இருக்கும். ஆட்டு மந்தையை போல மற்றவர்களை பின்பற்றுவது அவர்களுக்கு பிடிக்காது. தனக்கென தனி வழியை அமைப்பவர்கள்.

​என்றும் இளமை மற்றும் அழகானவர்கள்

எவ்வளவு வயதானாலும் இளமையாக இருப்பவர்கள். பார்ப்பதற்கு ஒல்லியாகவும் அழகாக இருப்பவர்கள். தங்களின் இளமையான தோற்றத்தால் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பவர்கள். மிகவும் சுறுசுறுப்பானவர். தனிமையை அதிகமாக விரும்ப மாட்டார்கள். தங்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துபவர்கள். பொதுவாக அவர்களின் கண்கள் மிகவும் கவர்ச்சியாகவும் பெரியதாகவும் இருக்கும். தனது அழகிய தோற்றத்தால் மற்றவர்களை மயக்கும் திறன் உடையவர்கள்.

உங்க பெயரின் முதல் எழுத்து L ஆ?... அப்போ நீங்க மிகவும் அன்பானவர்!

​சுயநலமானவர்கள்

N என்ற பெயருடையவர்கள், சற்று சுயநலவாதிகள். தங்கள் சொந்த உலகில் மூழ்கி இருப்பார்கள். தனக்கு பிடித்தவற்றை மட்டுமே செய்பவர்கள். மற்றவர்களை பற்றி கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்கள். தனக்கு தோணும் செயல்களை உடனே செய்வார்கள். தனக்கு பிடித்தவர்களுக்காக சில சமயங்களில் யோசிச்சலும், தனக்கு வேண்டியதை மட்டுமே செய்வார்கள்.

எழுத்தாளர் பற்றி
Devaki
தேவகி ஜெகநாதன் "இதழியல் மற்றும் ஊடகவியல்" - சமயம் தமிழில் Digital Content Producer. ஊடகத்துறையில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்