ஆப்நகரம்

ரோகிணி (Rohini) நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குண நலன்கள்

ரிஷப ராசியில் வரக்கூடிய ரோகிணி நட்சத்திரம் சந்திரனை அதிபதியாக கொண்டது. இவர்கள் பெண் ஆசை மிக்கவர்கள். ஆடம்பரம், அழகில் நாட்டம் கொண்டவர்கள். ரோகிணி நட்சத்திர திருமணம், குண நலன், பொது பலன் பார்ப்போம்.

Authored byஅரவிந்தன் | Samayam Tamil 6 Dec 2022, 7:22 pm
ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 27 நட்சத்திரங்களில் 4வதாக வரக்கூடிய நட்சத்திரம் ரோகிணி. சந்திரனை நட்சத்திர அதிபதியாக கொண்ட ரோகிணி, ரிஷப ராசியில் உள்ளது.
Samayam Tamil rohini nakshatra special characteristics marriage matching dasa benefits in tamil
ரோகிணி (Rohini) நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குண நலன்கள்


ரோகிணி அமைப்பு : ரோகிணி ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலின் முகத்தை ஆள்கிறது. அதாவது முகம், வாய், நாக்கு மற்றும் கழுத்து பகுதிகள் ஆளுமை செய்கிறது.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க ஓ, வ, வி, வு ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்துக்களாகவும், வா, வீ ஆகியவை தொடர் எழுத்துக்களாகப் பயன்படுத்தலாம்.

​ரோகிணி நட்சத்திரம் குண நலன்கள் :

ரோகிணி நட்சத்திரம் குண நலன்கள் :

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய்க்கும், தாய்மாமனுக்கும் தோஷத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் என பொதுவான கருத்து உண்டு. சந்திரனை அதிபதியாக கொண்ட நட்சத்திரமாகவும், ஆடம்பரம், அழகைத் தரக்கூடிய சுக்கிரன் ஆளும் ரிஷபத்தில் இருப்பதால், இவர்கள் கலைத் துறையில் ஜொலிப்பார்கள். எந்த ஒரு கலையையும் எளிதாக கற்றுக் கொள்ளக்கூடியவர்களாக இருப்பார்கள்.

பெண் பிரியர்களாகவும். பொன், பொருள் மீது ஆசை அதிகமாக கொண்டவர்களாக இருப்பார்கள். இனிமையாக பேசக்கூடிய இவர்கள், பகைவர்களைக் கூட நண்பர்களாக்கிக் கொள்ளும் ஆற்றல் உள்ளவர்கள். நேர்மை, நியாயத்துடன் வாழ நினைப்பவர்கள்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களின் பண்புகளும், தொழில் எப்படி இருக்கும்?

ரோகிணி நட்சத்திர ​திருமணம், குடும்பம் எப்படி இருக்கும்?

திருமணம், குடும்பம்;

நினைத்ததை நினைத்தபடி அடைய வேண்டும் என விரும்புபவர்கள். அதனால் காதலிலும் தான் விரும்பியவரை விடாப்படியாக கடைசி வரை போராடி திருமணம் செய்து கொள்வார்கள். தன் பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கக்கூடியவர்கள்.

சந்திரன் + சுக்கிரன் சேர்க்கையால் சுக போக வாழ்க்கையை விரும்பக்கூடியவர்களாக இருப்பார்கள். அதிகம் சோம்பேறிகளாக இருப்பார்கள்.


ரிஷப ராசி : கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம் நட்சத்திர திருமணத்திற்கு பொருத்தமான ராசிகள் இதோ

ஆரோக்கியம்

ரோகிணி நட்சத்திர அதிபதி சந்திரன் ரிஷப ராசியில் உச்சம் பெற்றவர் என்பதால், இந்த ராசியினருக்கு அடிக்கடி சலி, நீர் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். தொண்டை, மூக்கு, மூட்டு வலி, கண் போன்ற பாகங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

ரோகிணி நட்சத்திர ​​தொழில், வியாபாரம் :

தொழில், வியாபாரம் :

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த நிர்வாக திறமை அற்றவர்கள். எதிலும் கர்வம் கொள்ளாதவர்கள். எந்த வேலையாக இருந்தாலும் தான் ஒரு பெரிய ஆள் என ஒதுங்காமல், வேலையை பொறுப்பாக எடுத்து செய்வார்கள்.

அதனால் எந்த தொழிலிலும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தன்னுடைய பணியாளர்களை மதிப்புடன் நடத்துவார்கள்.

இவர்கள் கலைத்துறையில் சிறந்து விளங்குவார்கள். உணவு சார்ந்த தொழில், ஹோட்டல், லாட்ஜ், பால் பண்ணை, கரும்பு சார்ந்த துறை போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள். அது சார்ந்த விற்பனை செய்து லாபத்தை குவிப்பார்கள். குறிப்பாக சமையலில் சிறப்பாக செயல்படுவார்கள்.

ரிஷப ராசியின் அற்புத குணங்களும் - குடும்பஸ்தர்கள், காதல் செய்பவர்கள் கவனிக்க...

ரோகிணி நட்சத்திர திசைப் பலன்கள்

திசைப் பலன்கள் :

சந்திர தசை - 10 ஆண்டுகள்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சந்திரன் அதிபதி என்பதால் முதல் 10 வருடங்கள் சந்திரன் திசை நடக்கும். இதனால் இவர்கள் நீர் சார்ந்த பாதிப்புகளை சந்திக்க வேண்டியது இருக்கும். தாயின் ஆரோக்கியத்தில் பிரச்னை உண்டாகும். சலி தொடர்பான பிரச்னைகள் அடிக்கடி ஏற்படும்.

செவ்வாய் தசை 7 ஆண்டுகள் :

அடுத்து வரக்கூடிய செவ்வாய் தசை காலத்தில் கல்வியில் சிறப்பாக விளங்குவார்கள். குடும்பம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். செவ்வாய் என்பதால் சற்று முன் கோபம் அதிகமாக இருக்கும். எதிர்பாராத செலவுகள் அடிக்கடி ஏற்படும்.

உங்கள் ராசிப்படி திருமணத்தின் போது எந்த ராசி சிறப்பாக பொருந்தும் தெரியுமா?

ராகு தசை 18 ஆண்டுகள்

மூன்றாவது தசையாக வரக்கூடிய ராகு தசை காலத்தில் இவர்கள் அதிகம் போராட்டங்களை சந்திக்க வேண்டியது இருக்கும். கல்வியிலும், புதிய வேலை கிடைப்பதிலும் கூடுதல் முயற்சி தேவைப்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உண்டாகும். தேவையற்ற நட்பு, பழக்க வழக்கங்களால் பிரச்னைகள் உண்டாகலாம். கோபம், பிடிவாதத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதாக இருக்கும்.

​குரு தசை 16 ஆண்டுகள்

குரு தசை 16 ஆண்டுகள்

ரோகிணி நட்சத்திரத்திற்கு 4வதாக வரக்கூடிய குரு தசை 16 வருடங்கள் வாழ்வில் ஏற்றம் தரக்கூடியதாக இருக்கும். தன் வாழ்வில் முன்னேற்றம், சாதனை படைக்கவும், சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். நிதி நிலை முன்னேறும், நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

சனி தசை 19 ஆண்டுகள் :

உங்களுக்கு 5வதாக வரக்கூடிய சனி தசை காலத்தில் ஏற்றமும், சமூகத்தில் பெயர், புகழ் உண்டாகும். செல்வமும், செல்வாக்கும் அதிகரிக்கும். வாழ்க்கையில் சாதனைகள் பல படைப்பீர்கள்.

ஸ்திர ராசியான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ராசிக்கான வாழ்க்கைத் துணை, குடும்ப நிலை எப்படி இருக்கும்?

புதன் தசை 17 ஆண்டுகள்

உங்களுக்கு 6வதாக வரக்கூடியது புதன் திசை. இது மாரக திசை என்றாலும் சுப கிரகங்களின் பார்வை இருப்பின் உங்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். இல்லையேல் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும்.

ரோகிணி நட்சத்திரம் உச்சரிக்க வேண்டிய மந்திரம் :

வழிபாடு :

வழிபட வேண்டிய விருச்சம் :

நாவல் மரம்

வழிபாடு :

ரோகிணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டியிலிருந்து 19 கி.ம்மீ தொலைவில் உள்ள கழுகு மலை ஜம்பு நாத ஈஸ்வரர் அகிலேண்டஸ்வரி ஆலயத்திலுள்ள நாவல் மரம் வழிபாடு செய்யவும்.

சுப காரியம் நடக்க உச்சரிக்க வேண்டிய மந்திரம் :

பிரஜாபதி சதுர்பாஹீ ;

கமண்டலு அஷ ஸீத்ரத்ருத் வரா அபயகர ;

ப்தே; ரோகிணி தேவதா அஸ்துமே

12 வகையான திருமணப் பொருத்தங்கள் பார்ப்பது அவசியம்... ஏன் தெரியுமா?

திருமண பொருத்தம் பார்க்கும் போது தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள் : Rohini Nakshatram Marriage Compatibility

ரோகிணி நட்சத்திரம் சந்திரன் ஆளக்கூடியது என்பதால் திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம் போன்ற நட்சத்திரங்கள் சேர்க்கக்கூடாது. சேர்த்தால் ரோகிணிக்கு ரஜ்ஜு பொருத்தம் வராது என்பது இந்த நட்சத்திர காரர்களை திருமணம் செய்யாதிருப்பது நல்லது.

எழுத்தாளர் பற்றி
அரவிந்தன்
நான் அரவிந்தன் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 12 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஜோதிடம், ஆன்மிகம் தொடர்பான செய்திகளை எழுதிக் கொண்டிருக்கும் நான், விளையாட்டு, நடப்பு நிகழ்வு, செய்திகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Principal Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்