ஆப்நகரம்

உங்கள் கைரேகை இப்படி இருக்கா? - திருமண வாழ்க்கை இனிக்காமல் போக இது தான் காரணம்

பல்வேறு வழிகளில் நம்முடைய எதிர்காலம் எப்படி இருக்கும், நிகழ்கால பிரச்னைகள் ஏன் ஏற்படுகின்றன போன்ற விஷயங்களை நாம் ஜோதிடத்தில் உள்ள ஜனன கால ஜாதகம், கை ரேகை ஜோதிடம், உள்ளங்கை ரேகை ஜோதிடம், எண் கணிதம் போன்ற விஷயங்களின் அடிப்படையில் அந்தந்த துறையில் நல்ல பயிற்சி எடுத்த வல்லுநர்கள் கணித்துக் கூறுவதுண்டு.

Samayam Tamil 24 May 2022, 12:12 pm
பல்வேறு வழிகளில் நம்முடைய எதிர்காலம் எப்படி இருக்கும், நிகழ்கால பிரச்னைகள் ஏன் ஏற்படுகின்றன போன்ற விஷயங்களை நாம் ஜோதிடத்தில் உள்ள ஜனன கால ஜாதகம், கை ரேகை ஜோதிடம், உள்ளங்கை ரேகை ஜோதிடம், எண் கணிதம் போன்ற விஷயங்களின் அடிப்படையில் அந்தந்த துறையில் நல்ல பயிற்சி எடுத்த வல்லுநர்கள் கணித்துக் கூறுவதுண்டு.
Samayam Tamil these palmistry line create problem in marriage life obstacles in married life
உங்கள் கைரேகை இப்படி இருக்கா? - திருமண வாழ்க்கை இனிக்காமல் போக இது தான் காரணம்


திருமணம் குறித்த கைரேகை ஜோதிடம்

இந்த பதிவில் திருமண வாழ்க்கை தொடர்பான கைரேகை ஜோதிடம், உள்ளங்கையில் எந்த வகையான கோடுகள் பிரச்சனைகளை உருவாக்கக் கூடியது என்றும், அதற்கான எளிய பரிகாரங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

ஒருவரின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும், எப்போது திருமணமாகும், எப்படிப்பட்ட துணை அமைவார், ஏன் தம்பதியிடையே கருத்தியல் ரீதியான வேறுபாடு, வாழ்க்கைப் பிரச்னைகளுக்கு காரணமாக அமைகின்றன போன்ற விஷயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

காலில் கருப்பு கயிறு கட்டிக்கொண்டால் மூன்று கிரக பலம் பெறும்

​திருமண உறவில் ஏன் பிரச்னை :

திருமண வாழ்க்கையுடன் தொடர்புடைய கை ரேகைகள் ஒரு நபரின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட பலனைத் தரக்கூடியதாக அமையும். திருமணமான ஒரு நபரின் வாழ்க்கையில் பிரச்னைகள் வர காரணம், அந்த ஆணின் இதய ரேகையும், தலை ரேகையும் ஒரே மாதிரியாக இருந்து, பெண்ணின் கையில் இதய ரேகையும், தலை ரேகையும் வித்திசாயமாக இருந்தால், அப்படிப்பட்ட கை ரேகைகள் திருமண வாழ்க்கையில் தடைகளை உருவாக்குகின்றன, கணவன் மனைவிக்கு இடையே கருத்தியல் ரீதியான ஏற்படுத்துகின்றன.

​பெண்ணின் கை கடினமாக இருத்தல் :

பெண்ணின் கை கடினமாக இருத்தல் :

பொதுவாக பெண்களின் கைகள் மிகவும் மென்மையாகவும், ஆணின் கைகள் சற்று கடினமாக இருக்கும்.

இதில் விதிவிலக்காக சில பெண்களுக்கு கடினமான உள்ளங்கையாக அமைந்து, ஆணின் கை மென்மையாக இருந்தால் திருமண வாழ்க்கையில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.

அதுமட்டுமல்லாமல் ஒருவரின் திருமண ரேகையில் ஏதேனும் ஒரு ரேகை வெட்டுவது போல இருந்தால் திருமண வாழ்க்கையில் சில தடைகள் ஏற்படும்.

இதய ரேகை

ஒரு பெண்ணின் இதய ரேகை வேறு ஏதேனும் தடித்த ரேகையை வெட்டினால் அல்லது இதய ரேகை தலை ரேகைக்கு குறுக்காக சென்றால், அவர் தன் கணவருடன் சிறிய விஷயங்களுக்கு கூட மனஸ்தாபம் கொள்வார். சிறிய புறக்கணிப்பைக் கூட பொறுத்துக் கொள்ளமாட்டார். இதனால் இவர்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி குறையும்.

​தெளிவில்லாத ரேகை

தெளிவில்லாத ரேகை

கை ரேகை பளிச்சென்று இருப்பது நற்பலனைத் தரும். சிலரின் தலை ரேகைகூட தெளிவில்லாமல் அலை, அலையாக இருந்தால் அந்த நபரின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் 'சமயம் தமிழ்' இணையதளத்தை பின் தொடருங்கள்

சுக்கிர மேட்டில் மச்சம்

ஒருவரது கைகள் கடினமாகவோ, விரல்கள் தடித்ததாகவோ அல்லது வளைந்ததாகவோ இருந்தால், அவரது முழு வாழ்க்கையும், திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட வெறுப்பினால் பிரச்னைக்கு உள்ளாகும். அதே சமயம், சுக்கிர மேட்டில் மச்சம் இருந்தும், சுக்கிரன் மேடு பெரிதாக இருந்தால், இல்லறத்தின் மகிழ்ச்சி தடைப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்