ஆப்நகரம்

மன அழுத்த சூழ்நிலையிலும் அமைதியாக சமாளித்து வெற்றி பெறும் ராசிகள்

தற்போதுள்ள இயந்திரமயமான சூழலில் ஒவ்வொருவரும் பணம், பொருள் தேடி அலையக்கூடிய நிலையில் கடைசியாக, அமைதியும், நிம்மதியையும் தேடி ஓடக்கூடிய மன நிலையிலும் உள்ளனர். அதனால் மன அழுத்தம், பதற்றம், உயர் ரத்த அழுத்தம் என பல உடல் நல பிரச்னைகளைச் சந்திக்க நேரிடுகிறது.

Samayam Tamil 11 Sep 2021, 6:16 pm
தற்போதுள்ள இயந்திரமயமான சூழலில் ஒவ்வொருவரும் பணம், பொருள் தேடி அலையக்கூடிய நிலையில் கடைசியாக, அமைதியும், நிம்மதியையும் தேடி ஓடக்கூடிய மன நிலையிலும் உள்ளனர். அதனால் மன அழுத்தம், பதற்றம், உயர் ரத்த அழுத்தம் என பல உடல் நல பிரச்னைகளைச் சந்திக்க நேரிடுகிறது.
Samayam Tamil these rasi easily handle the stressful situation with calm most understanding zodiac signs
மன அழுத்த சூழ்நிலையிலும் அமைதியாக சமாளித்து வெற்றி பெறும் ராசிகள்


கடின சூழலை எளிதில் சமாளிக்கும் ராசிகள்

பலரும் தனக்கும், தன்னுடைய குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகப் பணம் சம்பாதிக்க, பொருளாதார நிலையில் உயர பல கடுமையான சூழலில் வேலை பார்ப்பதும், தொழில் செய்வதுமாக இருக்கின்றனர். இதில் பல ஆபத்துக்களும், மன அழுத்தம் தரக்கூடிய நிலையை சமாளிக்க வேண்டியதாக இருக்கிறது.

அதனால் மன அழுத்தம், பதற்றம், உயர் ரத்த அழுத்தம் என பல உடல் நல பிரச்னைகளைச் சந்திக்க நேரிடுகிறது.

இதுபோன்ற எந்த ஒரு சூழல்களை அமைதியாக, நிதானாமாக சமாளிக்கும் சாமர்த்தியம் சிலரிடமே இருக்கின்றது. சூழலை சரியாக சாமர்த்தியமாக நிர்வகிக்கக்கூடிய ஆற்றல் எந்தெந்த ராசியினரிடம் அதிகம் இருக்கின்றது என்பதை இங்கு பார்ப்போம்.

மன அழுத்த சூழ்நிலைகளை சமாளிக்கக்கூடிய ராசிக்காரர்கள்.

​மகரம்

சனி பகவான் ஆளக்கூடிய மகர ராசியினர் மன அழுத்த சூழ்நிலையிலும் மிகவும் புத்திசாலித்தனமாகவும், பொறுமையாகவும் இருப்பார்கள். நிலைமையை மோசமானதாக இருந்தாலும் எந்த ஒரு பதற்றமும் படாமல் சிறப்பாக நிலைமையை கையாள்வார்கள்.

எந்த ஒரு கடினமான சூழலையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சிறப்பாக வேலையை செய்ய முயல்வார்கள்.


​கன்னி

கன்னி ராசியினர் மற்றவர்களின் பார்வையில் நடைமுறைக்கு ஏற்றவராக இல்லாவிட்டாலும், எந்த ஒரு சூழலையும் சிறப்பாக பகுப்பாய்வு செய்து, மோசமான நிலைமையை சீராக்கக்கூடியவர்கள். இவர்களால் கோபப்படாமல், நிதானமாக கடின சூழலையும் சமாளிப்பார்கள் என்பதால் மன அழுத்தத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பார்கள்.

கடினமான சூழலில் இவர்கள் சிறப்பாக செயல்படுவதோடு மற்றவர்களுக்கும் நல்ல ஆலோசனை வழங்கக்கூடியவர்கள்.

​ரிஷபம்

ரிஷப ராசியினர் சூழலை கனிப்பதிலும், கடின சூழலை அமைதியாகவும், சீராகவும் கையாள்பவர்கள். ஏதேனும் மன அழுத்தம் தரக்கூடிய சூழல் இருப்பின் அந்த நேரத்தில் எந்த ஒரு முட்டாள்தனமான முடிவையும் எடுக்காமல் அமைதியாக, நிதானமாக சமாளிப்பார்கள். அமைதியாக இருந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவார்கள்.


அந்தி மாலை நேரத்தில் இந்த 5 காரியங்களைச் செய்வதால் ஏழ்மை வரும்

துலாம்

துலாம் ராசியினர் உண்மையில் மன அழுத்த சூழ்நிலைகளை சிறப்பாக நிர்வகிக்கக் கூடியவர்கள். இவர்கள் குடும்பம், வேலை என எந்த சூழலிலும் கஷ்ட, நஷ்டங்களை ஒரு தராசு போல சமநிலையில் பார்க்கக்கூடியவர்கள். அதனால் மன அழுத்தத்திற்கு ஆளாவதில்லை.

இவர்கள் எப்படிப்பட்ட மோசமான சூழலையும், நிலைமையை புரிந்து கொள்ள முயல்வார்கள் பின்னர் அமைதியுடன் அதற்கான தீர்வைக் காண்பார்கள்.அதிகம் ரிஸ்க் எடுக்கக்கூடிய ராசிகள் : அபாயங்கள் மற்றும் ஆபத்துகளுக்கு பயப்படாத ராசிகள்

​கும்பம்

கும்ப ராசியினர் மிகவும் அறிவானவர்கள். கடினமான சூழலில் அதுவும் சில வேண்டாதவர்களால் மோசமான சூழல் ஏற்பட்டாலும், அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளாமல், உணர்ச்சிவசப்படாமல், அறிவாளித்தனமாக யோசித்து செயல்படுவார்கள்.

பதற்றத்தை விடுத்து அமைதியாக இருந்து தீர்வு காண்பது எப்படி என்பதை யோசிப்பார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்