ஆப்நகரம்

தங்களின் EX-க்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

பெரும்பாலானவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை விட்டு பிரிந்த பிறகு அவர்களுடன் மீண்டும் இணைய விரும்புவதில்லை. ஆனால், இந்த ராசிக்காரர்கள் தங்கள் அன்புக்கூறியவர்கள் என்ன தவறு செய்தாலும் மன்னித்து இரண்டாவது வாய்ப்பை கொடுக்கிறார்கள். அந்த ராசிக்காரர்கள் யார் என இங்கே பார்க்கலாம்.

Authored byDevaki | Samayam Tamil 28 Nov 2022, 6:08 pm
நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையில் சில தவறுகளை செய்திருப்போம். ஆனால், தவறு செய்த எல்லாருக்கும் நாம் திருந்த வாய்ப்பு கொடுப்பதில்லை. ஏனென்றால், அது அவர்கள் செய்த தவறை பொறுத்தது. அதே போல, அனைவரும் செய்த தவறை மன்னிக்கவும் மாட்டார்கள். ஏனென்றால், மன்னிக்கும் குணமும் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். சிலர் இயற்கையாகவே மன்னிக்கும் குணத்துடன் இருப்பார்கள், சிலர் சிறிய தவறு செய்தால் கூட நம்மை விட்டு போய்விடுவார்கள். நாம் செய்யும் சிறிய தவறு கூட நமது வாழ்க்கையை அழிக்கக்கூடிய பெரிய விஷயமாக இருக்கலாம்.
Samayam Tamil these zodiac sign always give second chances to their exes and take them back
தங்களின் EX-க்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?


அதே போலத்தான் காதல் வாழ்க்கையும். சில சமயங்களில் காதல் உறவில் நாம் காட்டும் அலட்சியமும் அவநம்பிக்கையும் நமது உறவில் விரிசலை ஏற்படுத்தலாம். ஆனால், நாம் தவறே செய்திருந்தாலும் அதை மன்னித்து, நமக்கு இரண்டாவது வாய்ப்பை சிலர் வழங்குவார்கள். அப்படி, தங்களின் EX-க்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கும் ராசிக்காரர்கள் யார் என்று இங்கே பார்க்கலாம்.

​மிதுன

மிதுன ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் எதையாவது சிந்தித்து கொண்டே இருப்பார்கள். அதை செயல்படுத்த வேண்டும் என்றும் நினைப்பார்கள். ஆழ்ந்த சிந்தனையுடையவர்கள் என்பதால் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுபவர்களாக இருப்பார்கள். மேலும், இருக்கும் இடத்திற்கு தகுந்தாற் போல, தன்னை மாற்றிக்கொள்ளும் குணம் கொண்டவர்கள். என்னதான் உங்களை காயப்படுத்தும் படி, நீங்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி பேசினாலும் அவர்கள் உங்களை நினைத்து வருந்துவார்கள்.

இந்த ராசிக்காரர்களை கல்யாணம் பண்றவங்க ரொம்ப பாவம்; ஏன் தெரியுமா?

நீங்க செய்த தவறையும் மன்னித்து ஈர்க்கும் குணம் கொண்டவர்கள். இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கணிப்பது மிகவும் கடினம். தனது அன்புகூறியவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்குபவர்கள். அவர்கள் மீண்டும் உங்கள் மீது ஆர்வமாக இருப்பதைக் கண்டால், உங்களுடன் மீண்டும் இணைவதைப் பற்றி அதிகம் யோசிக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் உள்ளுணர்வைப் பின்பற்றி, தங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிவு செய்கிறார்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் மரியாதையும், சாந்தமும், சகிப்புத்தன்மை மற்றும் அதிக கடவுள் பக்தியுடன் இருப்பவர்கள். இவர்களின் பேச்சியில் உறுதி இருந்தாலும், இவர்கள் எப்பொழுது மென்மையாகவும் சாந்தமாக மட்டுமே பேசுவார்கள். இவர்களிடம் யாராவது நெருங்கி பழகினால், பின்னர் தள்ளி போவது கடினம். ஒரு விஷயத்தில் இருந்து மீள்வதற்கு அவர்களுக்கு நீண்ட காலம் தேவைப்படுவதால், அவர்கள் எந்த உறவையும் விட்டு முழுமையாக வெளியேற யோசிக்கிறார்கள்.

தன்னம்பிக்கை அதிகமாக உள்ள ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

எனவே, இவர்கள் தங்களின் அன்பானவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்களை முழுமையாக மன்னிக்காவிட்டாலும், உறவை உடைக்க காரணமான விஷயத்தை சரிசெய்ய அவர்கள் ஆர்வமாக உள்ளனர். உறவுகள் ஒரு அரிய வாய்ப்பு என்பதை அவர்கள் அறிந்திருப்பதால், அவர்கள் விரும்பும் நபருக்காக போராட தயாராக உள்ளனர்.

​கன்னி

கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புபவர்கள். உலக விஷயங்களை தெரிந்து கொள்வதில் இவர்களிடம் அதிக ஆர்வம் இருக்கும். பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்த மாட்டார்கள். எனவே, எந்த ஒரு உறவிலும் உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்குவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.

நாடகமாடியே நினைத்ததை சாதிக்கும் ராசிக்காரர்கள்..!

ஆனால், வாய்ப்பு கிடைத்தும் நீங்கள் சரியாக பயன்படுத்தாவிட்டால், அவர்கள் மீண்டும் உங்கள் பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டார்கள். எனவே, கன்னி ராசிக்காரர்களை கையாளும் போது, நீங்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் செய்த தவறை நீங்க சரி செய்துவிட்டீர்கள் என்றால் அவர்கள் உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்குவார்கள்.

​துலாம்

துலாம் ராசிக்காரர்கள் அனைவரிடமும் அன்புடனும் பாசத்துடனும் பழகுவார்கள். அனைவரிடமும் அக்கறை காட்டுபவர்கள். அதேபோல, மன்னிக்கும் குணம் அதிகம் உள்ளவர்கள். தவறு செய்தவர்களை இவர்கள் குறை கூறுவது இல்லை. அனைவரும் தவறு செய்பவர்கள் தான், அவர்களால் தவறை சரி செய்ய முடியும் என்று நினைப்பவர்கள். விதியை நம்புபவர்கள்.

பணத்தை தண்ணியா செலவு செய்யும் ராசிக்காரர்கள் யார்?

எனவே அவர்கள் மீண்டும் ஒரு முன்னாள் காதலனை விரும்பினால், உறவை வேறு நிலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யலாம். நீங்கள் உங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டிருந்தால். வெறுப்பு மற்றும் பழிவாங்கலை விட உறவு மற்றும் நல்லிணக்கத்தில் அதிக அக்கறை காட்டுவார்கள். தங்கள் முன்னாள் காதலனுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்கும் ராசிக்காரர்கள்.

​மீனம்

மீன ராசியில் பிறந்தவர்கள் இளகிய குணமும், திறமையும், தன்னம்பிக்கையும் கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்களின் சந்தோசம் மற்றும் சுக துக்கங்களையும் தன்னுடைய சுக துக்கங்களாக நினைப்பவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தன்னுள் மறைத்து வைத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களின் முன்னாள் காதலர் அவர்களை அணுகி மீண்டும் உறவை தொடர விரும்பினால், அவர்கள் மறுப்பது கடினம்.

வாழ்க்கை முழுக்க பண கஷ்டத்தை சந்திக்கும் ராசிக்காரர்கள்..!

ஏனென்றால், தன்னை சுற்றி உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். அதுமட்டும் அல்ல, எந்த ஒரு நபரையும் தனது வாழ்க்கையில் இருந்து இழக்க விரும்பவில்லை. விலகிச் செல்வது நல்லது, ஆனால் மீனம் அவர்கள் விரும்பும் நபர்களுடன் அதிகமான தொடர்பைக் கொண்டுள்ளது. எனவே அவர்கள் தங்கள் முன்னாள் காதலருக்கு இரண்டாவது வாய்ப்பைக் கொடுத்து அவர்களுடன் சமரசம் செய்ய தயாராக உள்ளனர்.

எழுத்தாளர் பற்றி
Devaki
தேவகி ஜெகநாதன் "இதழியல் மற்றும் ஊடகவியல்" - சமயம் தமிழில் Digital Content Producer. ஊடகத்துறையில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்