ஆப்நகரம்

இரக்க குணத்தால் மற்றவர்களால் மனதளவில் காயமடையக்கூடிய ராசிகள்

ஜோதிடத்தின் படி, மிகவும் இரக்கமுள்ள ராசியினர் மிக எளிதாக காயப்படுவதாகவும், மிகவும் உணர்ச்சிவசப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, கடக ராசியினர் மற்றவர்களின் செயல்களால் தங்களைக் காயப்படுத்துவதைத் தடுக்க முடியாது. அவர்களின் உணர்ச்சிகளைக் கையாள்வதில் தடுமாறுவதால் மனம் உடையக்கூடியவர்கள். அப்படி எளிதில் காயமடையக்கூடிய ராசிகளை இங்கு பார்ப்போம்.

Samayam Tamil 22 Jul 2021, 8:36 pm
ஜோதிடத்தின் படி, மிகவும் இரக்கமுள்ள ராசியினர் மிக எளிதாக காயப்படுவதாகவும், மிகவும் உணர்ச்சிவசப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, கடக ராசியினர் மற்றவர்களின் செயல்களால் தங்களைக் காயப்படுத்துவதைத் தடுக்க முடியாது. அவர்களின் உணர்ச்சிகளைக் கையாள்வதில் தடுமாறுவதால் மனம் உடையக்கூடியவர்கள். அப்படி எளிதில் காயமடையக்கூடிய ராசிகளை இங்கு பார்ப்போம்.
Samayam Tamil these zodiac sign easily hurt by others because of their most kind hearted in tamil
இரக்க குணத்தால் மற்றவர்களால் மனதளவில் காயமடையக்கூடிய ராசிகள்


மற்றவர்களால் எளிதில் காயப்படும் ராசிகள்

மனிதர்களில் ஒவ்வொருவரும் அன்பான, கோபமான, யாரையும் கண்டுகொள்ளாத, அக்கறையுடைய, உணர்ச்சிவசப்படக்கூடிய என பல குணங்களுடன் இருக்கின்றனர். சிலர் அதிகமாக இரக்க குணத்துடனும் இருப்பார்கள், சிலரோ மனிதாபிமானம் கூட இல்லாதவர்களாக இருப்பார்கள். இவர்களில் அன்பாகவும், பொறுமையாக, பிறர் மீது இரக்கமாக இருக்கக்கூடியவர்கள் மற்றவர்களால் எளிதில் காயப்படுத்தப்படுகிறார்கள்.


​கடகம்

மனோகாரகன் சந்திரன் ஆளக்கூடிய கடக ராசியினர் குடும்பம், நண்பர்கள் மற்றும் காதலர் என எல்லா இடத்திலும் அன்பாகவும், அக்கறையாக இருக்க விரும்புவர். இருப்பினும் அவர்களைப் புரிந்து கொள்ளாமல் அவர்களை சார்ந்தோர் பேசும் போதும், நடந்து கொள்ளும் போதும் மிகவும் காயப்படுகின்றனர். கடக ராசியினர் மனதளவில் காயப்படாமல் இருக்க மற்றவர்கள் மீது அதீத இரக்கத்தைக் காட்டுவதை நிறுத்திக் கொண்டு, மற்றவர்களைப் போல இருக்க முயற்சிக்கவும்.


ஆண்களுக்கு மிகவும் பிடித்த பெண்கள், எந்த ராசியில் இருக்கிறார்கள் தெரியுமா?

​விருச்சிகம்

பொதுவாக தங்கள் உணர்ச்சிகளை மறைக்கக்கூடிய விருச்சிக ராசியினர் தான் ஒருபோதும் எந்த இடத்திலும் நிராகரிக்கப்படுவதை விரும்பமாட்டார்கள். அப்படி உங்களை ஒதுக்கப்படுதல் அல்லது நிராகரிப்பதை உணரும் போது அது உங்கள் மனதை மிகவும் காயப்படுத்தும். அதுமட்டுமல்லாமல் தங்களின் அன்பான தன்மையை யாரேனும் பயன்படுத்திக் கொள்கிறார்களா என்று கவனிப்பது நல்லது.

இந்த 4 ராசி ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் : உங்கள் ராசி இதில் இருக்கா?

​மிதுனம்

மிதுன ராசியினர் தங்கள் உணர்ச்சிகளை மிகவும் ரகசியமாக பாதுகாப்பவர்கள். மற்றவர்களின் பார்வைக்கும் மிகவும் கடினமானவர்களைப் போல இருக்க விரும்புகின்றனர். ஆனால் உண்மையில் நீங்கள் அன்பான மற்றும் உங்கள் இரக்கக் குணத்தால் பாதிக்கப்படக்கூடியவர்கள்.

தங்களின் தேவைக்காக பிறர் உங்களுக்கு வருத்தம் ஏற்பட்டாலும் அதை கண்டுகொள்ள மாட்டார்கள்.


பணத்தை அதிகம் செலவு செய்யும் ராசிகள் : தண்ணீரைப் போல செலவழிக்கும் ராசிகள்

​மேஷம்

மேஷம் ராசியினர் மிகவும் உணர்ச்சிகரமானவர்கள். மிகவும் பலசாலிகளாகவும், வலிமையானவர்களாகவும் இருப்பார்கள். அதோடு மற்றவர்களுக்காக எதையும் செய்ய தயங்கமாட்டார்கள். அவர்களை நீங்கள் காட்டிக் கொடுக்கும் வரை அல்லது காயப்படுத்தும்வரை அவர்களின் அன்பும், அக்கறையும் தொடரும்.


யாரேனும் ஒருவரால் காயப்பட்டால் அதன் பிறகு அவர்களுக்கு அந்த வலியை உணர்த்தக்கூடிய வல்லவர்களாக இருப்பார்கள்.


ஜோதிடத்தின் அடிப்படையில் 12 ராசியினர் எப்படி பணம் சேமிக்க வேண்டும் தெரிந்து கொள்ளுங்கள்

​மீனம்

மீன ராசியினர் மென்மையானார்கள் என்பதோடு மிகவும் பலவீனமான ராசிகள் எனலாம். மற்றவர்களின் கவனத்தை விரும்பக்கூடிய இவர்கள் யார் உதவி செய்தாலும் விசுவாசமாக இருப்பார்கள்.

மீன ராசியினர் உதவி செய்ய தயங்குவதில்லை. ஆனால் தங்களுக்கும் அவர்கள் உதவி அல்லது அன்பைக் கொடுக்க வேண்டும் என நினைப்பார்கள். அப்படி பிறரிடமிருந்து தாங்கள் நினைத்தது போல அன்போ, இரக்கமோ கிடைக்கவில்லை எனில் மனம் உடைந்து போவார்கள்.

எதிர் எதிர் கிரகங்களான சூரியன் சனி சேர்க்கை ஏற்பட்டால் என்ன பலன் தரும்?

​சிம்மம்

சிம்ம ராசியினர் சற்று உணர்ச்சிவசப்படுபவர்கள். அன்புக்குரியவர்களுக்காக விசுவாசமாக இருக்க விரும்புகிறார்கள், அதையே எதிர்பார்க்கிறார்கள். தங்களை சுற்றியவர்களுக்கு நன்மையும், அன்பையும் கொடுக்கக்கூடிய இவர்களும் அதையே எதிர்பார்ப்பார்கள்.


ராமாயணக் காவியத்தை 10 நிமிடத்தில் தெளிவாக படிக்கலாம்

அடுத்த செய்தி

டிரெண்டிங்