ஆப்நகரம்

இந்த ராசிக்காரராகள் தனிமையை அதிகம் நேசிப்பார்களாம்..!

“தனிமையிலே இனிமை காண முடியுமா” என்ற பாடல் நம் அனைவருக்கும் தெரியும். அந்தவகையில், தனிமையை அதிகமாக விரும்பு ராசிக்காரர்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

Authored byDevaki | Samayam Tamil 4 Dec 2022, 2:28 pm
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையை கொண்டவர்கள். சிலர், நம்பர்களுடம் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களால், தனிமையில் இருக்கவே முடியாது. ஆனால், சிலர், தனக்கு என ஒரு வட்டத்தை அமைத்துக்கொண்டு தனிமையை மட்டும் விரும்புவார்கள். அவர்களுக்கு தன்னை சுற்றி ஆட்கள் இருப்பதை விரும்ப மாட்டார்கள். அதன்படி, இந்த தொகுப்பில் தனிமையை அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் பற்றி இங்கே காணலாம்.
Samayam Tamil these zodiac signs always love being alone
இந்த ராசிக்காரராகள் தனிமையை அதிகம் நேசிப்பார்களாம்..!


​விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் கூட்டமாக இருப்பதை விரும்பாதவர்கள் என்று கூறமுடியாது. ஆனால், அவர்கள் தனக்கு உண்மையான ஒருவரை மட்டுமே விரும்புபவர்கள். இவர்கள், தனக்கு பிடித்த நபர் தன்னை விட்டு சென்றாலும் கவலைப்படமாட்டார்கள். அவர்கள், தனக்கு என நேரத்தை ஒதுக்க நினைப்பவர்கள். தனிமையை அதிகமாக விரும்பும் மக்கள். கூட்டமாக நண்பர்களுடன் உட்காந்து அரட்டையடிப்பது விரும்பாதவர்கள். தனது சொந்த ஆரோக்கியத்திற்கும், சிந்தனைகளுக்கும் நேரம் ஒதுக்குவார்கள்.

​கடகம்

கடக ராசிக்காரர்கள் இயற்கையாகவே அதிகமாக உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். கவலை மற்றும் வலிகளை விரும்பாதவர்கள். எனவே, மற்றவர்களிடம் இருந்து தூரமாக இருப்பதை விரும்புவார்கள். ஆனால், தன்னை சுற்றி இருப்பவர்களை சந்தோசமாக வைத்துக்கொள்ளும் குணம் உள்ளவர்கள். எங்கு சென்றாலும் தனியாக செல்ல வேண்டும் என நினைப்பவர்கள். ஏனென்றால், அவர்கள் தனக்கு பிடித்தமாதிரி ஒரு செயலை செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள். தன்னுடன் மற்றொருவர் வந்தால், அவர்களின் நோக்கத்திற்கு நடக்க வேண்டும் என நினைப்பவர்கள். எனவே, தனியாக தன்னுடைய சந்தோசத்திற்கு நடக்க நினைப்பவர்கள். வீட்டில் தனியாக இருப்பது அவர்களுக்கு கவலையாக தெரியாது.

​கன்னி

கன்னி ராசிக்காரர்கள் தன்னை சுற்றி மக்கள் இருப்பதை நேசிப்பவர்கள். ஆனால், சிறிது நேரத்திற்கு பிறகு, என்னடா இது தொல்லையா போச்சு என சலிப்படைய ஆரமித்துவிடுவார்கள். அவர்கள் தனிமையை அதிகமாக நேசிப்பவர்கள். தன்னை சிறப்பாக மாற்றும் செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்துவதில் ஆர்வம் உள்ளவர்கள். கூட்டமாக இருப்பதை விட தனியாக இருக்கும் போது தனது தேவைகளை தனது விருப்படி செய்யலாம் என்ற ஆர்வம் உள்ளவர்கள். தன்னை சுற்றி அதிக நபர்கள் இருப்பதை விரும்பாததால் பெரும்பாலும் வீட்டிலேயே இருப்பதை விரும்புவார்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இயல்பாகவே அன்பானவர்கள். அவர்கள் நண்பர்களுடன் இருக்க விரும்பினாலும் அவர்களின் மனம் அதற்கு இடம் கொடுக்காது. தனக்கென தனியான நேரத்தை செலவழித்து, தன்னுடைய சொந்த காரியங்களை செய்ய விரும்புவார்கள். இவர்கள், தங்களுக்கு என ஒரு வட்டத்தை அமைத்து வாள்பவர்கள். அதற்குள் யாரையும் அனுப்பதிப்பதில்லை. அதை விட்டு அவர்களும் வெளியில் வருவதில்லை. சமூகத்தொடர்பில் இருந்து சற்று தள்ளி நிற்க நினைப்பவர்கள். அதே போல இவர்களுக்கு அதிக நண்பர்கள் இருக்க மாட்டார்கள்.

​மீனம்

தனியாக இருக்க நினைக்கும் ராசிக்காரர்களின் ஒன்று மீன ராசி. ஏனென்றால், அவர்கள் தங்கள் சொந்த நேரத்தை நேசிப்பவர்கள். தன்னைப்பற்றி அதிகமாக யோசிப்பவர்கள். அதேபோல பகல் கனவு காண்பவர்கள் ஆனால் கற்பனைத் திறன் மிக்கவர்கள். சமூக நிகழ்வுகள் என்று வரும்போது, இவர்கள் சற்று சோம்பேறிகள். எனவே, இது சுய அன்பு மற்றும் சோம்பல் ஆகியவற்றின் கலவையாக காணப்படுவார்கள். இவர்களை, நீங்கள் எங்காவது தனிமையில் பார்த்தால் ஆச்சர்யப்பட வேண்டாம்.

எழுத்தாளர் பற்றி
Devaki
தேவகி ஜெகநாதன் "இதழியல் மற்றும் ஊடகவியல்" - சமயம் தமிழில் Digital Content Producer. ஊடகத்துறையில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்