ஆப்நகரம்

குறைந்தளவு நண்பர்கள் கொண்ட ராசிகள்

உறவினர்களை விட்டு நீங்கி நண்பர்கள் தான் முக்கியம் என நினைக்கக்கூடிய நபர்கள் அதிகரித்து வருகின்றனர். சிலருக்கு ஒரு சில நண்பர்கள் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் அதிக பெரிய நண்பர்களைக் கையாள்வதை விட சிறியளவிலான நண்பர்கள் குழுவை கையாள்வது எளிது என நினைக்கின்றனர்.

Samayam Tamil 29 Nov 2021, 6:10 pm
தற்போது உள்ள நவீன யுகத்தில் இளைஞர்கள், உறவுகளை விட நண்பர்கள் தான் முக்கியம் என்ற எண்ண ஓட்டத்தில் இருக்கின்றனர். தான் சம்பாதிக்கிறேன், அதனால் நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன் என நினைக்கும் நபர்கள் அதிகரித்து வருகின்றனர். அதனால் தன்னை யாரும் கட்டுப்படுத்தக்கூடாது என நினைக்கத் தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக சில கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடிய உறவினர்களை விட்டு நீங்கி நண்பர்கள் தான் முக்கியம் என நினைக்கக்கூடிய நபர்கள் அதிகரித்து வருகின்றனர்.
Samayam Tamil Friends


நண்பர் இல்லாத நபர்கள் மிக குறைவு எனலாம். இருப்பினும் அனைவருக்கும் பெரிய நண்பர்கள் வட்டாம் இருப்பதில்லை. சிலருக்கு ஒரு சில நண்பர்கள் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் அதிக பெரிய நண்பர்களைக் கையாள்வதை விட சிறியளவிலான நண்பர்கள் குழுவை கையாள்வது எளிது என நினைக்கின்றனர்.

அப்படி நெருங்கிய மற்றும் சிறிய நட்பு வட்டாரத்தைக் கொண்டிருக்கும் 4 ராசிகள் குறித்து இங்கு பார்ப்போம்.

ஜோதிடத்தில் கிரகங்களின் நட்பு, பகை, சம நிலையால் ஏற்படும் பாதிப்புக்கள்
ரிஷபம்
ரிஷப ராசியினர் மற்றவர்களை அதிகளவில் நம்புவதில்லை. தங்கள் மகிழ்ச்சிக்காக மட்டுமே நேரத்தை ஒதுக்க வேண்டும் என நினைப்பார்கள். தங்களுக்கான நண்பர்களை உருவாக்கிக் கொள்ளும் போதும் கூட அதிகம் தேர்ந்தெடுத்துப் பழகுவார்கள்.
இவர்களின் நம்பிக்கையைப் பெறக்கூடியவர்களை மடுட்மே நண்பன் என அழைப்பார்கள். பெரியளவில் மற்றவர்களுடம் பழகமாட்டார்கள்.

ஜோதிடம் அறிவோம்: ஜாதக கட்டமும், ஒவ்வொரு வீட்டுக்கான பலன்கள் என்ன தெரியுமா?

விருச்சிகம்
விருச்சிக ராசியினர் எந்த ஒரு விஷயத்தையும் ஆழமாக யோசிப்பார்கள். பேசும் போது அர்த்தத்தோடும், ஆழமாகவும் பேசுவார்கள். மேலும் இவர்களின் குணாதியசத்திற்கு குறைந்தளவிலான நண்பர்கள் குழு மட்டுமே சாத்தியமாகும். இவர்கள் எந்த ஒரு விஷத்திலும் மேலோட்டமானவர்கள் அல்ல. அதனால் அவர்கள் சந்திக்கக்கூடிய, நன்றாக பேசக்கூடிய அனைவருடனும் நட்பு கொள்வதில்லை.

காதல் திருமணம் யாருக்கு அமையும்?- ஜாதகம் எப்படி அமைந்திருந்தால் காதல் கைகூடும் தெரியுமா?


மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு குறைந்தளவே நண்பர்கள் கொண்டிருப்பார்கள். இருப்பினும் இவர்கள் ஒருவரிடம் நண்பரானால் வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் நட்புடன் இருப்பார்கள். விசுவாசமாக இருப்பார்கள். பெரிய நண்பர்கள் கூட்டம் இருப்பதும் அவர்களுடன் நேரத்தை செலவிடுவதும் பிடிக்காது. சிறியளவிலான நண்பர்களாக இருந்தாலும் நெருக்கமானதாக நட்பு இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

தாம்பத்திய சுகத்தில் இந்த பொருத்தம் இல்லாவிட்டால் ஏற்படும் பாதிப்புக்கள்

மீனம்
குரு பகவானை அதிபதியாக கொண்ட மீன ராசியினர் நம்ப முடியாத அளவிற்கு கொடுக்கக்கூடியவர்கள். அது பொருளாகவோ அல்லது நம்பிக்கை, ஞானம் போன்ற விஷயமாக இருக்கும். இருப்பினும் இவர்கள் தேர்ந்தெடுத்துப் பழகக்கூடிய நபர்களாகவும், அனைவரிடமும் அதிகமாக மனம் விட்டு பேசக்கூடியவர்கள் அல்ல. அதனால் சிறியளவிலான நண்பர்கள் குழு மட்டுமே வைத்திருக்க விரும்புவார்கள். அப்படி இருந்தால் அதை நிர்வகிக்க வசதியாக இருக்கும் என நினைப்பார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்