ஆப்நகரம்

ஒருதலைப்பட்சமான காதலை மட்டுமே அனுபவிக்கும் துரதிஷ்டசாலி ராசி எது தெரியுமா?

உலகில் மனிதனாய் பிறந்த அனைவரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது தலைக்காதலை அனுபவித்திருப்பீர்கள். அப்படி, காதல் வாழ்க்கையில் துரதிர்ஷ்டசாலிகளாக கருதப்படும் மற்றும் ஒருதலை காதலை மட்டுமே அனுபவிக்கும் ராசிக்காரர்களை பற்றி இதில் காணலாம்.

Samayam Tamil 29 Sep 2022, 4:59 pm
நம்மை நேசிக்கும் ஒருவரை நாம் மீண்டும் காதலிப்பது வியப்பான ஒன்று. ஆனால், உங்களிடம் இருந்து எந்த விதமான அன்பையும் எதிர்பார்க்காமல், அவர்களின் உணர்ச்சியை உங்களிடம் வெளிக்காட்டாமல், உங்களை தீவிரமாக காதலிக்கும் ஒரு காதல் உள்ளது. ஆமாம், அது ஒரு தலைக்காதல் தான். ஒரு தலைக்காதல் மட்டும் தான் தன்னை தானே வருத்தி கொண்டு மற்றவர்களை ரசிக்கும் அழகான தன்மை கொண்டது. அவர்கள், மனதார மற்றும் உண்மையாக காதலித்தாலும் அவர்களுக்கு அந்த அன்பு கிடைப்பதில்லை.
Samayam Tamil these zodiac signs who always experience unlucky in love
ஒருதலைப்பட்சமான காதலை மட்டுமே அனுபவிக்கும் துரதிஷ்டசாலி ராசி எது தெரியுமா?


உண்மையில், கூறப்படாத காதல் உங்கள் உறவுக்கு தடையாக இருக்கலாம், ஏனென்றால் உணர்வுகளுடன் மட்டும் இருப்பது எளிதல்ல. அது வலியை தரக்கூடியது. இருப்பினும், எப்போதும் ஒருதலைப்பட்ச அன்பை அனுபவிக்கும் சில ராசி அறிகுறிகள் உள்ளன. அவர்கள் யார் என்று இங்கே பார்க்கலாம்.

​சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் சுதந்திரமாக ஊர்சுற்றுவதை விரும்புகிறார்கள் மற்றும் தங்கள் இதயங்களை தங்கள் கைகளில் வைத்திருக்க விரும்புபவர்கள். எனவே, இவர்கள் ஒரு நீண்ட கால உறவை தக்கவைப்பதில் கெட்டவர்களாக காட்டுகிறது. என்னதான், அவர்கள் கட்டுப்பாடுகளுடன் இருந்தாலும், விதி அவர்களை ஒரு விசித்திரமான நபரால் ஈர்க்கப்பட்டு அடிக்கடி காதலில் விழ வைக்கிறது.

இந்த ராசி ஆண்கள் சிறந்த காதலனாக இருப்பார்களாம்..!

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒருதலைப்பட்சமான காதல் உணர்வுகள் அதிகம் இருக்கும். அவர்களின் உண்மையான மதிப்பை அவர்களே குறைத்து மதிப்பிடுவதால், அவர்கள் ஒருதலைப்பட்சமாக காதலிக்கிறார்கள். அத்துடன் அவர்கள் தொடர்ந்து தங்கள் சகாக்களிடமிருந்து பாராட்டுகளையும் போற்றுதலையும் தேடுகிறார்கள். எனவே, இவர்கள் காதல் வாழ்க்கை தங்களுக்கு ஒரு தொல்லை என எண்ணுகின்றனர்.

​மிதுனம்

தங்கள் வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து அழகாக செய்யும் திறமை உடையவர்கள் மிதுன ராசிக்காரர்கள். இவர்கள் பெரும்பாலும் வேறொருவருடன் இணைப்பட்டவர்களையே விரும்பும் குணம் உள்ளவர்கள். அவர்கள், ஏற்கனவே வேறொருவரை காதலிப்பவராக இருக்கலாம் அல்லது திருமணம் மாணவர்களாக கூட இருக்கலாம் அல்லது காதலரின் இழப்பால் துக்கத்தில் இருக்கும் ஒருவராக இருக்கலாம்.

இந்த ராசிக்காரர்கள் உடலுறவில் வித்தைக்காரர்களாம்..!

இது ஜெமினியை எப்போதும் பரஸ்பரம் இல்லாத ஒருதலைப்பட்ச அன்பை வழங்க வைக்கிறது. இயல்பாக அவர்கள் தங்கள் எல்லா இலக்குகளையும் நிறைவேற்ற விரும்புகிறார்கள். காதலிலும் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் மீது பொறாமைப்படுகிறார்கள். ஆனால், வெளியில் காட்டமாட்டார்கள். இதன் காரணமாக அவர்களின் காதல் ஒருதலைப்பட்சமாக அமையும்.

​மீனம்

சில மீன ராசிக்காரர்கள் உணர்ச்சி ரீதியாக புரிந்து கொள்ளாத நபர்களிடம் பாச உணர்வுகளை வளர்த்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு முறை காதலிக்கும் போதும் அவனது மனநிலை ஒரே மாதிரிதான் இருக்கும். மேலும் இது உணர்ச்சி ரீதியாக கிடைக்காத நபர்களுடன் இணைந்திருப்பது ஆரோக்கியமற்ற தேவையாக இருக்கலாம்.

மீனம் அன்பின் உணர்வுகளை அனுபவிக்கிறது, அது எப்போதும் நிரந்தரம் இல்லை. ஏனெனில், அவர்கள் அந்த நேரத்தில் உணர்ச்சி ரீதியான இணைப்பிற்கு தகுதியற்ற நபர்களைத் தேர்வு செய்கிறார்கள்.

​கடகம்

கடக்க ராசிகாரர்கள், தங்களை தியாகிகளாக உணரக்கூடியவர்கள். அவர்கள் குழந்தை பருவத்தில் அடிக்கடி காதலில் விழுவதால், இளமை பருவத்தில் அதன் மீதான ஈர்ப்பு குறையும். அதனால் அவர்களின் காதல் சில சமயங்களில் ஒரு பக்கம் இருக்கலாம் அல்லது அது நீடிக்காமல் போகலாம்.

அதிகமாக மற்றவர்களை ஏமாற்றும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

ஒருதலைப்பட்சமான காதலால் அவர்களின் இதயம் அதிகம் காயமடைவதால் மீண்டும் காதலில் அல்லது உறவில் முன்னேற அதிக நேரம் எடுக்கும். ஆனால், தனக்கு பிடித்தவருக்காக அனைத்தையும் செய்வதில் இவர்கள் வல்லவர்கள். எதையும் எதிர்பார்க்காமல் அன்பை வாரி இறப்பவர்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்