ஆப்நகரம்

அழகான வாழ்க்கை துணை அமையுமா அல்லது அறிவானவராக அமைவாரா? - ஜாதக அமைப்பு இதோ

ஜோதிடத்தில் ஒருவரின் திருமணம், இல்லற சுகம், ஆடம்பர வாழ்க்கை, வசதி ஆகியவற்றை குறிக்கும் இடமாக 7ம் இடம் பார்க்கப்படுகிறது. இந்த ஏழாம் இடத்தில் சுப கிரகங்கள் இருப்பின் அதனால் நற்பலனும், அதில் பாவ கிரகங்கள் இருப்பின் கெடுபலன்கள் ஏற்படலாம்.

அதாவது 7ம் வீட்டில் சுப கிரகங்களான குரு, சுக்கிரன், சந்திரன் போன்ற கிரகங்கள் வலுவாக அமைந்திருந்தால் அவருக்கு அமையக்கூடிய துணை பொன் போன்ற நல்ல நிறத்துடன் அழகாக இருப்பார்.

Samayam Tamil 12 Jun 2021, 7:36 am
ஜோதிடத்தில் ஒருவரின் திருமணம், இல்லற சுகம், ஆடம்பர வாழ்க்கை, வசதி ஆகியவற்றை குறிக்கும் இடமாக 7ம் இடம் பார்க்கப்படுகிறது. இந்த ஏழாம் இடத்தில் சுப கிரகங்கள் இருப்பின் அதனால் நற்பலனும், அதில் பாவ கிரகங்கள் இருப்பின் கெடுபலன்கள் ஏற்படலாம்.
Samayam Tamil which planet is responsible for happy married life planets in 7th decide your life partner look and character in tamil
அழகான வாழ்க்கை துணை அமையுமா அல்லது அறிவானவராக அமைவாரா? - ஜாதக அமைப்பு இதோ


அதாவது 7ம் வீட்டில் சுப கிரகங்களான குரு, சுக்கிரன், சந்திரன் போன்ற கிரகங்கள் வலுவாக அமைந்திருந்தால் அவருக்கு அமையக்கூடிய துணை பொன் போன்ற நல்ல நிறத்துடன் அழகாக இருப்பார்.

கவர்ச்சிகரமான துணை அமைய

ஒருவரின் ஜாதகத்தில் 7ம் இடத்தில் புதன் அமையப் பெற்றால் அந்த ஜாதகருக்கு மாநிறமான வாழ்க்கைத் துணை அமைவார். அதுவே சனி அல்லது அமைந்திருப்பின் அவருக்கு அமையும் வாழ்க்கைத் துணை கறுப்பு நிறமாக இருப்பார்.

அதுமட்டுமல்லாமல் 7ம் இடத்தில் அமையக்கூடிய கிரகங்களைப் பொறுத்து உங்கள் வாழ்க்கைத் துணையின் குணநலன்கள், சுபாவங்களையும், வெளித்தோற்றத்தையும் அறியலாம்.

ஜாதகத்தில் 7ம் வீட்டில் சூரியன் அமைந்திருப்பின் அவரின் திருமண வாழ்வில் சில ஒற்றுமைக் குறைபாடு ஏற்படும். அதுமட்டுமில்லாமல் மூன்றாவது நபரின் தொடர்பு உண்டாகிறது.


7ம் வீட்டில் சந்திரன், புதன் அமைந்திருந்தால் அவருக்கு இளைமையான வாழ்க்கைத் துணை கிடைக்கப்பெறலாம்.

7ம் இடத்தில் குரு அமைந்திருப்பின் அந்த ஜாதகருக்கு நல்ல குண நலன்களும், அறிவாற்றலும், கவர்ச்சிகரமான உடலமைப்பு கொண்ட வாழ்க்கைத்துணை கிடைக்கப் பெறுவார்.

அதே சமயம் அசுப கிரகமான சனி, ராகு அமையப் பெற்றிருப்பின் அவருக்கு முதுமையான தோற்றம் கொண்டவர் வாழ்க்கை துணையாக கிடைப்பார்.

சிறந்த கணவர்கள் : இந்த ராசியினரை கணவனாக அடைந்த பெண்கள் கொடுத்து வைத்தவர்கள்!

நற்பண்புகள் நிறைந்த வாழ்க்கைத் துணை கிடைக்க

வாழ்க்கைத் துணையின் இயல்பு:

7ம் இடத்தில் அமையும் கிரகங்களைப் பொறுத்து ஒருவரின் வாழ்க்கைத் துணையின் இயல்பு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஒருவர் ஜாதகத்தில் 7ம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன், குரு போன்ற கிரகங்கள் அமைந்திருப்பின் அவருக்கு அழகான, நற்பண்புகள் நிறைந்த வாழ்க்கைத் துணை கிடைக்கும்.

அதே போல சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் அமைந்திருப்பின் அவருக்கு நல்ல பண்புள்ள துணையை வாழ்க்கையில் பெறுவார்கள்.

7ல் சனி, ராகு அமைந்திருப்பின் அவருக்கு ஏதேனும் ஒரு குறையுள்ள வாழ்க்கை துணை கிடைப்பதோடு, அவரின் வாழ்க்கையில் திருப்தி இல்லாத நிலை உண்டாகும்.

இல்லற இன்பத்தை தரக்கூடிய சுக்கிரன் ஒரு ஆண் ஜாதகத்தில் 7ம் இடத்தில் வலுவாக அமைந்திருப்பின் அவர் பல பெண்களை அனுபவிக்கும் யோகம் உண்டாகும். அவர் மீது பல பெண்கள் மோகம் கொள்வர்.

அதே சமயம் குரு அமையப்பெற்றிருந்தால் அவருக்கு நல்ல மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை கிடைக்கும்.

ஆயில்யம் நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாதா? - ஆயில்யம் நட்சத்திர பெண்ணை திருமணம் செய்யலாமா?

உடல் பாதிப்பு கொண்ட பெண்

இருப்பினும் சனி, செவ்வாய் இணைந்து 7ம் வீட்டில் இருப்பின் அவருக்கு நிலையற்ற மன நிலை கொண்ட பெண் மனைவியாக அமைவார். அதோடு அவருக்கு அடிக்கடி உடல் நல கோளாறு, வயிறு சார்ந்த பிரச்னை, உடலில் தழும்புகள் ஏற்பட்டு இருக்கலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் 7ம் இடத்தில் சந்திரன், செவ்வாய் அமையப்பெற்று சனி பார்வை பெற்றிருந்தால் அவருக்கு அமையும் மனைவிக்கு வயிறு சார்ந்த கோளாறு, கடுமையான உடல் பாதிப்பு உண்டாகலாம்.

நீங்கள் விசாகம், கேட்டை, மூலம், ஆயில்யம் நட்சத்திரத்தை சேர்ந்தவரா? - திருமணத்திற்கான முக்கிய பொருத்தம்

​இல்லறம் இனிக்குமா, கசக்குமா?

ஒருவரின் 7ம் இடத்தில் அமைந்திருக்கும் கிரகங்களைப் பொறுத்து தான் இல்லற வாழ்க்கை அமையும்.

அந்த இடத்தில் சுப கிரகங்கள் அமையப் பெற்றிருப்பின் அந்த ஜாதகரின் இல்லற இன்பத்திற்கான ஆசை, அபிலாஷைகள் மிகவும் திருப்திகரமாக இருக்கும்.

அதே சமயம் பாவ கிரகங்கள் அமைந்திருப்பின் அந்த ஜாதகரின் இல்லற வாழ்க்கை எதிர்பார்த்த அளவு இனிமையானதாக இல்லாமல், பல்வேறு கசப்பான நிகழ்வுகள் சந்திக்க நேரிடும்.

7ல் புதன் கிரகம் பலவீனமாக அமைந்திருப்பின் அந்த ஜாதகருக்கு இல்லறத்தில் திருப்தி அடைய முடையாது. ராகு அமைந்து, சுப கிரகங்களின் பார்வையின்றி இருந்தால் அவரின் திருமண வாழ்க்கை அமைவது கடினம். அப்படி அமைந்தாலும் அது நீண்ட காலம் நிலைக்காது.

மூல நட்சத்திர ஆண் பெண்ணை சேர்க்கலாமா? - ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம் என்பது உண்மையா?

திருமண வாழ்க்கை அமைவது சந்தேகம்

7ம் வீட்டில் சந்திரன் அமைந்து அவருடன் பாவ கிரகங்கள் சேர்க்கை பெற்றிருந்தாலும், 7ம் அதிபதி தேய்பிறை சந்திரன் சேர்க்கை பெற்றிருந்தாலும் அவருக்கு ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்ட நபர் துணையாக அமையலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் 1,7, 12 ஆகிய இடங்களில் பாவ கிரகங்கள் அமைந்து, 5ம் இடத்தில் தேய்பிறை சந்திரன் அமையப் பெற்றிருந்தால் அவருக்கு திருமண வாழ்க்கை அமைவது சந்தேகம் தான்.


ஆண்களுக்கான சாமுத்திரிகா லட்சணம் : திருமணத்திற்கு பெண் பார்ப்பவர்கள் அறிய வேண்டிய அற்புத தகவல்

அதே போல 1,6, 12 ஆகிய இடத்தில் சூரியன் அமையப் பெற்றிருப்பின் அவருக்கு ஒரு தாரம் தான். இதே போல செவ்வாயும், சுக்கிரனும் இணைந்து 5, 7, 9ம் இடத்தில் இருந்தாலும் அவருக்கு ஒரு தாரம் தான் அமையும்.

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய், சனி, ராகு இணைந்து 6, 7, 8ம் இடத்தில் இருப்பின் அவருக்கு எத்தனை திருமணம் நடந்தாலும் வாழ்வில் இனிமை காண முடியாது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்