ஆப்நகரம்

யாருக்கு தங்க நகை, வைர ஆபரண யோகம் உண்டாகும்?

ஆபரண யோகம் யாருக்கு உள்ளது என்பதை அவரின் ஜாதகத்தில் எப்படிப்பட்ட கிரக அமைப்பு உள்ளது என்பதைப் பார்த்து அறிந்து கொள்ளலாம். உங்களுக்கு ஆபரண யோகம் உள்ளது என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்...

Samayam Tamil 16 Jan 2021, 7:18 pm
தற்போதுள்ள வேகமான காலத்தில் ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையை நடத்த பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து பணம் தேடும் முயற்சியில் மிக கவனமாக இருக்கின்றனர். அப்படி கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை எதிலாவது முதலீடு செய்ய வேண்டும் என நினைக்கின்றனர்.
Samayam Tamil gold ornaments
gold ornaments


நம் முன்னோர்கள் அதிகம் முதலீடு செய்த ஒரே விஷயம் தங்கம் எனலாம். அதிலும் குறிப்பாக தாய்மார்கள் தான் சேமித்த ஒவ்வொரு காசையும் சிறிதளவாவது தங்கத்தை நகை ஆபரணங்களை வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் வாங்கினர்.

அந்த எண்ணம் இப்போதும் தொடர்கிறது. ஆனால் தற்போது தங்கத்தின் விலை விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.

தங்கம் எந்த கிழமையில் வாங்கினால் நல்லது?- எந்த ராசியினருக்கு தங்கம் பெருகும்?

ஒருவரின் ஜாதகத்தைப் பொருத்து, எப்படிப்பட்ட கிரக அமைப்பு ஆபரணங்கள், அணிகலங்கள், தங்கம், வைரம், வெள்ளி நகைகள் வாங்க வாய்ப்பு உள்ளது. ஆபரண யோகம் யாருக்கு உள்ளது நெபதை இங்கு விரிவாகப் பார்ப்போம்.

ஆபரண யோகம் கிரக அமைப்பு:
ஒருவரின் ஜாதகத்தில் தன்காரகன் எனப்படும் குரு மற்றும் வெள்ளி கோளான சுக்கிர பகவான் பலமாக அமர்ந்திருக்கிறதோ, அவருக்கு ஆபரண யோகம் அதிகமாக இருக்கும்.

பலரும் தன் சேமிப்பால் வரக்கூடிய செல்வத்தால் வீடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்க ஆசைப்படும் அதே சமயம், ஆபரணங்களை வாங்கி சேர்ப்பதையும் நல்ல சேமிப்பாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்க நகை இந்த நாட்களில் வாங்கினால் யோகம் பெருகும் - ஜோதிட பார்வை

ஒருவரின் ஜாதகத்தில் 4ம் இடமான சுக, தாயார் ஸ்தானம் பலம் பெற்று இருப்பது மட்டுமின்றி, 4ம் இடத்தில் குரு, சுக்கிரன் அமையப் பெற்றிருந்தாலும், உங்கள் ராசிக்கு 4ம் வீட்டு அதிபதிக்கும் குரு, சுக்கிரன், சந்திரன், புதன் போன்ற சுப கிரகங்களின் தொடர்பு இருந்தாலும், அந்த ஜாதகதாரருக்கு பொன், பொருள், தங்க, வைர நகை போன்ற ஆபரண சேர்க்கை ஏற்படும். அதோடு அவர் சுக போகங்களுடன் சொகுசு வாழ்வை வாழ்வார்.

இதை மட்டும் செய்யுங்கள் சொந்த வீடே வாங்கிறலாம்... ஜோதிட ஆலோசனைகள்!

ஒருவரின் ஜாதகத்தில் 3ம் அதிபதி குருவின் வீட்டிலோ அல்லது சுக்கிரனின் வீட்டிலோ அமையப் பெற்றிருந்தாலும், 3ல் குரு, சுக்கிரன் அமையப்பெற்று பலம் பெற்றிருந்தாலும், சுபர் பார்வைகளைப் பெற்றிருந்தாலும், ஜென்ம லக்கினத்திற்கு 3ம் அதிபதி 8ம் வீட்டு அதிபதியுடன் இணைந்து பலம் பெற்று, சுபர் பார்வையுடன் இருந்தாலும், 3, 8ம் வீட்டு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும், ஆபரணங்களின் மீது ஆசை கொண்டவராக இருப்பதோடு, ஆபரணங்களை வாங்கி அனுபவிக்கும் யோகம் கொண்டவராக இருப்பர்.

ஜாதகத்தில் 3ம் அதிபதி பலம் பெற்றிருந்து, அதற்கு சுபர் பார்வையுடன் இருப்பின் அவருக்கு ஆபரண சேர்க்கை உண்டாகும். 3ம் இடத்தில் சந்திரன் இருப்பதும், 5ல் குரு அமையப் பெற்றிருப்பதும், 8ம் இடத்தில் அதிபதி ராகு சேர்க்கை பெற்றிருந்து, 9ல் அமைந்திருத்தல் போன்ற கிரக அமைப்பு பெற்றிருப்பின் அவருக்கு ஆபரண சேர்க்கைகளும், நவரத்தினங்களை அணிவதற்கான யோக பலன்களை கொடுப்பார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்