ஆப்நகரம்

பஜாஜ் நிறுவனத்தின் 110 சிசி மோட்டார் சைக்கிள்கள் விலை அதிரடியாக உயர்வு..!

பஜாஜ் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வரும் 110 சிசி இழுவைத் திறன் கொண்ட பைக்குகளின் விலை கணிசமாக உயர்த்தியுள்ளது. இதற்கான காரணங்களை பார்க்கலாம்.

Samayam Tamil 15 May 2020, 12:00 pm
இந்தியாவில் பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்து வரும், அனைத்து பிஎஸ்6 பயணிகள் ரக மோட்டார்சைக்கிள்களின் விலை ரூ. 498 முதல் ரூ. 749 வரை கணிசகமாக உயர்த்தப்பட்டுள்ளன.
Samayam Tamil பஜாஜ் 110 சிசி பைக் மாடல்கள் விலை உயர்வு  காரணம் இதுதான்
பஜாஜ் 110 சிசி பைக் மாடல்கள் விலை உயர்வு- காரணம் இதுதான்


அந்த வரிசையில் சிட்ஜி 100 மாடல்கள் குறைந்தளவிலான விலை உயர்வையும், பிளாட்டினா 110 ஹெச் கியர் மாடல் அதிக விலை உயர்வையும் பெற்றுள்ளன. அதன்படி, பிளாட்டினா 100 பைக்கின் இ.எஸ் வேரியன்டுடன் ஒப்பிடும் போது கே.எஸ் வேரியன்ட் கணிசமான விலை உயர்வை பெற்றுள்ளது.

மாடல்கள்வேரியன்டுகள்பழைய விலைபுதிய விலைவேறுபாடு
CT100KS ALLOY ரூ. 40,794ரூ. 41,293 ரூ. 499
ES ALLOYரூ. 48,474 ரூ. 48,973ரூ. 499
CT110KS ALLOYரூ. 46,413ரூ. 46,912 ரூ. 499
ES ALLOY ரூ. 50,771ரூ. 55,546ரூ. 749
Platina 100 KS ALLOYரூ. 47,265ரூ. 47,763ரூ. 498
ES ALLOYரூ. 54,797ரூ. 55,546ரூ. 749
Platina 110 H Gearரூ. 59,8.2 ரூ. 60,550ரூ. 748
*இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விலை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன.

Read More: இந்தியாவில் மிகவும் விலை உயர்ந்த பிஎஸ்-6 பைக்குகள் பற்றி தெரியுமா...?

பிளாட்டினா 100 கே.எஸ் வேரியன் டுக்கான விலை உயர்வு நியாயமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த விலை உயர்வு நடவடிக்கை பஜாஜ் நிறுவனத்தை பெரிது பாதிக்காது என்கிறார்கள் துறை சார்ந்த வல்லுநர்கள்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, பல்வேறு நிறுவனங்கள் இந்த விலை உயர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

Read More: ஒரு கிலோ எடை கூட இல்லாத ஃபெராரி சைக்கிளுக்கு இவ்வளவு விலையா..?

அதன்படி ஹீரோ, ஹோண்டா மற்றும் யமஹா போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே தங்களுடைய லைன்-அப்பிலுள்ள வாகனங்களின் விலை உயர்த்தப்படுவதாக அறிவித்தன. தற்போது இந்த வரிசையில் பஜாஜ் நிறுவனம் இணைந்துள்ளது.

முன்னதாக பிஎஸ்-6 விதிகளை காரணம் காட்டி பிளாட்டினா 110 மற்றும் டிஸ்கவர் 110 பைக்குகள் விற்பனையில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன. மேலும், இந்தியாவில் பைக் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களில் பஜாஜ் மட்டுமே, தன்னுடைய பயணிகள் ரக வாகன விற்பனையில் ஃப்யூவெல் இஞ்ஜெக்‌ஷன் சிஸ்டம் கொண்ட எஞ்சினக்ளை வழங்கவில்லை.

Read More: பிஎஸ்6 ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டர் விலை உயர்வு- காரணம் இதுதான்..!

இதனால் பஜாஜ் நிறுவனத்தின் பிஎஸ்-4 பைக்குகள் பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட்ட போது பெரியளவில் விலை உயர்வை பெறவில்லை. தற்போது விற்பனை இழப்பை சரிகட்டும் வகையில் இந்த விலை உயர்வை நடவடிக்கையை பஜாஜ் நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்தி