ஆப்நகரம்

Honda Dio H-Smart ஸ்கூட்டர் விலை அறிவிப்பு! கார் போன்ற வசதி இப்போ ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டரில்!

Honda நிறுவனத்தின் பிரபல Sports commuter ஸ்கூட்டரான Dio ஸ்கூட்டரில் இப்போது H-Smart வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த H-smart Dio இந்தியாவில் 77,712 ஆயிரம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலையில் தொடங்குகிறது. இதற்கான முன்பதிவை ஹோண்டா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இதன் Standard மற்றும் Deluxe வேரியண்ட் ஸ்கூட்டர்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

Authored byவெங்கட கிருஷ்ணன் | Samayam Tamil 9 Jun 2023, 10:43 am
ஜப்பான் நாட்டின் ஹோண்டா நிறுவனம் ஸ்கூட்டர் செக்மென்ட்டில் இந்தியாவின் சிறந்த நிறுவனமாக உள்ளது. அந்த நிறுவனத்தின் Activa, Dio ஆகிய ஸ்கூட்டர்கள் அந்தந்த செக்மென்ட்டில் சிறந்த ஸ்கூட்டர்களாக உள்ளன.
Samayam Tamil honda dio hsmart scooter price revealed specs features details tamil
Honda Dio H-Smart ஸ்கூட்டர் விலை அறிவிப்பு! கார் போன்ற வசதி இப்போ ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டரில்!


இதில் இப்போது Honda Dio ஸ்கூட்டரில் அதிநவீன டெக்னாலஜி அம்சங்கள் அடங்கிய H-Smart technology வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட் விலை 77,712 ஆயிரம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) முதல் தொடங்குகிறது.

Honda Dio H-Smart Specs

இதில் Activa H-Smart போன்றே Keyless Function, அலாய் வீல், H-Smart பேட்ஜ், போன்றவை இடம்பெறும். கார்களில் இருக்கும் பார்க்கிங் லைட் போலவே Smart find பட்டன் அழுத்தினால் நமது ஸ்கூட்டரின் நான்கு இண்டிகேட்டர் ஒளிரும். அதன் மூலம் நமது ஸ்கூட்டர் எங்கு உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

புதிய வசதிகள்

சமீபத்தில் இந்திய அரசின் புதிய BS6 விதிகளுக்கு உட்பட்டு OBD2 மற்றும் E20 (20% ethanol கலந்து பெட்ரோல்) பியூயல் மூலம் இயங்கக்கூடிய என்ஜின் இதில் இடம்பெற்றுள்ளது என்பதால் இதன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெக்னாலஜி சிறப்புக்கள்

மேலும் Smart start வசதி மூலம் ஸ்கூட்டர்களை ஸ்டார்ட் செய்யவும். Smart Safe Shutoff மூலம் ஸ்கூட்டரை ஆப் செய்யவும் முடியும். Smart Unlock வசதி நமது ஸ்கூட்டரின் ஹாண்டில் பார், Fuel கேப், அண்டர் சீட் ஸ்டோரேஜ் போன்றவற்றை திறக்க உதவும்.

என்ஜின் வசதி

என்ஜின் பொறுத்தவரை எந்த ஒரு மாற்றமும் செய்யப்படாமல் அதே 109.51cc சிங்கள் சிலிண்டர் பேன் கூல்டு என்ஜின், 7.65BHP பவர் மற்றும் 9NM டார்க் வசதி, CVT கியர் பாக்ஸ் வசதி கொண்டிருக்கும்.

Honda Dio Hsmart Price (விலை விவரம்)

இதன் H-Smart ஸ்கூட்டர் இப்போது 77,712 ஆயிரம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலையிலும், Standard வேரியண்ட் 70,211 ஆயிரம் ரூபாய் விலையிலும், இதன் Deluxe வேரியண்ட் 74,212 ஆயிரம் ரூபாய் விலை வரை உள்ளது. இந்த இரண்டு ஸ்கூட்டர் பேஸ் வேரியண்ட்களும் 1,586 ஆயிரம் ரூபாய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் 'சமயம் தமிழ்' இணையதளத்தை பின் தொடருங்கள்
எழுத்தாளர் பற்றி
வெங்கட கிருஷ்ணன்
நான் B.Venkatakrishnan B.E (Mechanical). நான் ஆட்டோமொபைல், தொழில்நுட்பம், வைரல், சுற்றுலா சம்பந்தப்பட்ட கட்டுரைகள் எழுதி வருகிறேன். இதில் முக்கியமாக ஆட்டோமொபைல் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகம் கொண்டவன். புதிய கார்,புதிய பைக்குகள், புதிய டெக்னாலஜி போன்றவற்றின் மீது ஆர்வம் அதிகம். இப்போது Times Internet சமயம் தமிழ் இணையத்தில் ‘Digital Content Producer’ பணி செய்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி