ஆப்நகரம்

Matter Gear electric bike இப்போ ஆன்லைன் மூலம் பிளிப்கார்ட்டில் வாங்கலாம்!

Flipkart Online Sale விற்பனையில் முதல் முறையாக உலகின் முதல் கியர் வசதியுள்ள எலக்ட்ரிக் பைக்கை விற்பனை செய்யவுள்ளது. இந்த பைக்கை இந்தியாவில் 25 மாவட்டங்களில் சுமார் 2000 Pin code உள்ள இடங்களில் கிடைக்கும். இந்த பைக்கில் எலக்ட்ரிக் பைக்குகளில் வேறு எங்கும் இல்லாத வகையில் கியர் வசதி உள்ளது. இது பற்றிய முழு விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

Authored byவெங்கட கிருஷ்ணன் | Samayam Tamil 29 Apr 2023, 12:17 pm

ஹைலைட்ஸ்:

  • இந்த பைக் உலகின் முதல் கியர் வசதி கொண்ட EV பைக் ஆகும்.
  • பிளிப்கார்ட் மூலம் சுமார் 2000 Pin Code உள்ள இடங்களுக்கு இது டெலிவரி செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Matter EV Bike
Matter electric நிறுவனம் அறிமுகம் செய்த அதன் Aera எலக்ட்ரிக் பைக் இந்தியாவில் Flipkart மூலம் விற்பனை செய்யப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் Aera எலக்ட்ரிக் பைக்கை ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக சுமார் 25 மாவட்டங்களில் வாங்கமுடியும்.
Matter Aera எலக்ட்ரிக் பைக் வெளியீடு! எலக்ட்ரிக் பைக்கில் கியர் வசதியா?
இந்த Matter Aera பைக்கில் 5KWH பேட்டரி பேக், 10KW மோட்டார் வசதி, 4 ஸ்பீட் கியர் வசதி உள்ளது. இதன் மோட்டார் மற்றும் பேட்டரி கூலிங் செய்ய லீகுய்ட் கூலிங் வசதி இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கில் மூன்று மோட் வசதி உள்ளது.

இதன் Sport மோட் 95 KMPH வேகமும், Eco 30KMPH வேகமும், City 70 KMPH வேகமும் கொண்டுள்ளது. டெக்னாலஜி அம்சங்களாக இதில் 7 இன்ச் டச் ஸ்க்ரீன் டிஸ்பிளே வசதி உள்ளது. இதில் நமக்கு நேவிகேஷன், கால் மற்றும் மீடியா கன்ட்ரோல், ரைடிங் ஸ்டேட்டஸ் வசதிகள் உள்ளன.

River Indie EV: எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் SUV எப்படி இருக்கு? வேற மாறி!
இதற்கென்று தனியாக Mobile App வசதி உள்ளது. மேலும் Keyless entry, புஷ் ஸ்டார்ட் பட்டன் இருப்பதால் நமக்கு கார்களை போல அனுபவம் கிடைக்கும். லைட்டிங் வசதிகளாக இதில் LED லைட் வழங்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு வசதிகளாக அனைத்து கால சூழ்நிலைகளிலும் இந்த பைக் தாங்கி நிற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பக்க மற்றும் பின்பக்க டிஸ்க் பிரேக் கூடுதலாக ABS வசதி உள்ளது. இதில் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

இதில் கியர் வசதி இருப்பதால் நமக்கு ICE என்ஜின் உள்ள பைக்குகளை ஓட்டுவது போலவே அனுபவம் கிடைக்கும். இது இப்போது பிளிப்கார்ட்டில் விற்பனை ஆவதால் உங்கள் ஊரில் இது கிடைக்குமா? என்பதை பிளிப்கார்ட் மூலமாகவே தெரிந்துகொள்ளலாம்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் 'சமயம் தமிழ்' இணையதளத்தை பின் தொடருங்கள்
எழுத்தாளர் பற்றி
வெங்கட கிருஷ்ணன்
நான் B.Venkatakrishnan B.E (Mechanical). நான் ஆட்டோமொபைல், தொழில்நுட்பம், வைரல், சுற்றுலா சம்பந்தப்பட்ட கட்டுரைகள் எழுதி வருகிறேன். இதில் முக்கியமாக ஆட்டோமொபைல் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகம் கொண்டவன். புதிய கார்,புதிய பைக்குகள், புதிய டெக்னாலஜி போன்றவற்றின் மீது ஆர்வம் அதிகம். இப்போது Times Internet சமயம் தமிழ் இணையத்தில் ‘Digital Content Producer’ பணி செய்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி