ஆப்நகரம்

புதிய 2020 Kawasaki Z900 BS4 Special Edition பைக் விற்பனைக்கு அறிமுகம்..!

பிஎஸ்-4 வெர்ஷனுடன் கூடிய புதிய கவாஸாகி இச ட்900 பைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

Samayam Tamil 10 Feb 2020, 3:05 pm
நாடு முழுவதும் பிஎஸ்-6 வாகன விதிகள் அமலுக்கு கொண்டுவரப்படவுள்ள நிலையில், கவாஸாகி நிறுவனத்தின் புதிய இசட் 900 லிமிடேட் எடிசன் பைக் பிஎஸ்-4 வெர்ஷனில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,
Samayam Tamil 2020 கவாஸாகி இசட்900 பிஎஸ்-4 பைக் விற்பனைக்கு வந்தது
2020 கவாஸாகி இசட்900 பிஎஸ்-4 பைக் விற்பனைக்கு வந்தது


இந்தியாவில் வரும் ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 வாகன விதிகள் நடைமுறைக்கு வரவுள்ளன. இதற்கான நாட்டில் வாகன விற்பனை செய்து வரும் அனைத்து நிறுவனங்களும் புதிய விதிகளுக்கு ஏற்ப தங்களுடைய வாகனங்களை மேம்படுத்தி வருகின்றன.

மாருதி கவாஸாகி, பஜாஜ் ஆட்டோ, டிவிஎஸ், ஹீரோ, ஹோண்டா, ராயல் என்ஃபீல்டு உள்ளிட்ட நாட்டின் முதன்மையான வாகன நிறுவனங்கள், கடந்தாண்டு முதலே பிஎஸ்-6 வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வரும் பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டன.

Read More: புதிய Royal Enfield Classic 500 Tribute Black பைக் விற்பனையில் அறிமுகம்..!

இந்நிலையில், ஜப்பானைச் சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான கவாஸாகி மோட்டார் சைக்கிள்ஸ், இசட்900 பிஎஸ்-4 பைக்கின் லிமிடேட் எடிசன் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அந்நிறுவனம், இந்தியாவில் பிஎஸ்-4 வாகனங்களை விற்பதற்கு மார்ச் 31ம் தேதி வரை அனுமதியுள்ளது. அதன்படி, இந்த குறிப்பிட்ட எடிசன் பைக், மார்ச் 20ந் தேதி வரை விற்பனையில் இருக்கும் என கவாஸாகி தெரிவித்துள்ளது.

இந்த பைக்கில் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் கூடிய 948 சிசி இன்-லைன் 4 சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இது 123 பிஎச்பி பவர் மற்றும் 98.3 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும்.

Read More: புதிய பிஎம்டபுள்யூ எக்ஸ்1 ஃபேஸ்லிஃப்ட் காரின் விற்பனை தேதி அறிவிப்பு..!

புதிய கவாஸாகி இசட்900 பிஎஸ்-4 பைக்கில் எல்.இ.டி திறனில் ஒளிரும் விளக்கு அமைப்புகள் உள்ளன. மேலும், இந்த பைக்கினுடைய முகப்பு விளக்கின் பின்புறத்தில் ’எச்-2 ஹைப்பர்’ பைக்கில் இருப்பது போன்று ஸ்கூப்பு வழங்கப்பட்டுள்ளது. இது பைக்கிற்கு மிரட்டலான தோற்றத்தை வழங்குகிறது.

இதே ஸ்கூப் அமைப்பு பைக்கின் பெட்ரோல் கலன் மற்றும் ரியர் பகுதிக்கான டெயில் லைட்டுகளிலும் தொடர்கிறது. இது பைக்கிற்கு வசீகரத்தை கூட்டுகிறது. பைக்கின் மாடலை குறிக்கும் விதமாக இதனுடைய பின்பக்க விளக்குகள் இசட் ஆங்கில எழுத்து வடிவத்தில் உள்ளன.

புதிய இசட்900 பைக்கின் ட்ரெல்லிஸ் பிரேம் அமைப்பு வெளியில் தெரியும்படி டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கினுடைய எஞ்சின் இயக்கத்தை சாலையில் செல்வதற்கு ஏற்பவும், கால்நிலைக்கு தக்கவாறு மாற்றிக் கொள்ளும் விதத்தில் ஸ்போர்ட், ரோடு, ரெயின் மற்றும் ரைடர் என்கிற நான்கு விதமாக ரைடிங் மோடுகள் உள்ளன.

Read More: ஆட்டோ எக்ஸ்போவில் ஒகினவா க்ரூஸர் மேக்ஸி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்..!

இரண்டு பவர் மோடுகள், 3 அடுக்குகள் கொண்ட உராய்வு கட்டுப்பாட்டு கருவி, 4.3 அங்குலத்திலான டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், ப்ளூடூத் இணைப்பு வசதி உள்ளிட்ட சிறப்பம்சங்களும் இந்த பைக்கில் உள்ளது.

புதிய கவாஸாகி இசட்900 பிஎஸ்4 லிமிடெட் எடிசன் பைக்கிற்கு ரூ. ரூ.7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா)விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே பைக் சாதாரண மாடலிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. எனினும், அந்த மாடலைக் காட்டிலும் புதிய பிஎஸ்-4 லிமிடெட் எடிசன் பைக் ரூ. 30 ஆயிரம் கூடுதலாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனினும், கவாஸாகி நிறுவனம் பிஎஸ்-6 எஞ்சின் கொண்ட இசட்900 பைக்கை வரும் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. பிஎஸ்-4 மாடலைவிட ரூ.50,000 முதல் ரூ. 1 லட்சம் வரை பிஎஸ்-6 மாடல் விலை உயர்வு பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2020 கவாஸாகி இசட்900 பிஎஸ்-6 ஸ்பெஷல் எடிசன் பைக்- மெட்டாலிக் பிளாட் ஸ்பார்க் மற்றும் மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் மற்றும் மெட்டாலிக் கிராபிட் கிரே- மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் ஆகிய வண்ணக் கலவை தேர்வுகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.

அடுத்த செய்தி