ஆப்நகரம்

எந்த காரணமும் சொல்லாமல் ஆர்15 3.0 பைக்கின் விலையை உயர்த்திய யமஹா..!

யமஹாவின் ஆர்15 வி3.0 மோட்டார் சைக்கிளின் ஸ்டாண்டர்ட் மற்றும் டார்க்நைட் மாடல்களுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனுடைய மோட்டோஜிபி எடிசனுக்கான விலையில் எந்த மாறுதல்களும் இல்லை.

Samayam Tamil 15 Oct 2019, 11:56 am
இந்தியாவின் முன்னணி வாகன விற்பனை நிறுவனமாக திகழும் யமஹா, தன்னுடைய மிக பிரபலமான ஆர்15 வி3.0 பைக்கின் விலையை ரூ. 600 வரை உயர்த்தியுள்ளது. இதுகுறித்த காரணங்களை அறிவோம்.
Samayam Tamil யமஹா ஆர் 15 வி 3.0 பைக் விலை திடீர் உயர்வு
யமஹா ஆர் 15 வி 3.0 பைக் விலை திடீர் உயர்வு


நாட்டில் விற்பனையாகி வரும் மிகவும் சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிள்களில் முன்னணியில் இருந்து வரும் மாடல் யமஹா ஆர்15. முன்னதாக இந்த பைக் ரூ. 1,42,280 (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) விலையில் விற்பனையாகி வந்தது.

தற்போது இந்த பைக்கிற்கு ரூ. 600 விலை உயர்த்தப்பட்டுள்ளதாக யமஹா அறிவித்துள்ளது. இந்த விலையேற்றம் ஆர்.15 பைக்கின் ஸ்டான்டர்டு மற்றும் டார்க்நைட் மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும்.

எனினும், இதனுடைய மோட்டோஜிபி எடிசனுக்கான விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.15 மாடலுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால், இந்த விலை உயர்வு நடவடிக்கைக்கான காரணத்தை யமஹா நிறுவனம் இதுவரை தெரிவிக்கவில்லை. இந்த நடவடிக்கைகளால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாட்டில் விற்பனையாகும் சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிள்களில் யமஹா ஆர்1 பைக் முதன்மையான இடத்தில் உள்ளது. தற்போது விற்பனையில் உள்ள வாகனம் ஆர்.15 மோட்டார்சைக்கிளின் மூன்றாவது தலைமுறை மாடலாகும்.

அடுத்த செய்தி