ஆப்நகரம்

விரைவில் விற்பனைக்கு வரும் ஹூண்டாய் சான்ட்ரோ ஸ்போர்ட்ஸ் எடிசன்..!

சான்ட்ரோ காரின் புதிய தலைமுறை மாடலை சிறப்பிக்கும் விதமாக, ஸ்பெஷல் எடிசன் மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது ஹூண்டாய் நிறுவனம்.

Samayam Tamil 19 Oct 2019, 11:16 am
புதிய தலைமுறை ஹூண்டாய் சான்ட்ரோ கார் விற்பனைக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளதை கொண்டாடும் விதமாக புத்தம் சிறப்பு எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
Samayam Tamil ஹூண்டாய் சான்ட்ரோ காரில் சிறப்பு எடிசன் மாடல்- விரைவில்
ஹூண்டாய் சான்ட்ரோ காரில் சிறப்பு எடிசன் மாடல்- விரைவில்


இந்தியாவில் ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை அதிகரிக்க முக்கிய காரணமாக இருந்த மாடல்களில் ஒன்று சான்ட்ரோ. ஹூண்டாய் நிறுவனத்திற்கு அதிக விற்பனை திறனை பதிவு செய்து வரும் கார்களில் ஒன்றான சான்ட்ரோ, இந்திய சாலைகளை பல ஆண்டு காலமாக அலங்கரித்து வருகிறது.

அண்மையில் இதனுடைய புதிய தலைமுறை மாடல் விற்பனைக்கு வந்தது. இந்த கார் விற்பனைக்கு வந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ளதை கொண்டாடும் விதமாக, அதனுடைய ஸ்பெஷல் மாடலை ஹூண்டாய் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

விழாக்கால விற்பனையை மனதில் வைத்து இந்த கார் களமிறக்கப்படவுள்ளது. பண்டிகை கால வாடிக்கையாளர்களை கவரும் விதமான பல்வேறு சிறப்பம்சங்களும் இந்த காரில் இடம்பெறவுள்ளன.

Read More: சச்சினின் மிக விருப்பமான கார் விற்பனைக்கு வந்தது- விலை எத்தனை தெரியுமா..?

இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு சான்ட்ரோ ஸ்போர்ட்ஸ் எஸ்.இ என்று பெயரிடப்பட்டுள்ளது. தவிர, இந்த கார் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேவைகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

புதிய எடிசன் கார் போலார் வொயிட் மற்றும் அக்வா டியல் ஆகிய வண்ணத் தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும். போலார் வொயிட் நிறத்தில் ஏற்கனவே சான்ட்ரோ கார்கள் விற்பனையில் உள்ளன. புதியதாக அக்வா டியல் நிறம் அதனுடன் சேர்ந்து கொண்டுள்ளது.

இந்த காரில், கிரே நிறத்திலான வீல் கவர்கள், காரின் பின்பக்கத்தில் குரோம் அலங்கார வேலைப்பாடுகள், பாடி கிளாடிங் சட்டங்கள், கருப்பு வண்ணப்பூச்சுடன் கூடிய ரூஃப் ரெயில்கள், கருப்பு நிறத்தில் இருக்கு கதவு கைப்பிடிகள் மற்றும் சைடு மிரடுகள் உள்ளன. மேலும் சிறப்பு எடிசன் என்பதற்கான பேட்ஜுகளும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.

Read More: எம்.ஜி. ஹெக்டர் எஸ்யூவி காரை சொந்தமாக வாங்கிய இந்திய சினிமாவின் முன்னாள் கனவுக் கன்னி..!

புதிய சான்ட்ரோ ஸ்போர்ட்ஸ் எடிசன் காரின் உள்கட்டமைப்பு முழுவதும் கருப்பு வண்ணத்தில் உள்ளது. இதனுடைய வேலைபாடுகள் நீல வண்ணத்தில் காட்சியளிக்கின்றன. நாரிழைகளால் ஆன இருக்கை கவர்கள், கண்ணை கவரும் வேலைபாடுகள் போன்றவை காருக்கு புதிய சிறப்பம்சங்களை சேர்க்கும்.

இந்த காரில் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது 68 பிஎச்பி பவர் மற்றும் 99 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். மேலும், இந்த கார் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

Read More: ஆட்டம் காணும் இந்திய வாகனத்துறை- அடுத்த அடி விழுந்தது டாடாவுக்கு..!

ஹூண்டாயின் புதிய சான்ட்ரோ ஸ்போர்ட்ஸ் எடிசன் காருக்கு ரூ. 5.16 லட்சம் முதல் ரூ. 5.74 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், டெல்லி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு களமிறக்கப்படும்.

அடுத்த செய்தி