ஆப்நகரம்

SUV Cars செக்மென்டை ஆளும் டாடா நெக்சோன்! ஹூண்டாய் கிரேட்டா, மாருதி பிரீஸா கார்களை பின்னுக்கு தள்ளி முதலிடம்!

Tata நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து SUV கார்கள் விற்பனையில் நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறது. அந்த நிறுவனத்தின் Nexon கார் போட்டியாளர்களாக இருக்கக்கூடிய Hyundai Creta மற்றும் maruti Brezza ஆகிய கார்களை பின்னுக்கு தள்ளியுள்ளது. இன்னமும் காம்பாக்ட் SUV கார் செக்மென்ட்டில் ஹூண்டாய் கிரேட்டா முதல் இடம் வகிக்கிறது. இது பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

Authored byவெங்கட கிருஷ்ணன் | Samayam Tamil 11 Apr 2023, 5:08 pm
இந்தியாவில் கார்கள் விற்பனையில் SUV செக்மென்ட் என்பது மக்கள் அதிகம் விரும்பும் ஒரு செக்மென்ட். இதில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக Tata Nexon SUV முதல் இடம் வகிக்கிறது. இந்த காரின் போட்டியாளர்களாக இருக்கக்கூடிய Hyundai Creta மற்றும் Maruti Suzuki Brezza ஆகியவற்றை விட இந்த கார் முன்னிலையில் இருக்கிறது. Nexon மற்றும் Brezza இரண்டும் சப் 4 மீட்டர் SUV கார்கள் என்பதால் Creta காம்பாக்ட் SUV செக்மென்ட்டில் தொடர்ந்து நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.
Samayam Tamil tata nexon becomes indias favorite suv car in march 2023 sales detail tamil
SUV Cars செக்மென்டை ஆளும் டாடா நெக்சோன்! ஹூண்டாய் கிரேட்டா, மாருதி பிரீஸா கார்களை பின்னுக்கு தள்ளி முதலிடம்!


​1.Tata Nexon

டாடா நிறுவனம் இந்த SUV கார் விற்பனையில் கடந்த ஆண்டை விட 38.68% வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த கார் கடந்த ஆண்டு 124,130 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டது. தற்போது 2023 நிதியாண்டில் 1,72,139 யூனிட்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.


இந்த கார் இந்தியாவில் 7.80 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலையில் தொடங்கி 14.35 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலை வரை உள்ளது. இது சப் 4 மீட்டர் SUV கார் செக்மென்ட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

2.Hyundai Creta

ஹூண்டாய் நிறுவனத்தின் சிறந்த காராக இருக்கக்கூடிய கிரேட்டா கடந்த 2023 நிதியாண்டில் மொத்தமாக 1.50,372 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதே கார் கடந்த 2022 நிதியாண்டில் 1,18,092 யூனிட்களை விற்பனை செய்திருந்தது. இது 27.33% வளர்ச்சி ஆகும்.

Hyundai Creta SUV

இந்த கார் இந்தியாவில் 10.87 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) முதல் தொடங்கி 19.20 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலை வரை உள்ளது. இந்த கார் Compact SUV செக்மென்ட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

​3.Maruti Suzuki Brezza

இந்தியாவின் நம்பர் 1 கார் நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனத்தின் இந்த சப் 4 மீட்டர் SUV கார் கடந்த 2023 நிதியாண்டில் 1,45.665 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதே கார் கடந்த 2022 நிதியாண்டில் 113,751 யூனிட்களை விற்பனை செய்திருந்தது. இது 28.06% வளர்ச்சி ஆகும்.

Maruti Brezza

இந்த கார் இந்தியாவில் 8.29 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) முதல் தொடங்கி 14.14 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலை வரை உள்ளது.

Tata Nexon Safety

டாடா நெக்சோன் முன்னிலையில் இருக்க முக்கிய காரணமாக அதன் பாதுகாப்பு மதிப்பு பார்க்கப்படுகிறது. இந்த கார் ஹூண்டாய் மற்றும் மாருதி கார்களை விட அதிகப்படியான பாதுகாப்பு புள்ளிகளை Global NCAP பாதுகாப்பு சோதனையில் பெற்றுள்ளது. மேலும் மற்ற SUV கார்களை விட குறைவான காலத்தில் டெலிவரி செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் 'சமயம் தமிழ்' இணையதளத்தை பின் தொடருங்கள்

எழுத்தாளர் பற்றி
வெங்கட கிருஷ்ணன்
நான் B.Venkatakrishnan B.E (Mechanical). நான் ஆட்டோமொபைல், தொழில்நுட்பம், வைரல், சுற்றுலா சம்பந்தப்பட்ட கட்டுரைகள் எழுதி வருகிறேன். இதில் முக்கியமாக ஆட்டோமொபைல் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகம் கொண்டவன். புதிய கார்,புதிய பைக்குகள், புதிய டெக்னாலஜி போன்றவற்றின் மீது ஆர்வம் அதிகம். இப்போது Times Internet சமயம் தமிழ் இணையத்தில் ‘Digital Content Producer’ பணி செய்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி