ஆப்நகரம்

Top CNG cars 2023: சிறந்த CNG கார்கள் 2023! மைலேஜ் வேணுமா? மைலேஜ் இருக்கு!

இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக CNG வாகனங்களுக்கு மக்கள் மாறுவது அதிகரித்துள்ளது. CNG வாகனங்கள் அதிகம் மைலேஜ் தரக்கூடியவை என்பதால் மக்களும் அவற்றை மாற்று வாகனங்களாக பார்க்கிறார்கள். அப்படி நீங்களும் CNG கார்களுக்கு மாற நினைத்தால் உங்களுக்கு பட்ஜெட் விலையில் அதிக மைலேஜ் கொண்ட கார்களின் விவரங்கள் தேவை. இவை அனைத்தும் கொண்ட கார்களின் பட்டியலை இந்த பதிவில் முழுமையாக காணலாம்.

Authored byவெங்கட கிருஷ்ணன் | Samayam Tamil 20 Feb 2023, 11:41 am

கடந்த ஆண்டு உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே தொடங்கிய போர் காரணமாக உலகம் முழுவதும் பெரிய அளவு பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டன. உலகிலேயே அதிகப்படியான எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவில் பாதிப்புகள் கண்கூடாகவே தெரிகின்றன.

தினசரி மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததால் விலை வாசியும் உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக மக்கள் மாற்று எரிபொருள் கொண்ட வாகனங்களை தேடி வாங்குகிறார்கள். அப்படி மாற்று வாகனங்களாக இருப்பது எலக்ட்ரிக் மற்றும் CNG வகை வாகனங்கள் ஆகும்.

எலக்ட்ரிக் வசதி கார்களிலும், பைக்குகளில் கிடைக்கிறது. ஆனால் CNG பொறுத்தவரை கார்களில் மட்டுமே உள்ளது. இவை குறைவான பவர் கொண்டிருந்தாலும் மைலேஜ் நிறைவாக தரக்கூடியவை. அதுமட்டுமல்லாமல் CNG தீர்ந்துபோனால் பெட்ரோல் கொண்டு இதை இயக்கமுடியும். அப்படி இந்தியாவில் பட்ஜெட் விலையில் நமக்கு கிடைக்கும் சிறந்த CNG ரக கார்கள் பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

Samayam Tamil top cng cars in india 2023 tata maruti suzuki hyundai cars specs price details tamil
Top CNG cars 2023: சிறந்த CNG கார்கள் 2023! மைலேஜ் வேணுமா? மைலேஜ் இருக்கு!


Maruti Suzuki Swift CNG

இந்த கார் விலை 7.8 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) முதல் தொடங்குகிறது. இது CNG ஹாட்ச்பேக் செக்மென்ட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஒரு 1.2 லிட்டர் 4 சிலிண்டர் டூயல் ஜெட் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இதன் பவர் 89 PS மற்றும் டார்க் 113 NM ஆகும். இந்த கார் 39.90KM/Kg மைலேஜ் தருகிறது. இந்த கார் VXi மற்றும் ZXi என இரு வேரியண்ட்களில் மட்டும் கிடைக்கிறது.

Hyundai Grand i10 Nios

ஹூண்டாய் நிறுவனத்தின் மிகவும் விலை குறைந்த ஹாட்ச் பேக் காரான ஐ10 CNG விலை 7.70 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோவ்ரூம்) முதல் தொடங்குகிறது. இதில் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் என்ஜின் உள்ளது. இதன் பவர் 83PS மற்றும் டார்க் 113NM ஆகும். இதன் CNG மாடல் பவர் 68BHP மற்றும் டார்க் 95NM ஆகும்.


இதில் 5 ஸ்பீட் கியர் பாக்ஸ் வசதி இருக்கிறது. இந்த கார் Magna, Asta, Sportz என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் வேரியண்ட் Asta 8.45 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலையில் கிடைக்கிறது.

Tata Tiago

இந்த டாடா CNG காரின் விலை 6.30 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோவ்ரூம்) ஆகும். இந்த ஹாட்ச்பேக் கார் ஒரு 1.2 லிட்டர் 3 சிலிண்டர் Revotron பெட்ரோல் என்ஜின் கொண்டுள்ளது. இதன் பவர் 86PS மற்றும் டார்க் 113NM ஆகும். இதன் CNG வேரியண்ட் 73PS பவர் மற்றும் 95 NM டார்க் கொண்டுள்ளது.


இதன் மைலேஜ் 26.40KM/Kg ஆகும். இதில் 5 ஸ்பீட் கியர் பாக்ஸ் வாட்ஸி உள்ளது. இதில் நான்கு வேரியண்ட்கள் உள்ளன. இதன் டாப் வேரியண்ட் விலை 7.82 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) ஆகும்.

Hyundai Aura

ஹூண்டாய் நிறுவனத்தின் இன்னொரு காம்பாக்ட் செடான் காரான Aura கார் ஐ10 காரின் அதே என்ஜின் கொண்டுள்ளது. இதிலும் 68BHP பவர் மற்றும் 95NM டார்க் உள்ளது. இந்த கார் இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் S வேரியண்ட் 6.09 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) முதல் தொடங்கி SX வேரியண்ட் 8.57 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) வரை உள்ளது.

Maruti Suzuki Celerio

மாருதி சுசூகி நிறுவனத்தின் காம்பாக்ட் காரான செலெரியோ ஒரே ஒரு CNG வேரியண்ட் கொண்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை 6.71 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோவ்ரூம்) ஆகும். இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இதன் பவர் 56BHP மற்றும் மைலேஜ் 35.6 KM/Kg ஆகும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் 'சமயம் தமிழ்' இணையதளத்தை பின் தொடருங்கள்

எழுத்தாளர் பற்றி
வெங்கட கிருஷ்ணன்
நான் B.Venkatakrishnan B.E (Mechanical). நான் ஆட்டோமொபைல், தொழில்நுட்பம், வைரல், சுற்றுலா சம்பந்தப்பட்ட கட்டுரைகள் எழுதி வருகிறேன். இதில் முக்கியமாக ஆட்டோமொபைல் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகம் கொண்டவன். புதிய கார்,புதிய பைக்குகள், புதிய டெக்னாலஜி போன்றவற்றின் மீது ஆர்வம் அதிகம். இப்போது Times Internet சமயம் தமிழ் இணையத்தில் ‘Digital Content Producer’ பணி செய்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி