ஆப்நகரம்

பட்டைய கிளப்ப வருகிறது பஜாஜ் பல்சரின் பிளாக் பேக் எடிஷன்!

இந்தியாவின் மிகப் பிரபலமான பைக் மாடலான பஜாஜ் பல்சர் மாடல் ஒரு கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றதைக் கொண்டாடும் விதமாக பல்சரின் பிளாக் பேக் நிற மாடல்கள் அறிமுகப்படுத்தி உள்ளது

TNN 13 Dec 2017, 4:19 pm
இந்தியாவின் மிகப் பிரபலமான பைக் மாடலான பஜாஜ் பல்சர் மாடல் ஒரு கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றதைக் கொண்டாடும் விதமாக பல்சரின் பிளாக் பேக் நிற மாடல்கள் அறிமுகப்படுத்தி உள்ளது.
Samayam Tamil bajaj company is introducing bajaj pulsar black pack edition to celebrate the 1 crore sale of pulsar bikes
பட்டைய கிளப்ப வருகிறது பஜாஜ் பல்சரின் பிளாக் பேக் எடிஷன்!


புதுடெல்லி: பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பிராண்டு இந்தியாவில் மிகவும் பிரபலமான பைக் மாடல்களாகும். பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் மட்டும் ஒரு கோடி பல்சர் மாடல் பைக்குகள் விற்பனை செய்து சாதனைப் படைத்துள்ளது.

இந்தச் சாதனையைச் சிறப்பிக்கும் வகையில் 2018 பஜாஜ் பல்சர் 15, 180 மற்றும் 220F மாடல்களின் பிளாக் பேக் நிற பதிப்பு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய மாடல் பைக்குகளைக் காட்டிலும் இந்த மாடல் பைக்குகளில் கிராபிக்ஸ் சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 பஜாஜ் பல்சர் 115, 180 மற்றும் 220F பிளாக் பேக் எடிஷனில் பிரீமியம் பிளாக் நிற பெயி்ன்ட் செய்யப்பட்டு கிரே ஹைலைட் மற்றும் வெள்ளை நிற அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது.

பஜாஜ் நிறுவனத்தின் முதல் ஃபுல்லி ஃபேர்டு மோட்டார்சைக்கிளான பஜாஜ் பல்சர் 16 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி