ஆப்நகரம்

ரூ. 18.50 லட்சம் ஆரம்ப விலையில் BMW S1000RR சூப்பர்பைக் விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவில் பிஎம்டபுள்யூ மோட்டார்டு நிறுவனம் ரூ. 18.50 லட்சம் ஆரம்ப விலையில் 2019 பிஎம்டபுள்யூ எஸ் 1000 ஆர்.ஆர் சூப்பர்பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Jun 2019, 8:09 pm
இந்திய இருசக்கர வாகன ஆர்வலர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த 2019 பிஎம்டபுள்யூ எஸ் 1000 ஆர்.ஆர் சூப்பர்பைக் இன்று விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்த பைக், இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த மாடல் என்ற பெயர் பெற்றுள்ளது.
Samayam Tamil 2019 பிஎம்டபுள்யூ எஸ் 1000 ஆர்.ஆர் பைக் விற்பனைக்கு அறிமுகம்
2019 பிஎம்டபுள்யூ எஸ் 1000 ஆர்.ஆர் பைக் விற்பனைக்கு அறிமுகம்


இதில் 999சிசி இழுவைத் திறன் கொண்ட எஞ்சின் உள்ளது. இது அதிகப்பட்சமாக 207 பிஎச்பி பவர் மற்றும் 113 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். மேலும் இந்த பைக்கில் வேரியண்டுக்கு ஏற்றவாறு ஸ்ளிப்பர் கிளட்ச்சுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் பை-டாரக்‌ஷ்னல் குவிக் ஷிஃப்டர் உள்ளது.

2019 பிஎம்டபுள்யூ எஸ் 1000 ஆர்.ஆர் சூப்பர்பைக்கில் மூன்றுவித வேரியண்ட் உள்ளது. 2018 மாடலை விட இந்த பைக் 8 பிஎச்பி பவரை கூடுதலாக வழங்கவல்லது. குறைந்த மற்றும் நடுத்தரமான வேகத்தில் சிறப்பான முறையில் டார்க் வழங்குகின்ற இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள ஷிஃப்ட்கேம் டெக்னாலாஜி வழங்கப்பட்டு 6 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 197 கிலோ எடை கொண்ட இந்த பைக்கில் ஏபிஎஸ் உடன் கூடிய டைனமிக் டிராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளது. இந்த பைக்கின் ஸ்டாண்டர்டு மாடலில் இடம்பெற்றுள்ள ரெயின், ரோடு, டைனமிக் மற்றும் ரேஸ் மோடுகள் உள்ளன. ஸ்போர்ட் மற்றும் எம் பேக் மாடலில் ரேஸ் ப்ரோ 1, ரேஸ் ப்ரோ 2, ரேஸ் ப்ரோ 3 போன்ற மோடுகள் உள்ளன.

பிஎம்டபுள்யூ எஸ் 1000 ஆர்.ஆர் ஸ்டாண்டர்டு- ரூ. 18.50 லட்சம்

பிஎம்டபுள்யூ எஸ் 1000 ஆர்.ஆர் ப்ரோ- ரூ. 20.95 லட்சம்

பிஎம்டபுள்யூ எஸ் 1000 ஆர்.ஆர் ப்ரோ எம். ஸ்போர்ட்- ரூ. 22.95 லட்சம்

*விலை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி