ஆப்நகரம்

நவம்பர் மாதத்தில் நாட்டின் பயணிகள் வாகன விற்பனை உயர்வு

நவம்பர் மாத முடிவில், உள்நாட்டில் நடைபெற்ற பயணிகள் வாகன விற்பனை 1.82% உயர்வுடன், 2,40,979 ஆக உள்ளது.

TNN 8 Dec 2016, 3:23 pm
நவம்பர் மாத முடிவில், உள்நாட்டில் நடைபெற்ற பயணிகள் வாகன விற்பனை 1.82% உயர்வுடன், 2,40,979 ஆக உள்ளது.
Samayam Tamil car sales edge up in november passenger vehicles up 1 82
நவம்பர் மாதத்தில் நாட்டின் பயணிகள் வாகன விற்பனை உயர்வு


சியாம் எனப்படும் இந்திய வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 2015ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் நாட்டின் பயணிகள் வாகன விற்பனை 2,36,664 என்றிருந்தது. தற்போது இதுவே 1.82% உயர்வடைந்து, 2,40,979 ஆக உள்ளது.

இதேபோன்று, வர்த்தக வாகனங்களின் விற்பனை 11.58% குறைந்து, 45,773 எனவும் உள்ளது.

மதிப்பீட்டு காலத்தில், ஒட்டுமொத்த இருசக்கர வாகன விற்பனை 5.85% சரிவுடன் 12,43,251 ஆகவும் உள்ளது. இதில், மோட்டார் சைக்கிள் விற்பனை மட்டும் 10% சரிவடைந்து, 7,78,11 ஆக உள்ளது.

நவம்பர் மாத முடிவில், இருசக்கர வாகனம், கார்கள் என பல்வேறு தரப்பிலும் மொத்தம் 15,63,665 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், இது 5.48% குறைவு எனவும் வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

English Summary:

Domestic passenger vehicle sales rose 1.82 per cent to 2,40,979 units in November, from 2,36,664 in the same month last year.

அடுத்த செய்தி