ஆப்நகரம்

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரும் சி.எஃப் மோட்டோ பைக்குகள்..!!

சீனாவைச் சேர்ந்த சி.எஃப் மோட்டோ நிறுவனம், இந்தியாவில் 300 என்.கே, 650 என்.கே, 650 எம்.டி மற்றும் 650 ஜி.டி நிறுவனம் வரும் ஜூலை 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.

Samayam Tamil 28 Jun 2019, 9:03 pm
இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்த ஏஎம்டபுள்யூ மோட்டார் சைக்கிள் நிறுவனத்துடன், சி.எஃப் மோட்டோ நிறுவனம் கைக்கோர்த்துள்ளது. completely Knocked Down முறையில் பைக்குகளின் உதிரிபாகங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து, பெங்களூரு ஏஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆலையில் பைக் தயாரிக்கப்படுகிறது.
Samayam Tamil இந்தியாவில் விற்பனைக்கு வரும் நான்கு சிஎஃப் மோட்டார் பைக்குகள்
இந்தியாவில் விற்பனைக்கு வரும் நான்கு சிஎஃப் மோட்டார் பைக்குகள்


இதில் தொடக்க நிலை மாடலாக சிஎஃப் மோட்டோ 300 என்.கே பைக் விற்பனைக்கு வருகிறது. இதில் 250 சிசி எஞ்சின் உள்ளது, இதன்மூலம் 34 பிஎச்பி பவர் மற்றும் 20.5 என்.எம் டார்க் திறன் வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

300 என்.கே பைக்கில் டி.எஃப்.டி டிஸ்பிளே அம்சம் உள்ளது. இதன்மூலம் கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற முடியும். மேலும் 650 என்.கே, 650 எம்.டி மற்றும் 650 ஜி.டி பைக்குகளில் 649 சிசி எஞ்சின் உள்ளது.

இதன்மூலம் 61 பிஎச்பி பவர் மற்றும் 56 என்.எம் டார்க் திறன் கிடைக்கும். இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. மேலும் இந்த மாடல்களில் டிஎஃப்டி டிஸ்பிளே அம்சம் மூலம் பல்வேறு கனெக்ட்டிவிட்ட வசதிகளை பெறலாம்.

முன்னதாக வெளிவரும் 300 என்.கே பைக் ரூ. 2 லட்சம் விலையில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக விற்பனைக்கு வரும் மூன்று மாடல்களும் ரூ. 3.50 லட்சத்தில் விற்பனைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி